Type Here to Get Search Results !

TNPSC 7 APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்

  • ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
  • உக்ரைன் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
  • இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு அளித்ததால் ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்க்ப்பட்டது
  • இந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. 
  • இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.
  • இதை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது அதிபர் ஆரிப் ஆல்வியின் உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 
  • பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் என்றும், அதனால் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
  • மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்துச் செய்யப்பட்டது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.
தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ (Hong Fu) தொழில் குழுமத்துடன், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில், உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ (Hong Fu) தொழில் குழுமத்துடன், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
  • இதன்மூலம், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், படிப்படியாக 1000 கோடி ரூபாய் வரை முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். 
  • இத்தொழில் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த முதலீடு தமிழ்நாட்டில் காலணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு முதல் கருப்பின பெண் நீதிபதி நியமனம்

  • அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்த கேதன்ஜி பிரெளன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
  • தற்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள கேதன்ஜி பிரெளன் ஜாக்சன் (51) அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 3-ஆவது பெண் நீதிபதியாக இருப்பார். 
  • உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் 6ஆவது பெண் நீதிபதியாகவும் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதியாகவும் கேதன்ஜி பிரெளன் ஜாக்சன் திகழ்வார். இவருக்கு முன்பாக இரு கருப்பின ஆண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மின்துறைக்கு ரூ.7,054 கோடி நிதி ஒன்றிய அரசு அறிவிப்பு

  • 15வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 0.5 சதவீதம் வரை கூடுதல் கடன் வழங்க ஒன்றிய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
  • குறிப்பாக, 2021-22ல் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு ஒன்றிய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.28,204 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு தற்போது அனுமதி அளித்துள்ளது. 
  • இதில், தமிழகத்திற்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.7,054 கோடி கூடுதல் கடன் தொகை பெறுவதற்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் - ஏ.டி.பி ஆய்வறிக்கை

  • ஆசிய மேம்பாட்டு வங்கி தெற்காசிய நாடுகளின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தாண்டு தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்; 2023ல் 7.4 சதவீதம் என்ற அளவிற்கு இருக்கும். 
  • அதே சமயம் நடப்பு 2022 - 23ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2023 - 24ல், 8 சதவீதமாகவும் அதிகரிக்கும். ஆசியாவின் வளரும் நாடுகள் பட்டியலில், 46 உறுப்பு நாடுகள் உள்ளன.
  • இந்த நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 5.2 சதவீதம்; அடுத்த ஆண்டு 5.3 சதவீதமாக இருக்கும். ஆசியாவின் வளரும் நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகின்றன. 
  • எனினும் ஸ்திரமற்ற அரசியல் சூழல், மீண்டும் பரவும் கொரோனா போன்றவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. இந்நாடுகள் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
2022-ன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இருஅவைகளிலும் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன
  • 2022 ஜனவரி 31 அன்று தொடங்கிய  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் இன்று (அதாவது 2022 ஏப்ரல் 7 வியாழன் அன்று) ஒத்திவைக்கப்பட்டது; 
  • இரு அவைகளும் 2021-22 பிப்ரவரி 11 அன்று இடைக்கால ஓய்வுக்காக ஒத்திவைக்கப்பட்டு துறை வாரியான நிலைக்குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்யவும், மானிய கோரிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் மீது விவாதிக்கவும், மார்ச் 14 அன்று மீண்டும் கூடின.
  • 2022 ஏப்ரல் 8 வரை நடத்தப்படுவதாக இருந்த இந்த கூட்டத் தொடர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கை காரணமாக ஒருநாள் முன்கூட்டியே (07.04.2022) ஒத்திவைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 
  • கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் (மக்களவையில் 12, மாநிலங்களவையில் 1) அறிமுகம் செய்யப்பட்டன.  13 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.  11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  இருஅவைகளிலும் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன
பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பை’ விரைவுபடுத்த மேலும் 101 ஆயுதங்கள் மற்றும் தளங்களை உள்நாட்டில் உருவாக்குவதற்கான முக்கிய கொள்கை முடிவு
  • முக்கிய உபகரணங்கள் / தளங்கள் அடங்கிய 101 பொருட்களின் மூன்றாவது நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஏப்ரல் 07, 2022 அன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறை மூலம் அறிவிக்கப்பட்ட இந்தப் பட்டியல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதியான ஆர்டர்களை பெறும் வகையில் உருவாக்கப்படும் கருவிகள் / அமைப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. 
  • டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2027 வரை படிப்படியாக இந்த ஆயுதங்கள் மற்றும் தளங்களை உள்நாட்டுமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2020-ன் விதிகளின்படி, உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து இந்த 101 பொருட்கள் வாங்கப்படும். முறையே ஆகஸ்ட் 21, 2020 மற்றும் மே 31, 2021 அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் (101) மற்றும் இரண்டாவது பட்டியல் (108) ஆகியவற்றை தொடர்ந்து இன்றைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 310 பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கிய இந்த மூன்று பட்டியல்கள் ஆயுதப்படைகளின் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச தரத்திலான உபகரணங்களை கொள்முதல் செய்வதில் உள்நாட்டு தொழில்துறையின் திறன்களில் அரசின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel