Type Here to Get Search Results !

TNPSC 9th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி, கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு

  • பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
  • இதையடுத்து தாமாக முன்வந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. முடிவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
  • ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் சபாநாயகர் தாமதம் செய்து வந்தார். எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்திற்கு பின்னர் நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 
  • வாக்கு எண்ணிக்கை முடிவில் 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற்றதால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் எதிர்க்கட்சித்தலைவர்

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் வி.ஐ.டி., முன்னேற்றம்

  • சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தரவரிசை பட்டியலை, ஆண்டுதோறும் க்யூ.எஸ்., என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
  • இந்நிறுவனம், கல்வி நிறுவனங்கள் அதன் கல்வித்தரம், மாணவர் ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
  • குறிப்பாக, கலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், லைப் சயின்ஸ் மற்றும் மருத்துவம், இயற்கை அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட ஐந்து பாடப் பிரிவுகளில் ஆய்வு செய்து, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
  • இந்தாண்டு க்யூ.எஸ்., வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், உலக அளவில் வி.ஐ.டி., 346வது இடம் பிடித்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக் கூட்டம் 2022
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 20-வது கூட்டம் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பாக்கே புலிகள் சரணாலயத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. முதல் முறையாக தலைநகருக்கு வெளியே இக் கூட்டம் நடைபெற்றது. 
பினாகா எம்கே-1 ராக்கெட் சிஸ்டம் டிஆர்டிஓ, இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது
  • இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து பொக்ரான் தளத்திலிருந்து பினாகா எம்கே-1 (மேம்படுத்தப்பட்டது) ராக்கெட் சிஸ்டம் (இபிஆர்எஸ்) மற்றும் பினாகா பகுதி மறுப்பு ஆயுதம் (ஏடிஎம்) ஆகியவை வெற்றிகரமான ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. 
  • கடந்த 14 நாட்களில் பல்வேறு தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆர்எஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.அனைத்து ஏவுதலிலும், தேவையான துல்லிய தொலைவு இலக்கு எட்டப்பட்டது. 
  • இந்த சோதனையுடன், இபிஆர்எஸ் ராக்கெட்டுகளை தொழில் முறையில் தயாரிக்கத் தேவையான நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தயாரிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
  • புனேயில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, புனேயைச் சேர்ந்த டிஆர்டிஓ-வின் உயர் ஆற்றல் ஆராய்ச்சி சோதனைக்கூடத்தின் ஒத்துழைப்புடன், பினாகா ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
  • இபிஆர்எஸ் என்பது பினாகா ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இது கடந்த பத்தாண்டுகளாக இந்திய ராணுவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்கும் தூர இலக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel