Type Here to Get Search Results !

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் 2021 / RANKING OF MOST POWERFUL COUNTRY IN ASIA 2021

 

TAMIL

  • ஆஸ்திரேலியா சிட்னியின் லோவி நிறுவனம், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் 2021 ஐ வெளியிட்டு உள்ளது.
  • முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்பு, அரசியல், ராஜதந்திர செல்வாக்கு, கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து லோவி நிறுவனம் ஆண்டுதோறும் இப்பட்டியலை வெளியிடுகிறது. 
  • இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிடி தளர்கிறது. சீனாவின் பிடி அதிகரித்து வருகிறது.
  • இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2020ஐ விட இந்தாண்டு இந்தியா 2 புள்ளிகள் இழப்பை சந்தித்துள்ளது.
  • இந்தியா அதன் எதிர்மறையான சக்தி இடைவெளி மதிப்பெண் காரணமாக இந்த துறையில் முன்பை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • எனினும் எதிர்கால வளங்களின் அளவீட்டில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.கொரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக 2030 ஆண்டிற்கான குறைந்த பொருளாதார முன்னறிவிப்பு இருந்த போதிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பின்னால் உள்ளது. 
  • பொருளாதார திறன், ராணுவ திறன் மற்றும் கலாச்சார செல்வாக்கு அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது. கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. 
  • ஆசியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இப்போது நடுத்தர சக்தி பட்டியலுக்கு மாறியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
  • இந்தோ--பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளை விட கொரோனாவால் இந்தியா வளர்ச்சிக்கான திறனை அதிகம் இழந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
  • இப்பட்டியலில் பாகிஸ்தான் 14.7 புள்ளிகளுடன் 15வது இடத்திலும், வங்காளதேசம் 9.4 புள்ளிகளுடன் 19வது இடத்திலும் உள்ளன. 20வது இடத்தில் உள்ள இலங்கை, 8.6 என்ற புள்ளியை பெற்றுள்ளது. 
  • மியான்மர் 7.4 புள்ளிகளுடன் 21வது இடத்திலும், நேபாளம் 4.5 புள்ளிகளுடன் 25வது இடத்திலும் உள்ளன.
  • அமெரிக்கா - 82.2
  • சீனா - 74.6
  • ஜப்பான் - 38.7
  • இந்தியா - 37.7
  • ரஷ்யா - 33.0
  • ஆஸ்திரேலியா - 30.8
  • தென்கொரியா - 30.0
  • சிங்கப்பூர் - 26.2
  • இந்தோனேசியா - 19.4
  • தாய்லாந்து - 19.2
ENGLISH
  • Sydney, Australia's Lowe's Institute has released the list of the most powerful countries in Asia 2021. Lowe's annually publishes a list of key countries' economic capabilities, military capabilities, domestic situation, future planning, economic relations with other countries, security networks, politics, diplomatic influence, and cultural influence.
  • The United States tops the list. However, the US grip on the Asia-Pacific region is weakening. China's hold is increasing. India ranks 4th in the list after the US, China and Japan. India has lost 2 points this year over 2020.
  • It has been reported that India is making less impact than ever before in this sector due to its negative power gap score. However, India has excelled in measuring future resources. Despite the low economic forecast for 2030 due to the corona virus and curfew, India lags behind the United States and China.
  • It ranks fourth in terms of economic prowess, military prowess and cultural influence. The Indian economy has been destabilized by the corona.
  • Asia's second most populous country has now moved to the middle power list, the report said.
  • The report said that India has lost more capacity for development by the Corona than any other country in the Indo-Pacific region.
  • Pakistan are 15th in the list with 14.7 points and Bangladesh are 19th with 9.4 points. Sri Lanka, ranked 20th, has a score of 8.6. Myanmar is 21st with 7.4 points and Nepal is 25th with 4.5 points.
  • United States - 82.2
  • China - 74.6
  • Japan - 38.7
  • India - 37.7
  • Russia - 33.0
  • Australia - 30.8
  • South Korea - 30.0
  • Singapore - 26.2
  • Indonesia - 19.4
  • Thailand - 19.2

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel