Type Here to Get Search Results !

TNPSC 4th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு
  • ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அவசர நிலையாக ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கூடியது. 
  • 2 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிலையில் அக்கூட்டத்தின் முடிவை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
  • பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிடவும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். 
  • பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. 
  • பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்கும் நோக்கில் ரெப்போ விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2வது நார்டிக் உச்சி மாநாட்டில் 5 நாட்டு பிரதமர்களுடன் மோடி சந்திப்பு
  • ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக கடந்த 2ம் தேதி புறப்பட்ட பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து பேசினார். 
  • 2வது நாள் பயணமாக டென்மார்க் சென்றடைந்தார். அங்கு கோபன்ஹேகன் விமானநிலையத்தில் அவரை அந்நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். 
  • இருநாட்டு தலைவர்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் டென்மார்கின் முதலீடு குறித்து விவாதித்தனர். அதைத்தொடர்ந்து அந்நாட்டின் ராணி 2ம் மார்கிரெத் அளித்த இரவு விருந்தில் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு அரசின் பாரம்பரிய முறைப்படியான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து, டென்மார்க்கில் 2ம் நாளான நேற்று 2வது நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 
  • இதில், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய 5 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர். நார்டிக் நாடுகள் நிலைத்தன்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்தியாவின் முக்கியமான நட்பு நாடுகளாக உள்ளன. 
  • மாநாட்டிற்கு முன்னதாக, நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சன், ஐஸ்லாந்து பிரதமர் காத்ரீன் ஜாகோப்ஸ்டோட்டிர், டென்மார்க் பிரதமர் பிரடெரிக்சன் மற்றும் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • இதில் புதிய கண்டுபிடிப்புகள், தகவல் தொழில்நுட்ப துறை முதலீடுக்கான ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 
மனித ஆய்வு ரோவர் வடிவமைப்பு நாசா நடத்திய போட்டியில் தமிழக மாணவ குழு வெற்றி 
  • அமெரிக்க விண்வெளி மையமான நாசா நடத்திய 'நாசா 2022 மனித ஆய்வு ரோவர்' போட்டியில், உலகளவில் இருந்து 58 கல்லூரிகள், 33 உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 91 அணிகள் பங்கேற்றன.
  • இந்த போட்டியில், சூரிய மண்டலத்தில் உள்ள பாறை நிலப்பரப்பு போன்ற செயற்கை தளத்தில் மனிதனால் இயங்கும் ரோவரை வடிவமைத்து சோதனை செய்ய வேண்டும். 
  • அதில், மாதிரிகளை எடுப்பது, ஸ்பெக்ட்ரோகிராபிக் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த அணிகள் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
  • இந்த போட்டியில் பள்ளிகள் அளவிலான விருதுக்கு பஞ்சாப்பை சேர்ந்த டீசன்ட் சில்ட்ரன் மாடல் பிரசிடென்சி உயர்நிலைப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. 
  • அதேபோல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பிரிவில் தமிழ்நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (விஐடி) குழு சமூக ஊடக பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 29ம் தேதி காணொலி மூலம் நடந்த நாசா விருது வழங்கும் விழாவின்போது இது அறிவிக்கப்பட்டது.
மாநகரப் பேருந்துகள் வருகையை அறிய செயலி
  • மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திட ஏதுவாக உருவாக்கப்பட்ட 'சென்னை பஸ்' செயலியை சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிமுகம் செய்தாா்.
  • சென்னை பஸ் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம், சென்னை நகரத்துக்கு புதிதாக வருகை தரும் மக்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அங்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 
  • பயணிகள் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியைத் தங்களுக்கு தெரிந்தவா்களுக்கு உடனே தெரிவித்திட எஸ்ஓஎஸ் பொத்தான் உள்ளிட்டவை சென்னை பஸ் செயலியில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி இயக்குநா் குழுவில் அரவிந்த் கிருஷ்ணா
  • அமெரிக்காவைச் சோந்த பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-மின் தலைமைச் செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா உள்ளாா். 
  • 60 வயதாகும் அவா் ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் 'பி' பிரிவு இயக்குநராகத் தோவு செய்யப்பட்டுள்ளாா். 2023 டிசம்பா் 31-ஆம் ேதி வரை அவா் இந்தப் பொறுப்பில் இருப்பாா்.
  • ஆந்திர மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட அரவிந்த் கிருஷ்ணா, பள்ளிப் படிப்பை தமிழ்நாட்டின் குன்னூரில் மேற்கொண்டாா். தொடா்ந்து கான்பூா் ஐஐடி-யில் படித்தாா். 
  • பின்னா் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். 1990-ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் இணைந்த அவா் அங்கு பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா். 
  • கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானாா். அரவிந்த் கிருஷ்ணாவின் தந்தை இந்திய ராணுவத்தில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றியவா்.
கேன்ஸ் திரைப்பட சந்தையில் முதல் கவுரவத்திற்குரிய நாடாக இந்தியா தேர்வு
  • பிரான்சில் நடைபெறவுள்ள 75-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் இடையே நடைபெறும் மார்சே டு பிலிம் எனப்படும் திரைப்பட சந்தையில், அதிகாரபூர்வ ‘கவுரவத்திற்குரிய நாடு’ அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். 
  • இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக திரு ஆர் மாதவன் தயாரித்த திரைப்படமான “ராக்கெட்ரி” கேன்ஸ் திரைப்படவிழாவில் இம்முறை இந்தியாவின் சார்பில், இடம் பெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel