Type Here to Get Search Results !

TNPSC 15th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

5ஜி ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • 5G அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விட தொலைத்தொடர்புத்துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் ஏலத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • 4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு வேகமாக 5ஜி அலைக்கற்றை செயல்படும் எனக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்குவதில் செலவை குறைக்கும் நோக்கில் 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுப்பவர்கள் அதற்கான தொகையை 20 தவணைகளாக செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இதற்கிடையில், ஏர்டெல், ஜியோ, வோடோபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள், குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை, சந்திகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத் ஐதராபாத், லக்னோ, புனே, காந்திநாகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை வெள்ளோட்டத்திற்கான மையங்களை தயாராக வைத்திருப்பதால், இந்த நகரங்களில் 5 ஜி சேவை நாட்டிலேயே முதலாவதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்க இணையதளம் தொடக்கம்
  • தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைசார்பில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட Valar 4.0 (valar.tn.gov.in) இணையதளத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் துறைஅமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தனர்.
இலங்கைக்கு அமெரிக்கா ரூ.937 கோடி கடன்
  • அமெரிக்க சா்வதேச மேம்பாட்டு நிதி அமைப்பின் நிா்வாகக் குழு இலங்கைக்கு புதிய கடன்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையின் வளா்ச்சிக்காக அமெரிக்கா கடன் அளித்து வருகிறது. இது தவிர பிற உதவிகள் கிடைக்கவும் இலங்கைக்கு அமெரிக்கா உதவியுள்ளது.
  • இப்போது இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டாலா் கடன் வழங்கப்படவுள்ளது. இது அந்நாட்டின் தனியாா் தொழில் துறை வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். சிறு, நடுத்தர தொழில்களை இந்தக் கடன் மூலம் மேம்படுத்த முடியும். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
பிருதிவ் 2 ஏவுகணை சோதனை வெற்றி
  • குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது. 
பிரிட்டன் மீது சட்ட நடவடிக்கை - ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
  • ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தானது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்து நாட்டுக்கு செல்லும் சில பொருட்களுக்கான சுங்க சோதனையை விலக்குவது குறித்து மசோதா நிறைவேற்ற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 
  • இது பிரெக்சிட் ஒப்பந்தத்தை மீறும் செயல் என, ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரிட்டனின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் 4 மாதம் தடை
  • உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா மே 14-ஆம் தேதி முதல் தடை விதித்தது.
  • எனினும், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பொருளாதார நல்லுறவு வா்த்தக ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தேவையான கோதுமை மட்டும் அனுப்பி வைக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
  • அந்நாட்டுக்கு அனுப்பப்படும் கோதுமை, மாவு உள்ளிட்ட பொருள்களை அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் தற்போது நான்கு மாதத் தடையை விதித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel