நடப்பாண்டில் 3101 ரயில் பெட்டி தயாரித்து அசத்தியது ஐ.சி.எப்.,
- சென்னையில் உள்ள ஐ.சி.எப். எனும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
- மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. மேலும் 'வந்தே பாரத்' ரயில் பெட்டி தயாரிப்பு திட்டத்தில் பெட்டிகள் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
- ஐ.சி.எப்.பில் 2019 - 2020ல் 4238 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.கொரோனா ஊரடங்காலும் ரயில் பெட்டி தயாரிப்பு தளவாடங்கள் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாட்டாலும் 4166 பெட்டிகளே தயாரிக்க முடிந்தது.
- இதேநிலை தொடர்ந்ததால் 2020 -2021ம் ஆண்டில் 1954 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.இந்த நிலையில் 2021 - 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தளவாடங்கள் உரிய காலத்தில் கிடைக்காததால் 3100 பெட்டிகள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
- தயாரிப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டனரயில்களில் நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் 'லிங் ஹாப்மென் புஸ்' என்கிற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருவதால் இப்பெட்டிகள் அதிகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- இதையொட்டி நிர்ணயித்திருந்த இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைக்கப்பட்டுள்ளது.
7ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா
- உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள் மோதின . டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .
- முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது . இதையடுத்து , 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது .
- முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை . இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது . இறுதியில் , இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது .
- இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது .
இலங்கை பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா
- இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, உணவுப் பொருள்களுக்கு பற்றாக்குறை என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
- இதையடுத்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சா்களும் தங்கள் பதவியை ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.
- பிரதமா் மகிந்த ராஜபட்சவின் மகனும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபட்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பார்லி.,கலைப்பு
- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது.
- இதையடுத்து, இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பார்லிமென்டை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் - இகா ஸ்வியாடெக் சாம்பியன்
- அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் போலந்தின் 20 வயதான இகாஸ்வியாடெக், ஜப்பானின் 24 வயதான நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்தினர்.
- இதில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர் ஒசாகாவை ஒரு செட் பாயின்ட் கூட எடுக்கவிடவில்லை. அந்த செட் 6-0 என கைப்பற்றிய ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ச்சியாக இது அவர் பெற்ற 17வது வெற்றியாகும்.
- மேலும் தோகா, இண்டியன் வெல்ஸ், மியாமி என தொடர்ச்சியாக 3 தொடர்களிலும் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் 2013ல் செரீனா தொடர்ச்சியாக 4 தொடரிலும், கரோலினா வோஸ்னியாகி 2010ல் 3 தொடரிலும் தொடர்ச்சியாக பட்டம் வென்றிருந்தனர்.
ஆர்லியன்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் வெள்ளி வென்றார்
- பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர்.
- முதல் செட்டை 11-21 என இழந்த மிதுன், இரண்டாவது செட்டை 19-21 என போராடி கோட்டைவிட்டார்.மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மிதுன் மஞ்சநாத் 11-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- இந்திய கடற்படையின் வருடாந்திர ரீபிட் மாநாடு மற்றும் வருடாந்திர உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு 2022, கொச்சி தென்மண்டல கடற்படை தளத்தின் தளபதி வைஸ் அட்மிரல் எம்ஏ ஹம்பிபோலியால் மார்ச் 31-ந்தேதி தொடங்கிவைக்கப்பட்டது.
- அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப இந்த ஆண்டு மாநாடு உள்நாட்டு தயாரிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
- இந்த உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க பொதுத்துறை-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
- கடற்படை கப்பல்களை எந்தவித சவாலையும் சந்திக்கும் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும், கடற்படைக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது
- இந்தியாவின் ஏற்றுமதி முடிவடைந்த நிதியாண்டில் 417.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் 40.38 பில்லியன் என்ற அதிக அளவாக இருந்தது. இருந்து முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 14.53% அதிகமாகும்.
- 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 32.62% அதிகரித்து 352.76 பில்லியன் டாலராக இருந்தது.