Type Here to Get Search Results !

TNPSC 14th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

செங்கல்பட்டில் ரூ.65 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் - முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

  • செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் ரூ.65 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேசயோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
  • ரூ.65 கோடி செலவில், 50 ஏக்கர் நிலப்பரப்பு, 2.93 லட்சம் சதுர அடி கட்டிடம் கட்டும் பணிகள் 2020 ஜன.6-ம் தேதி தொடங்கியது. கடந்த, 2021 செப். 30-ம் தேதி, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன.

முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடக்கம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

  • முன்னாள் பிரதமர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக, பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அருங்காட்சியகம் தீன் மூர்த்தி பவனில் (பிளாக் 1) செயல்பட்டு வந்தது. இதே வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடமும் (பிளாக் 2) இணைக்கப்பட்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 15,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

2.4 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் ரூ.19,000 கோடியில் ஜவுளி துறைக்கு புதிய திட்டம் - ஒன்றிய அரசு ஒப்புதல்

  • ஒன்றிய அரசு தொழிற்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜவுளித்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. 
  • ஜவுளித் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக ரூ.19,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு (பிஎல்ஐ) ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
கனிம உற்பத்தியில் 13.2 சதவீதம் ஒட்டுமொத்த வளர்ச்சி
  • 2022 பிப்ரவரி மாதத்திற்கான சுரங்க மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தியின் குறியீடு 123.2 ஆக இருந்தது, 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.5% அதிகமாகும்.
  • இந்திய சுரங்க அலுவலகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்கள் படி,  முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட ஏப்ரல்-பிப்ரவரி, 2021-22 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • பிப்ரவரி, 2022-ல் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 795 லட்சம் டன்கள், பழுப்பு நிலக்கரி 47 லட்சம் டன்கள், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2515 மில்லியன் கியூ. மீ., பெட்ரோலியம் (கச்சா) 23 லட்சம் டன், பாக்சைட் 2120 ஆயிரம் டன், குரோமைட் 373 ஆயிரம் டன், காப்பர் 9 ஆயிரம் டன் , தங்கம் 125 கிலோ, இரும்பு தாது 227 லட்சம் டன், ஈயம் 29 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது 293 ஆயிரம் டன், ஜிங்க் 143 ஆயிரம் டன், சுண்ணாம்பு 333 லட்சம் டன், பாஸ்போரைட் 108 ஆயிரம் டன், மேக்னசைட் 10 ஆயிரம் டன், வைரம் 48 காரட்.
  • பிப்ரவரி 2021-ஐ விட பிப்ரவரி 2021-ல் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான தாதுக்களின் உற்பத்தியில் பின்வருவன அடங்கும்: வைரம் (43.4%), பழுப்பு நிலக்கரி (24.7%), இயற்கை எரிவாயு (U) (12.5%), பாஸ்போரைட் (9.9%), துத்தநாகம் 8.7% ), பாக்சைட் (8.3%), நிலக்கரி (6.6%), இரும்புத் தாது (5.9%) மற்றும் மேக்னசைட் (0.6%).
  • எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான தாதுக்களின் உற்பத்தியில் பின்வருவன அடங்கும்: சுண்ணாம்பு (-0.5%), தங்கம் (-2.1%), பெட்ரோலியம் (கச்சா) (-2.2%), ஈயம் (-14.0%), மாங்கனீசு தாது (-17.3%) , காப்பர் (-19.8%) மற்றும் குரோமைட் (-33.1%).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel