ஐ.நா சபையில் இந்தியை ஊக்குவிக்க 8 லட்சம் டாலர் வழங்கியது இந்தியா
- ஐ.நா சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது. அதனால் கடந்த 2018ம் ஆண்டு ஐ.நா சபையின் செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்து, உலக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
- அதைத் தொடர்ந்து ஐ.நா-வின் செய்திகளை ஒருங்கிணைக்க நிதி வழங்கி ஐ.நா-வின் தகவல் தொடர்புடனும், ஐ.நா-வின் இந்தி முகநூல் பக்கம் மூலம் அனைத்து செய்திகளும் வெளியிடப்படுகின்றன.
- அந்த வகையில் தற்போது மேலும் இந்தியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6,18,14,120.00) வழங்கியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் - உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
- அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், சத்திகுமார்சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து வரும் ஏ.ஏ.நக்கீரனை, வரும் டிச.3-ம் தேதி முதல் மேலும் ஓராண்டுக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்துள்ளது.
மறுபரிசீலனை செய்யப்படும் வரை தேசத் துரோக சட்டப்பிரிவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவு செல்லுபடியாகும் என கேதர்நாத் வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1962-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
- இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
- மாநிலத்தின் பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம் இரண்டையும் சமநிலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதால், இது சிக்கலான பணி. தேசத்துரோக சட்டப்பிரிவின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.
- இந்த வழக்கில் மேல் முறையீடுகள் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்படும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு ஜூலை 3-வது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
சர்வதேச தடகள போட்டியின் மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் புதிய தேசிய சாதனை
- சைப்ரஸ் நாட்டில் நடந்த சர்வதேச தடகள போட்டியின் மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனை படைத்தார்.
- ஆந்திராவை சேர்ந்த ஜோதி (22) பந்தயத் தொலைவை 13.23 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, 2002ல் அனுராதா பிஸ்வால் 13.38 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.
தமிழருடனான வணிக தொடர்புக்கு சான்றான சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கண்டெடுப்பு
- ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010 முதல் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்ற 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளபச்சேரி சேதுபதி அரண்மனை கிழக்கே வயல் பகுதிகளில் சீன நாட்டு பீங்கான் ஓடுகளை கண்டெடுத்தனர்.
- மாணவர்கள் கண்டெடுத்த சீன நாட்டு பீங்கான் பாண்டங்களில் போர்சலைன், செலடன் என இரு வகை உள்ளன. வெள்ளை களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன் மேல் உருவங்கள், வடிவங்கள் வரைந்து பின் உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்பட்டு போர்சலைன் வகை பீங்கான் பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
- இங்கு கிடைத்தது கிண்ணம், குடுவை, தட்டு, ஜாடி போன்றவற்றின் உடைந்த ஓடுகள் ஆகும். வெள்ளை பீங்கான் மேல் சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு, நீலம், மஞ்சள் நிறத்தில் கோடுகள், பூக்கள், வளைவுகள், இலை வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வரலாற்றின் இடைக்காலமான கிபி 12-13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.
- கிபி 10-13ம் நூற்றாண்டுகளில் சீனர்களின் முக்கிய வணிக பொருளாக பீங்கான் பாண்டங்கள் இருந்துள்ளன. அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து முத்து, துணி போன்றவற்றை கொள்முதல் செய்துள்ளனர்.
- சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்ல வணிக தொடர்பு நிலவியுள்ளது. சீனாவிலிருந்து வரும் பீங்கான் பாண்டங்கள் ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் துறைமுகத்தில் இறக்கப்பட்டு பின் அங்கிருந்து பாண்டிய நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- இங்கு தஞ்சை தமிழ் பல்கலை நடத்திய அகழாய்வில் அதிகளவில் சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கிடைத்தன. டௌயி சிலு என்ற நூலில் டாபடன் என பெரியபட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சீன மொழியில் 'டா' என்றால் பெரிய எனவும், 'படன்' என்றால் பட்டினம் எனவும் பொருள். அகழாய்வு செய்யப்பட்ட தமிழக கடற்கரை பகுதிகள் அனைத்திலும் சீன பீங்கான் பாண்டங்களின் துண்டுகள் கிடைத்துள்ளன.
2022 – 24 க்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
- 2022 மே 7-ல் பிலிப்பைன்சின் மணிலாவில் அண்மையில் நடைபெற்ற நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2022 –24 க்கான ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைவராக இந்தியா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த சங்கத்தின் தலைவராக மணிலா தேர்தல் ஆணையம் இருந்தது. நிர்வாகக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகியவை தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
- மணிலாவில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் துணைத்தேர்தல் ஆணையர் திரு நிதிஷ் வியாஸ், மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு ராஜேஷ் அகர்வால், ராஜஸ்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு பிரவீன் குப்தா ஆகிய 3 உறுப்பினர் பிரதிநிதிகள் குழு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பங்கேற்றனர்.
- 2022- 23 க்கான வேலைத்திட்டமும், 2023 -24 க்கான எதிர்கால செயல்திட்டங்களும் நிர்வாகக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.
- அனைவரையும் உள்ளடக்கிய, பங்கேற்புமிக்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் அரசியல் நடைமுறைகளில் உள்ள தடைகளை நீக்குவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தலையீடுகளை எடுத்துரைக்கும் “தேர்தல்களில் பாலின பிரச்சனைகள்” என்பதற்கான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.