Type Here to Get Search Results !

நகர்ப்புர மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம் / URBAN MEDICAL CENTER SCHEMES

 

TAMIL
  • நான்காவதாக அறிவிக்கக்கூடிய திட்டமானது நகர்ப்புர மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம். 
  • கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல், நகர்ப்புரங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் அமைய இருக்கின்றன. 
  • நகர்ப்புர மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. 
  • இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புர மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். 
  • இந்த 708 புதிய நகர்ப்புர மருத்துவ நிலையங்களிலும், காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இரு வேளைகளிலும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும்.
  • இந்த மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 
  • இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புர மருத்துவ நிலையங்களிலும் காலையும் மாலையும் ஏழை எளியோருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து, 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும்.
ENGLISH
  • The fourth project that can be announced is the plan to set up urban medical centers.
  • These clinics are located in urban areas as well as primary health centers and ancillary health centers in rural areas.
  • Crowds at hospitals are increasing as urban people flock to the Government General Hospital.
  • The project aims to change this situation and provide integrated, quality medical services closer to people's locations.
  • In the first phase, 708 urban medical centers will be set up in 21 corporations and 63 municipalities, including the Metropolitan Corporation of Chennai. These medical centers will have their own buildings at a cost of 180 crore and 45 lakh rupees.
  • Outpatient services will be available at these 708 new urban clinics, both from 8am to 11pm and from 4pm to 8pm.
  • These centers will be staffed by a physician, a nurse, a pharmacist and an assistant.
  • Through this project, Tamil Nadu will achieve the goal of well-being for all by 2030 by ensuring free medical services to the poor in the morning and evening in all urban medical centers in Tamil Nadu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel