TNPSC 25th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்

 • பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வந்தார். 
 • மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 • இந்நிலையில் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய டுவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 • இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடன் இதற்கு முன்பு வரை எலெக்ட்ரிக் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலான் மஸ்க், தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க அதிகாரம் - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது

 • தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது. 
 • இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
 • இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்களை சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று அறிமுகம் செய்தார். 
 • அவை முன்னவர் துரைமுருகன், மசோதாக்களை பிரிவு வாரியாக இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கான சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தார். 
 • அதன்பின், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்ட மசோதாக்கள் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மசோதா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம்

 • திருப்பூரில் நஞ்சராயன் குளம் தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்படும். இம்மையம் பறவைகள் குறித்த பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படும். 
 • காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் என்ற புதிய வன உயிரின சரணாலயம் சுமார் 478 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓசூர் கோட்ட அஞ்செட்டி, உரிகம் மற்றும் ஜவளகிரி சரகங்களின் வனநிலங்களை உள்ளடக்கி அமைக்கப்படும். 
 • இந்தியாவின் முதல் தேவாங்கு உன உயிரின சரணாலயம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமைக்கப்படும்.
 • இந்த அறிவிப்பிற்கான கணக்கெடுப்பு, மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டில் ₹5 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும். 

இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்ப்பு

 • இஸ்ரேலிடம் இருந்து ஸ்பைக் அதிநவீன ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் ராணுவம் மற்றும் விமான படையில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. 
 • ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்பைக் எல்ஆர் -2 லாஞ்சர்கள்,ஏவுகணைகள் 5.5 வரை உள்ள தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 
 • விமான படையின் எம்ஐ-17 வி 5 ஹெலிகாப்டர்களில் ஸ்பைக் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளன. இது 30 கிமீ துாரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் உடையது.

இந்தியாவில் 17 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் - தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை

 • தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அளித்த அறிக்கைபடி 'நாட்டில், 2011 - 2021க்கு இடையே பாதுகாப்பற்ற பாலுறவின் மூலம் 17 லட்சத்து 8,777 பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.
 • மாநில வாரியான பாதிப்பில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 3.18 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.
 • அடுத்ததாக, மகாராஷ்டிராவில் 2.84 லட்சம் பேரும், கர்நாடகாவில் 2.12 லட்சம், தமிழகத்தில் 1.16 லட்சம் பேரும், உத்தர பிரதேசத்தில் 1.10 லட்சம் பேரும் பாதிப்புக்கு ஆளாகினர்.
 • அத்துடன், 2011 - 2021க்கு இடையே ரத்த பரிமாற்றங்களின் மூலம் 15 ஆயிரத்து 782 பேருக்கு எய்ட்ஸ் பரவி உள்ளது. இதுதவிர, தாயிடம் இருந்து 4,423 குழந்தைகள் இந்த பாதிப்பை பெற்றுள்ளனர்' என அதில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை துவங்கும் 2வது நாடு இந்தியா

 • ஐரோப்பிய யூனியனில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை துவங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று(ஏப்.,25) வரவேற்றார்.
 • ஐரோப்பிய யூனியனில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 27 உறுப்பினர்களை கொண்ட இரண்டாவது கூட்டமைப்பாக இந்தியா இருக்கும்.
சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ள நட்சத்திரம்
 • சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஒரு பகுதியான இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் இந்திய வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
 • டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், இந்திய வான் இயற்பியல் நிறுவனம் ஆகியவற்றின் குழுக்களும் இதில் அடக்கம். இவர்கள் அனைவரும் இணைந்து, கயா 20ஈஏஈ (Gaia 20eae) எனும் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
 • ‘தி ஆஸ்ட்ரோபிசிக் ஜர்னல்’ எனும் வான் இயற்பியல் தொடர்பான சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments