5ஜி சோதனை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது:
- இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு முதல் 5 இடங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது.
- இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணிகளை தொடங்கி விட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
- இந்திய கடற்படையை வலுப்படுத்த பி-15பி மற்றும் பி17ஏ வகையை சேர்ந்த போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பி-15பி வகையை சேர்ந்த ஐஎன்எஸ் சூரத், பி17ஏ வகையை சேர்ந்த ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை மும்பை எம்டிஎல் கப்பல் கட்டுமான தளத்தில் வடிமைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- மும்பையில் நடைபெற்ற விழாவில் இரு போர்க்கப்பல்களையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படையிடம் ஒப்படைத்தார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்க கோரும் தீர்மானம் தோல்வி
- புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்ற பின், இலங்கை பார்லிமென்ட் நேற்று முதல்முறையாக கூடியது. அப்போது, பார்லி., அலுவல்களை ரத்து செய்துவிட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்க கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு, தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
- இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், பதவி நீக்க தீர்மானம் மீதான விவாதம் நடத்துவதற்கு எதிராக 119 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். தீர்மானத்துக்கு ஆதர வாக 68 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து தீர்மானம் தோல்வியடைந்தது.
- இந்நிலையில், இலங்கை பார்லிமென்ட் துணை சபாநாயகருக்கு நேற்று நடந்த ஓட்டெடுப்பில், இலங்கை பொதுஜன பெருமுன கட்சியின் அஜித் ராஜபக்சே வெற்றி பெற்றார்.
ஜமைக்காவில் அம்பேத்கர் சாலை - ஜனாதிபதி ராம்நாத் திறந்து வைத்தார்
- ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- மேலும், அந்நாட்டில் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ள சாலையை அவர் திறந்து வைத்தார். ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை கோவிந்த் பெற்றுள்ளார்.
மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு
- கடந்த ஏப்ரலில், மொத்தவிலை பணவீக்கம், 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய மாதமான மார்ச்சில் 14.55 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 10.74 சதவீதமாகவும் இருந்தது.
- இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு அடிப்படை உலோகங்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவு தயாரிப்புகள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்தது காரணமாக அமைந்தது.
- கடந்த 13 மாதங்களாக, மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் தலைவராக எஸ்.எஸ். முந்த்ரா நியமனம்
- பொது நல இயக்குநரான எஸ்.எஸ். முந்த்ராவை மும்பை பங்குச் சந்தையின் தலைவராக நியமிப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு அனுமதி வழங்கியுள்ளது.
- இதையடுத்து, நீதிபதி விக்ரமஜித் சென்னுக்குப் பதிலாக முந்த்ரா பிஎஸ்இ தலைவா் பொறுப்பை ஏற்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த முந்த்ரா மூன்று ஆண்டு பணிக்குப் பிறகு கடந்த 2017 ஜூலையில் ஓய்வு பெற்றாா். அதற்கு முன்பாக, பேங்க் ஆப் பரோடாவின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பணியாற்றியவா்.
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் அதிநவீன அமெரிக்க ஏவுகணை சோதனை வெற்றி
- கடந்த மே 11ம் தேதி அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடற்கரை அருகே 'ஏ.ஜி.எம் 183-ஏ' என்கிற ஒலி அலைகளைவிட வேகமாக பாயக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வான்வழி சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
- இதனால் உலகின் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை அமெரிக்காவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒலி அலைகளைவிட ஐந்து மடங்கு வேகத்தில் சீறிப்பாய்ந்த ஹைபர்சோனிக் ஏவுகணை துல்லியமாக கடல் இலக்கை அடைந்ததாக லெப்டினன்ட் மைக்கேல் தகவல் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்
- இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
- அந்த மசோதா மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசர சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- மதமாற்ற தடை சட்டமசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.