வெளியுறவு செயலர் நியமனம்
- மத்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார்.
- இந்நிலையில், நேபாள துாதராக பதவி வகிக்கும் வினய் மோகன் குவாட்ரா,60, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இம்மாதம் 30ல் பொறுப்பேற்கிறார்.
- கடந்த 1988ல் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்த வினய் மோகன், 2017 - 2020 வரை பிரான்சு நாட்டின் இந்திய துாதராக பதவி வகித்தார்.
- வெளியுறவுப் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 2015 - 2017 வரை பிரதமர் அலுவலக இணைச் செயலராகவும் பணி புரிந்துள்ளார்.
குற்றவியல் நடைமுறை மசோதா - லோக்சபாவில் நிறைவேறியது
- நாட்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, கடந்த வாரம் லோக்சபாவில் தாக்கலானது.
- இதைத் தொடர்ந்து, எம்.பி.,க்களின் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இம்மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைகிறது ஹெச்டிஎப்சி நிறுவனம்
- 1991-ம் ஆண்டுக்கு பிறகு தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி முதலில் அனுமதி அளித்தது ஹெச்டிஎப்சி வங்கிக்குதான். 1994-ம் ஆண்டு முதல் இந்த வங்கி செயல்பட்டுவருகிறது.
- முதலில் ஹெச்டிஎப்சியின் துணை நிறுவனங்களான ஹெச்டிஎப்சி ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹெச்டிஎப்சி உடன் இணைய இருக்கிறது.
- அதன் பிறகு, அடுத்தகட்டமாக ஹெச்டிஎப்சி நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. ஒருங்கிணைந்த ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி வசம் இருக்கும். 25 ஹெச்டிஎப்சி பங்குகள் இருந்தால் 42 ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஒருங்கிணைந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சஷிதர் ஜெகதீசன் இருப்பார். தற்போது ஹெச்டிஎப்சியின் தலைவராக இருக்கும் கெகி மிஸ்திரி வங்கியின் இயக்குநர் குழுவில் இருப்பார்.
டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க்
- உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் . டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.
- இது தொடர்பாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை அமைப்பிற்கு அளித்த அறிக்கையில் டுவிட்டர் நிறுவனத்தின் 7 கோடியே 34 லட்சம் டுவிட்டர் பங்குகள் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடிக்கு 2021 மார்ச் 31 வரை ரூ 3.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 15-வது நிதி ஆணையத்தின் (2020-21) பரிந்துரையின் படி சென்னைக்கு ரூ 181 கோடி, மதுரைக்கு ரூ 31 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 21 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- காற்று தர நிதியின் கீழ் சென்னைக்கு ரூ 91 கோடி, மதுரைக்கு ரூ 15 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 11 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 117 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.