Type Here to Get Search Results !

TNPSC 28th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை

 • ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, செனகல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
 • நாட்டில் ஜி7 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் வெளியிட்டன. 
 • பருவநிலை மாறுபாடு, கரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச சவால்களுக்கு ஒன்றிணைந்து தீர்வுகாண வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும். நேர்மையாக தேர்தல் நடத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.
 • பருவநிலை மாறுபாட்டைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பஞ்சத்தைத் தடுக்க, உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எரிசக்தி பற்றாக்குறையைப் போக்க சீரான விநியோக சங்கிலியை உறுதிசெய்ய வேண்டும்.
 • கரோனா தொற்றைச் சமாளிக்க, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஊழல், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க வேண்டும். சர்வதேச அளவில் சமச்சீரான வர்த்தகத்தை உறுதி செய்ய வேண்டும்.
 • இணைய வழி தாக்குதல்களை முறியடிக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். மனித உரிமையாளர்கள், ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சமூக ஆர்வலர்களைப் பாதுகாக்க வேண்டும்.
 • அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் அதிபருடன்பிரதமர் மோடி பேச்சு

 • ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக, 2004 முதல் இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நயான், கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். இதையடுத்து, அவரது சகோதரர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், புதிய அதிபராக பதவியேற்றார்.
 • இந்நிலையில், 'ஜி௭' மாநாட்டில் பங்கேற்க, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடி, நேற்று காலை அங்கிருந்து கிளம்பினார். 
 • ஷேக் காலிபா பின் சயித் அல் நயான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஐக்கிய அரசு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். 
 • அபுதாபி விமான நிலையத்துக்கு தன் குடும்பத்தினருடன் நேரில் வந்திருந்த அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார். 
 • பின், முன்னாள் அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, எமிரேட்ஸ் அதிபருடன் இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு ஜூலை 1 முதல் தடை

 • சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை ஜூலை 1, 2022 முதல் தடை செய்யப்படும். 
 • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது. பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதணிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கண்ணாடிகள், பிளாஸ்டிக் அல்லது பிவிசி 100 மைக்ரானுக்கு குறைவான பேனர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ், போர்க்ஸ், கத்திகள், ஸ்ட்ராக்கள், கட்லரி மற்றும் இனிப்புப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளில் சுற்றப்படும் பிளாஸ்டிக் பிலிம்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களாகும். 
ஜிஎஸ்டி கவுன்சில் 47வது கூட்டம்
 • ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2021, டிசம்பர் 31ம் தேதி புதுடெல்லியில் நடந்தது. பின்னர் 6 மாத இடைவெளியில் அடுத்த கூட்டம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பல மாநில அமைச்சர்கள் வருவதால், பாதுகாப்பு காரணமாக சண்டிகருக்கு கூட்டம் மாற்றப்பட்டது. 
 • அதன்படி ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் தொடங்கியது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்றைய இந்திய கல்வி – 2022 என்ற மாநாட்டில் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்
 • இன்றைய இந்திய கல்வி – 2022  என்ற மாநாட்டில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார்.  
 • அப்போது பேசிய அவர், தரமான, குறைந்த செலவில் கல்வியை அளிப்பதற்கு புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.  
 • தேசிய கல்விக்கொள்கை தரமான கல்வியையும் வழங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு  பள்ளிகள் மற்றும்  உயர் கல்வி நிறுவனங்களில் திறன் கல்வியையும். ஒருங்கிணைக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருவதாக   திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது
 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட  எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது. 
 • இதற்கான நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். 
 • தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு  ஆகிய துறைகளில் சுயசார்பை அடைந்ததை இது எடுத்துக்காட்டுகிறது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. 
 • இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் படிப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள்  போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel