ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டின் அதிபர் விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
- நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஷேக் கலீஃபா வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மூத்த மகன் ஆவார்.
- 13.05.2022 (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
- 2008 நிதி நெருக்கடியின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை உலகளாவிய முக்கியத்துவத்திற்கு கொண்டு வர உதவியதற்காகவும், கொந்தளிப்பான காலங்களில் நாட்டை வழிநடத்தியதற்காகவும் ஐக்கிய அரபு அமிரகத்தின் அரசர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் பெருமளவில் பாராட்டப்படுகிறார்.
'ககன்யான்' திட்டம் பரிசோதனை வெற்றி
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில், இதற்கு பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் பூஸ்டர் பரிசோதிக்கப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவு தளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படும் பூஸ்டர் சோதிக்கப்பட்டது.
- இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலருமான சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அறிவியல் வரலாற்றில் மைல் கல் நிலவு மண்ணில் செடி முளைத்தது - நாசா விஞ்ஞானிகள் சாதனை
- நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கலம் தனது 11, 12 மற்றும் 17வது விண்வெளி பயணத்தின் போது, நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பிய மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்க்க அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
- இந்த முயற்சியில் நாசா விண்வெளி மையமும் இணைந்தது. அப்பல்லோ விண்கலத்தின் 3 பயணங்களின் போதும் நிலவில் இருந்து மொத்தம் 12 கிராம் மண் மட்டுமே எடுத்து வரப்பட்டிருந்தது.
- ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள மண் மட்டுமே ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டது.
- அதனுடன் நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து, தூய்மையான அறையில் சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் சூரிய ஒளி, காற்று கிடைக்கும் வகையில் வைத்தனர்.
- நிலவு மண் ஊட்டச்சத்து குறைவானது ன்பதால், தினசரி ஊட்டச்சத்து கரைசல் ஊற்றப்பட்டது. கூடுதலாக, அவற்றுடன் அரபிடோப்சிஸ் செடியின் விதைகளும் சேர்க்கப்பட்டது.
- சில நாட்களில் விதைகள் அனைத்தும் முளைத்து இருந்தன. இதன் மூலம், நிலவு மண்ணில் செடி முளைக்கும் என்பதை உறுதியாகி இருக்கிறது.
- இருப்பினும், இவை பூமியில் விளையும் செடிகளை போன்று வலுவாக இல்லை. மிக மெதுவாகவும் வளர்ந்தன. வேர்களின் வளர்ச்சி தடைபட்டது.
- சில செடிகளில் இலைகள் கூட வளர்ச்சி அடையவில்லை. சிவப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்பட்டன. - இருப்பினும், இந்த ஆராய்ச்சி நாசாவின் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
அசோசெம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சில் தலைவராக காவேரி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நியமனம்
- காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், 2022-23ம் ஆண்டுக்கான அசோசெம் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சிலின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- லைஃப்செல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் அபயகுமார், சதர்ன் போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜெய்குரோனா மற்றும் ஓபிஜி பவர் வென்ச்சர் பிஎல்சியின் தலைவர் அரவிந்த் குப்தா, வளர்ச்சி கவுன்சிலின் இணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் துறை ரீதியான அசோசெம்மின் நடவடிக்கைகளை இவர்கள் முன்னின்று வழிநடத்துவர்.
- நாட்டின் முதலாவது அமிர்த நீர்நிலையை உபி மாநிலம் ராம்பூரில் உள்ள பட்வாய் என்னுமிடத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி, மாநில ஜல்சக்தி அமைச்சர் திரு சுதந்தரதேவ் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
- லடாக் இமயமலைப்பகுதியின் மொலாஸ் படிமங்களில் இருந்து ஒரு மேட்சோயிடே என்னும் அரியவகை பாம்பின் புதைபடிமத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
- முன்பு எண்ணியிருந்ததை விட, மிக நீண்ட காலத்திற்கு முன்பு துணைக்கண்டத்தில் இந்த பாம்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
- மட்சோயிடே என்பது அழிந்துபோன நடுத்தர அளவு முதல் பிரம்மாண்டமான அளவு கொண்ட பாம்பு வகையாகும். இது முதலில் கிரெட்டேசியஸின் பிற்பகுதியில் தோன்றி, பின்னர் கோண்ட்வானன் நிலப்பகுதிகளில் பரவியதாக கருதப்படுகிறது.
- உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் ஈசீன்-ஒலிகோசீன் எல்லையில் உள்ள முக்கிய உயிரியல் மறுசீரமைப்பு (இது ஐரோப்பிய கிராண்டே கூப்பூருடன் தொடர்புடையது), இந்தியாவில் இந்த முக்கியமான பாம்புகளின் அழிவுக்கு காரணமாக இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாம்பின் மாதிரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான வாடியா நிறுவனத்தின் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.