Type Here to Get Search Results !

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை / INDO TIBETAN BORDER POLICE (ITBP)

 

TAMIL

  • துணை ராணுவப் படையில் இருந்த பின்வரும் ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுத காவல்படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச் 2011, முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
  1. மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF)
  2. எல்லை பாதுகாப்புப் படை (BSF)
  3. இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் (ITBP)
  4. மத்திய தொழிலக காவல் படை (CISF)
  5. சிறப்பு சேவை பணியகம் (SSB )
வரலாறு
  • இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) அமைக்கப்பட்டது. 
  • லடாக் பகுதியிலுள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம் வரையுள்ள 3488கி.மீ இந்திய-சீன எல்லையை இந்த படை பாதுகாக்கிறது. 
  • பனிப்புயல், பனிப்பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களுடன் -40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் 9000 முதல் 18000 அடி உயரத்தில் எல்லையை காக்கிறார்கள். 
  • இமய மலைப்பகுதியில் தனி பிணைப்பு மற்றும் உயர் மலைப் பிரதேசத்தில் செயல்படும் வலிமையில் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை தனித்து நிற்கிறது.
  • தொடக்க காலத்தில் இந்தோ - தீபெத் எல்லையில் கள்ளக் கடத்தல், ஊடுருவல், உளவாளிகளின் நடமாட்டம் இவற்றைத் தடுப்பது இந்த படையின் முதன்மை பணியாக இருந்து வந்தன.
  • ஆனால், தற்போது படை விரிவாக்கத்தின் விளைவாக, இயற்கைப் பேரிடர்கள் போன்ற நெருக்கடியான தருணங்களின் போது, நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் இப்படை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • ஆரம்ப காலகட்டங்களில், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 1471 வீரர்களை ஒருங்கிணைத்து நான்கு படைப்பிரிவுகளாக (Battalions) செயலாற்றி வந்தது. 
  • பின்னர், எல்லை பகுதிகளில் இந்த படையின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக மலைப் பிரேதேசத்தில் வாழும் உள்ளூர் இளைஞர்களை பணியமர்த்தி படையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. 
  • 1965, 1971 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மோதல்களில் இந்தியா வெற்றி பெற்றதில் இப்படைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
  • எல்லைப் பகுதிகளில் காணப்படும் தொடச்சியான அச்சுறுத்தலை போக்கும் வகையில், 1978ம் ஆண்டு இப்படையை மறுகட்டமைத்து மறுசீரமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 
  • அதன்படி, 9 படைப்பிரிவுகள், 4 சிறப்பு படைப்பிரிவுகள், 2 பயிற்சி மையங்கள் கொண்டதாக இப்படை வலுப்பெற்றது. 
  • ஒரே நாடு, ஒரே எல்லை, ஒரே படை என்ற கொள்கையின் கீழ், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் செயலாற்றி வந்த அசாம் ரைபிள்ஸ் படையின் பணிகள் இதற்கு கீழ் கொண்டு வரப்பட்டன. தற்போது, 56 படைப்பிரிவுகளுடன் இப்படை செயலாற்றி வருகிறது.
  • Sanjay Arora, IPS (TN-88) - இப்படையின் தலைமை இயக்குனராக உள்ளார்
  • இந்தோ - தீபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் அனைத்து போர் பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
  • ஆனால், இந்த நியமனங்கள் பெரும்பாலும் constabulary ranks அளவில் தான் இருந்து வந்தன. கடந்த 2021ம் ஆண்டு தம்மி மற்றும் தேஸ்வால் என்ற இரு பெண்கள் முதன்முறையாக Assistant Commandant சேவையில் நியமிக்கப்பட்டனர்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை
  • லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. 
  • மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை "சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்" படி பாகிஸ்தான் சீனாவுக்கு சட்ட விரோதமாக கொடுத்துள்ளது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
  • எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்பதால், அதனை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கு பொறுமை மிகவும் அவசியம் என இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்ற போதிலும், இருதரப்புக்கும் பொதுவான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) இல்லாததால், எல்லையில் அமைதியைப் பராமரிக்க பல்வேறு உடன்படிக்கைகளை இருநாடுகளும் வகுத்து, நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
  • 1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளின்படி, எல்ஏசி நெடுகிலும், இருதரப்பு பகுதியில் குறைந்தபட்ச அளவுக்கு தங்கள் படைகளை நிறுத்திக்கொள்ளலாம். எல்ஏசி-யை இருதரப்பும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்புகொள்ளப்பட்டது.
ENGLISH
  • The following five divisions of the paramilitary force have been redefined as the Central Armed Police Force and have been operating under the Ministry of Home Affairs since March 2011.
  1. Central Reserve Police Force (CRPF)
  2. Border Security Force (BSF)
  3. Indo-Tibetan Border Patrol (ITBP)
  4. Central Industrial Police Force (CISF)
  5. Specialized Service Bureau (SSB)
          History
          • The Indo-Tibetan Border Guard (ITBP) was formed on October 24, 1962, following the conflict between India and China. The force guards the 3488 km Indo-Chinese border from Karakoram Pass in Ladakh to Jazipla in Arunachal Pradesh.
          • They guard the border at altitudes of 9000 to 18000 feet even at -40 degrees Celsius with natural disasters such as blizzards, avalanches, and landslides.
          • The Indo-Tibetan Border Guard stands alone in its strength in the Himalayas and operating in the highlands. Initially, the main task of this force was to prevent smuggling, infiltration and movement of spies on the Indo-Tibetan border.
          • But now, as a result of the expansion of the force, the force plays a very important role in protecting the people of the country during times of crisis such as natural disasters.
          • In the early days, it consisted of 1471 soldiers serving in various divisions and operating in four battalions.
          • Subsequently, the Central Government decided to expand the force by recruiting local youths living in the hilly areas to increase the role of this force in the border areas.
          • The role of these forces is seen as significant in India's victory in the 1965 and 1971 Indo-Pakistani conflicts.
          • In 1978, the federal government decided to restructure and restructure the force in order to defuse the continuing threat posed by the border areas. Accordingly, the force was strengthened to consist of 9 Regiments, 4 Special Forces and 2 Training Centers.
          • Under the principle of One Country, One Border, One Force, the missions of the Assam Rifles operating in the states of Sikkim and Arunachal Pradesh were brought under this. Currently, the force is operating with 56 regiments.
          • Sanjay Arora, IPS (TN-88) - is the Director General of the Army
          • In the Indo-Tibetan Border Security Force, women officers have been assigned to all combat responsibilities since 2016. However, these appointments were mostly from the constabulary ranks. In 2021, two women, Tammi and Teswal, were first appointed to the Assistant Commandant service.
          India-China border issue
          • China has illegally occupied about 38,000 square kilometers of land in the Ladakh Union Territory. Moreover, in Pakistan-occupied Kashmir, Pakistan has illegally ceded 5,180 sq km of land to China under the "China-Pakistan Border Agreement 1963" and claims about 90,000 sq km of the Indo-China eastern border in Arunachal Pradesh as its own. .
          • Although India and China agree that patience is essential to resolve the border issue through peaceful negotiations, the two sides have been pursuing various agreements and procedures to maintain peace along the border, as there is no common Line of Control (LAC) on either side.
          • Under the 1993 and 1996 agreements, both sides could station their forces to a minimum throughout the LAC. It was also agreed that the LAC should be treated with respect by both parties.

          Post a Comment

          0 Comments
          * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

          Top Post Ad

          Below Post Ad

          Hollywood Movies

          close

          Join TNPSC SHOUTERS Telegram Channel

          Join TNPSC SHOUTERS

          Join Telegram Channel