Type Here to Get Search Results !

உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023

 

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023: ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 மில்லியனாக இருக்கிறது. இது 60 நாடுகளில், 4 லட்சம் பேருக்கு மேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
 • உலகம் முழுவதும் இந்த நோயில் இருந்து விடுபட கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் ஏற்படுத்துகிறது.
 • உலக மலேரியா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவுக்கு முற்றுப்புளி வைக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. 
 • மலேரியாவைத் தடுக்கவும், கண்டறியவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் உரிய கருவிகளை விரிவுபடுத்தி அப்பணியில் அதிகதிகமாக முதலீடு செய்ய உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளது.
 • உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்த மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி, இந்த போராட்டத்தை எதிர்கொள்ள உதவியது. 
 • ஆனால், காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் காரணமாக, இந்த கொடிய நோய் இதுவரை பாதிக்காத புதிய பகுதிகளிலும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

உலக மலேரியா தினம் 2023 தீம்

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023:  உலக மலேரியா தினம் 2023 தீம்: "பூஜ்ஜிய மலேரியாவை வழங்குவதற்கான நேரம்: முதலீடு, புதுமை, செயல்படுத்துதல்"

உலக மலேரியா தினம் 2022இன் கருப்பொருள்

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023:  இந்த ஆண்டு, உலக மலேரியா தினம் 2022 இன் கருப்பொருள், இந்த நாடுகளை உதாரணமாகப் பார்ப்பதன் மூலம் இந்த பயங்கரமான நோயை நாம் வெல்லலாம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தலாம்.

மலேரியாவின் அறிகுறிகள் என்ன?

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023:  மலேரியா என்பது கொசுக்களால் பரவும் ஒரு தீவிர நோய் தொற்று. இது விரைவாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.
 • உடல் வெப்பநிலை அதிகரிப்பு, வியர்வை மற்றும் குளிர்
 • தலைவலி மற்றும் குழப்பமான மனநிலை
 • மிகவும் சோர்வாகவும் தூக்க கலக்கமாகவும் உணர்வது (குறிப்பாக குழந்தைகளுக்கு)
 • உடல்நிலை சரியில்லாமல் உணர்வது, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு
 • பசியின்மை
 • தசை வலி
 • கண்களில் உள்ள வெள்ளை பகுதி அல்லது தோல் மஞ்சள் நிறமாக மாறுவது
 • தொண்டை புண், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுவது

மலேரியாவைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்தின் உத்திகள் என்ன?

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023:  2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயின் தாக்கத்தை குறைந்தபட்சம் 90% குறைப்பது
 • 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியா இறப்பு விகிதத்தை குறைந்தபட்சம் 90% குறைப்பது
 • 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 35 நாடுகளில் மலேரியாவை ஒழிப்பது
 • மலேரியா இல்லாத அனைத்து நாடுகளிலும் மலேரியா மீண்டும் ஏற்படாமல் தடுப்பது.

மலேரியா தடுப்பூசிகள்

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023:  தடுப்பூசிகள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 40,000 முதல் 80,000 ஆப்பிரிக்க குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுகிறது என்று இந்த நிறுவனம் கணித்துள்ளது
 • கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இப்போது உலகின் முதல் மலேரியா தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்கள் செலுத்தி கொண்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஐ.நா அமைப்பின் ஒருங்கிணைந்த சோதனைத் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
 • 2019 ஆம் ஆண்டு மலாவி அரசு முதன்முதலில் தொடங்கப்பட்ட மலேரியா தடுப்பூசி சோதனை திட்டம், ஆர்.டி.எஸ், எஸ்/ஏஎஸ்01 (ஆர்டிஎஸ், எஸ்) RTS,S/AS01 (RTS,S) தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், அதனை வழங்குவது சாத்தியமானது எனவும் காட்டியது. மேலும், இது தீவிரமான மலேரியாவை கணிசமாகக் குறைக்கிறது என்பதையும் காட்டுகிறது.
 • இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் தான், மிதமான மற்றும் அதிக மலேரியா பரவும் சஹாரா கீழ்மை ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளிலும், தடுப்பூசிகளின் பரவலான பயன்பாட்டை அங்கீகரிக்க உலக சுகாதார நிறுவனம் வழிவகுத்தது.
 • உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்த முதல் மலேரியா தடுப்பூசி ஆர்.டி.எஸ்/எஸ்

உண்மைகள்

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023: மலேரியா உயிர்க்கு ஆபத்தான ஒரு நோய்: ஆனால் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும்.
 • பெண் அனோஃபெலஸ் கொசுவினால் பரப்பப்படும் ஒட்டுண்ணிகளால் மலேரியா பரவுகிறது.
 • 2016-ல் 216 மில்லியன் நேர்வுகள் (2012 அளவு மறுபடியும்). உலக முழுவதும் 445000 மலேரியா தொடர்பான மரணங்கள்.
 • 2010-ல் இருந்து 6 நாடுகள் மலேரியா அற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன (அர்மேனியா, மால்தீவுகள், மொராக்கோ, கிர்கிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் துர்க்மெனிஸ்தான்). மேலும் சில நாடுகள் இந்நிலையை நோக்கி முன்னேறுகின்றன.
 • 2016-ல் பல நாடுகள் மலேரியா ஒழிப்பை நோக்கி முன்னேறி வந்தன. 44 நாடுகளில் 10000 நேர்வுகளுக்கு குறைவாக உள்ளன. 2010-ல் இது 37 நாடுகளாக இருந்தது. இருப்பினும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் 2016-ல் மலேரியா பெருகி வருவது காணப்படுகிறது.

இந்தியாவில் மலேரியா பரவும் அதிக ஆபத்துள்ள பகுதிகள்

 • உலக மலேரியா தினம் 2023 / WORLD MALARIA DAY 2023: மலேரியா இந்தியாவில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை. நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் மற்றும் காடு, மலை அடர்ந்து மலையின மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து மலேரியா நோய் அறிவிக்கப்படுகிறது. 
 • ஒடிஷா, சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா, மேகாலயா, மிஸோரம் போன்ற சில வடகிழக்கு மாநிலங்களும் இதில் அடங்கும். 2001-ல் 2.08 மில்லியனாக இருந்த மலேரியா நேர்வுகள் 2017-ல் 8.4 லட்சமாக்க் குறைந்துள்ளன.

ENGLISH

 • WORLD MALARIA DAY 2023: The number of malaria victims each year is 240 million. In 60 countries, more than 4 lakh people have died from the disease. The World Health Organization is raising awareness around the world that a concerted effort is needed to get rid of this disease.
 • World Malaria Day is observed on April 25 every year. It is observed to support measures to put an end to malaria.  The World Health Organization has called for greater investment in expanding the tools to prevent, diagnose and treat malaria.
 • The world's first vaccine against malaria, approved by the World Health Organization, helped counter this struggle. However, due to climate change and global warming, the deadly disease is likely to spread to new areas that have not yet been affected.

World Malaria Day Theme 2023

 • WORLD MALARIA DAY 2023: World Malaria Day 2023 Theme: “Time to deliver zero malaria: invest, innovate, implement”

The theme of World Malaria Day 2022

 • WORLD MALARIA DAY 2023: This year, the theme of World Malaria Day 2022 is that by looking at these countries as examples we can overcome this terrible disease and improve the livelihoods and well-being of the people.

What are the symptoms of malaria?

 • WORLD MALARIA DAY 2023: Malaria is a serious mosquito-borne disease. It can even lead to death if not diagnosed and treated quickly.
 • Increase in body temperature, sweating and cold
 • Headache and confused mood
 • Feeling very tired and sleep deprived (especially for children)
 • Feeling unwell, abdominal pain and diarrhea
 • Anorexia
 • Muscle pain
 • Yellowing of the white area or skin in the eyes
 • Sore throat, cough and difficulty breathing

What are the World Health Organization's strategies to prevent malaria?

 • WORLD MALARIA DAY 2023: Reduce the incidence of malaria by at least 90% by 2030
 • Reduce the malaria death rate by at least 90% by 2030
 • Eliminate malaria in at least 35 countries by 2030
 • Preventing recurrence of malaria in all non-malaria countries.

Malaria vaccines

 • WORLD MALARIA DAY 2023: The agency estimates that vaccinations save the lives of an additional 40,000 to 80,000 African children each year. The World Health Organization reports that more than a million children in Ghana, Kenya and Malawi are now receiving one or more doses of the world's first malaria vaccine. Thanks to the United Nations' integrated testing program.
 • The Malaria Vaccine Testing Program, first launched by the Government of Malawi in 2019, showed that the RTS, S / AS 01 (RTS, S) RTS, S / AS01 (RTS, S) vaccine is safe and feasible. Furthermore, it has been shown to significantly reduce the incidence of acute malaria.
 • It was only in the early stages of this program that the World Health Organization led to the widespread use of the vaccine in moderate and high malaria outbreaks in sub-Saharan Africa and elsewhere.
 • The first malaria vaccine approved by the World Health Organization was RDS / S

Facts

 • WORLD MALARIA DAY 2023: Malaria is a life-threatening disease: but it can be prevented and cured.
 • Malaria is spread by parasites transmitted by the female Anopheles mosquito.
 • 216 million cases in 2016 (2012 size again). 445000 malaria related deaths worldwide.
 • Since 2010, 6 countries have been declared malaria free (Armenia, Maldives, Morocco, Kyrgyzstan, Sri Lanka and Turkmenistan). And some countries are moving towards this.
 • In 2016, many countries made progress towards malaria eradication. There are less than 10000 cases in 44 countries. In 2010 it was 37 countries. However, malaria is on the rise in 2016 in many African countries.

High risk areas for malaria transmission in India

 • WORLD MALARIA DAY 2023: Malaria is a public health problem in India. Malaria is reported from the eastern and central parts of the country and from the densely forested and mountainous areas.
 • This includes Odisha, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Maharashtra and some northeastern states like Tripura, Meghalaya and Mizoram. The number of malaria cases has come down from 2.08 million in 2001 to 8.4 lakh in 2017.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel