Type Here to Get Search Results !

TNPSC 28th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'சாகோ' துப்பாக்கி - இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

  • தொலைநோக்கி உதவியால், வெகு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடுவதற்கு, 'ஸ்னைப்பர்' துப்பாக்கிகள் பயன்படுகின்றன.
  • ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சாகோ நிறுவனம், அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.
  • இந்நிறுவனத்திடம் இருந்து, 'சாகோ 338 டி.ஆர்.ஜி. - 42' ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை, இந்திய ராணுவம் இறக்குமதி செய்துள்ளது. 
  • இவை, ஜம்மு - காஷ்மீர் எல்லை, சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு ஆகிய இடங்களில் பணியில் உள்ள ராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளன.
  • 1990களில், ரஷ்யாவிடம் இருந்து 'டிரகுநோவ்ஸ்' ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை இந்தியா வாங்கியது. இதை விட மேம்பட்ட 'பெரட்டா, பர்ரட்' வகை ஸ்னைப்பர்கள், 2019, 2020ல் அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.தற்போது, இவற்றை விட மேம்பட்ட சாகோ ஸ்னைப்பர்கள், ராணுவத்தினருக்கு வழங்கப்படுகின்றன. 
  • 6 கிலோ எடையுள்ள இந்த துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா, 1,500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கி வீழ்த்த வல்லது.
  • சமீப ஆண்டுகளாக, இந்திய எல்லைப் பகுதிகளில், ஸ்னைப்பர் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பின்லாந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் பயிற்சி பெற, 10 ராணுவத்தினர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கீதாலட்சுமி நியமனம் - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

  • தமிழக ஆளுநரும், கோவை வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அப்பல்கலைக்கழக துணைவேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்துள்ளார். அவர் துணைவேந்தராகப் பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.
  • 15 ஆய்வுக் கட்டுரைகள்வெளியிட்டுள்ள கீதாலட்சுமி, 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும், 33 ஆராய்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

  • கோவாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்த முள்ள 40 இடங்களில், பா.ஜ., 20 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியானது.
  • பெரும்பான்மைக்கு, 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவு தந்தனர். மேலும், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவும் பா.ஜ.,வுக்கு கிடைத்தது.
  • இதையடுத்து, வடக்கு கோவாவின் சங்கலிம் தொகுதியில் வெற்றிபெற்ற பிரமோத் சாவந்த், பா.ஜ., சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
  • இந்நிலையில், கோவா மாநிலத்தின் முதல்வராக, பிரமோத் சாவந்த், 48, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு, கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் சாவந்த் உடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி ஒதுக்கீடு

  • 2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடிற்கு மத்திய அரசு ரூ.352.85 கோடி வழங்கியுள்ளது.
  • கூடுதல் நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.351. 43 கோடி ரூபாயும், இலாமச்சல பிரதேசத்திற்கு ரூ.112.19 கோடியும், கர்நாடக மாநிலத்திற்கு ரூ.429.39 கோடியும், மஹாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.355.39 கோடியும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.17. 8 6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தற்போது துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழ் நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ரூ.3500 கோடி முதலீட்டியில் 3 திடங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுக்கு வந்த பின்னர் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாவும் 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முதலீடு 41.55 அதிகரித்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சக புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.   
குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா
  • குற்றவியல் நடைமுறை திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தாக்கல் செய்தார்.
  • பின்னர் பேசிய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, 1920-ல் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை மசோதா 102 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். 
  • குற்றவியல் நடைமுறை திருத்த மசோதாவில் வழக்கு விசாரணையை அதிகரிக்க உதவும் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களில் தண்டனை விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். 
  • இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு ஆதரவாக 120 பேரும், எதிராக 58 பேரும் வாக்களித்தனர்.
நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல்
  • கோவாவில் மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, சிந்துதுர்க் மற்றும் ஷிர்தி, கர்நாடகாவில் பிஜப்பூர், ஹாசன், காலாபுரகி மற்றும் சிமோகா, மத்தியப் பிரதேசத்தில் தப்ரா, உத்தரப் பிரதேசத்தில் குஷிநகர் மற்றும் ஜெவார்,  குஜராத்தில் தொலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது.  இவற்றில் 8 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
  • பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel