Type Here to Get Search Results !

TNPSC 22nd MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ப்ரீமியர் லீக் தங்கக் காலணி விருதை வென்ற முதல் ஆசிய வீரர்

  • 29 வயதான Son Heung-min, Tottenham Hotspur கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடந்த 2015 முதல் அந்த அணியில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 231 போட்டிகளில் விளையாடி, 93 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார். 
  • இதில் நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் மட்டுமே அவர் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். மறுபக்கம் எகிப்து வீரர் முகமது சாலாவும் நடப்பு சீசனில் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். அதனால் இருவருக்கும் தங்கக் காலணி விருது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறை. தென் கொரிய அணிகக்க 98 போட்டிகளில் விளையாடி, 31 கோல்களை பதிவு செய்துள்ளார் Son Heung-min. 

மாநிலத்தின் நீர்வளஆதாரங்களை கண்டறிய தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் - ரூ.25 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு

  • தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப விளைநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் சராசரி மழை 960 மி.மீ ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை மூலம் சராசரி 439 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட்டர் மழை கிடக்கிறது.
  • இதற்காக, மேற்பரப்பு நீரின் தரவு சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்படடுள்ளது. அதன்படி, மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க, 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படுகிறது. 
  • தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பில் இந்த மழை மானிகள், மாநிலம் முழுவதும் 1,166 பிர்காக்களில் 1,000 பிர்காக்களில் ஏற்படுத்தப்படுகிறது. 

ப்ரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது மான்செஸ்டர் சிட்டி

  • மொத்தம் 20 அணிகள் பங்கேற்று இந்த தொடரில் விளையாடின. ஒவ்வொரு அணியும் தொடரில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 38 போட்டிகள். 
  • அதில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும். இதுவரையில் இந்த தொடரை மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிகபட்சமாக 13 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணி ஆறு முறை பட்டம் வென்றுள்ளது.
  • 2011-12, 2013-14, 2017-18, 2018-19, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய சீசன்களை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. நடப்பு சீசனில் 38 போட்டிகளில் விளையாடி 29 வெற்றியை பதிவு செய்துள்ளது மான்செஸ்டர் சிட்டி. 6 போட்டிகள் சமனிலும், 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மொத்தம் 93 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
  • முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரர் Son Heung-min தலா 23 கோல்களை பதிவு செய்துள்ளனர். நடப்பு சீசனில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களான இவர்கள் இருவருக்கும் தங்க காலணியை பகிர்ந்து கொண்டனர். கோல்கீப்பர்கள் Alisson மற்றும் Ederson, கோல்டன் கிளவ் வழங்கப்பட்டது.

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

  • தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவுகான் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, அட்ரியன் கோன்டியர், ஜீன் பிலிப்போல்ச், கென்டின் பரேர் ஆகியோரை கொண்ட பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக அமைந்த இந்த மோதலில் இந்திய அணி 232-230 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 33 பதக்கங்கள் குவித்தது இந்தியா சாதனை

  • ஜெர்மனியில் உள்ள சுஹ்லில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பை கடந்த மே 9ம் தேதி தொடங்கப்பட்டது.
  • இந்திய அணியின் ஏஸ் ஷ¨ட்டர்களான மனு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் தலைமை தாங்கினர். 
  • இந்திய அணியில் மொத்தம் 51 வீரர்களைக் கொண்ட துப்பாக்கிடும் அணியில் அனிஷ் பன்வாலா, நாம்யா கபூர், விவான் கபூர், உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
  • இந்நிலையில் இந்திய நாட்டின் சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மொத்தம் 33 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். அவற்றில் 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel