Type Here to Get Search Results !

TNPSC 28th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நம்மாழ்வாா் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூா் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
  • இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், வி.செந்தில்பாலாஜி, ஆா்.காந்தி, சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முதல்வரை வேந்தராக கொண்டு சித்த மருத்துவ பல்கலைகழகங்கள் - சட்டமன்றத்தில் தீர்மானம்

  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரை வேந்தராக கொண்டு தொடங்கப்படும் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் தொடர்பான சட்டமசோதாவை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலை கழகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் ஆளுனரே வேந்தராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தொடங்கப்பட உள்ள சித்த மருத்துவ பல்கலைகழகத்திற்கு முதல்வர் வேந்தராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இணை வேந்தராகவும் இருப்பார்கள் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர், ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார்
  • திப்ருகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாமில் அமைக்கப்பட்டுள்ள ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • இந்த புற்றுநோய் மருத்துவமனைகள் திப்ருகர், கோக்ரஜார், பார்பேடா, தரங், தேஜ்பூர், லக்கிம்பூர், ஜோர்ஹாட் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 
  • திப்ருகரில் புதிய மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்ட பிரதமர், இந்த மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக துப்ரி, நல்பாரி, கோல்பாரா, நகோன், சிவசாகர், தீன்சுக்யா, கோலாகாட் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 
  • அசாம் ஆளுநர் திரு ஜகதீஷ் முகி, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனாவால், திரு ராமேஷ்வர் தெலி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு ரஞ்சன் கோகோய், பிரபல தொழிலதிபர் திரு ரத்தன் டாடா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel