குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆரோக்கிய வனத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்
- குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில், குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று (01.03.2022) திறந்துவைத்தார்.
- 6.6 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த ஆரோக்கிய வனம், யோக முத்ரா செய்யும் மனிதன் அமர்ந்துள்ளது போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சுமார் 215 வகையான மூலிகைகள் மற்றும் தாவரங்கள், இந்த வனத்தில் நடப்பட்டுள்ளன. இது தவிர நீருற்றுகள், தண்ணீர் வாய்க்கால்கள், தாமரைக்குளம் மற்றும் காட்சிமுனை போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த ஆரோக்கிய வனத்தில் இடம் பெற்றுள்ளன.
- ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் மனித உடலில் அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்து எடுத்துரைக்கும் நோக்கில் இந்த ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் மேற்கு பிரிவின் தலைமை பொறுப்பை ஏர் மார்ஷல் எஸ். பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.
- தில்லியை தளமாகக் கொண்டு செயல்படும் மேற்கு விமானப்படை பிரிவின் தலைமை பொறுப்பை ஏர் மார்ஷல் ஸ்ரீகுமார் பிரபாகரன் 01 மார்ச் 2022 அன்று ஏற்றார்.
- புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற இவர், 22 டிசம்பர் 1983-ல் போர் விமானியாக இந்திய விமானப் படையில் பணியமர்த்தப்பட்டார். பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, வெலிங்டன் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி, புதுதில்லி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் பிரபாகரன், 5000 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர்.
உக்ரைனுக்கு உதவும் உலக வங்கி - ரூ.22 ஆயிரம் கோடி நிதி
- போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மீண்டு வர உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உலக வங்கி இந்த உதவியை வழங்குகிறது.
- உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ், சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா ஆகியோர் இணைந்து அறிக்கை வாயிலாக நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
- உக்ரைன் மக்கள் சராசரி வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். ஜூன் மாத இறுதிக்குள் இந்த நிதி முழுவதுமாக உக்ரைனுக்கு வழங்கப்படும்'
ரஷ்ய வீரர்களுக்கு தடை - உலக தடகள அமைப்பு, உலக கால்பந்து, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, உலக ரக்பி அறிவிப்பு
- உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது அதிருப்தியில் உள்ளன. இதனையடுத்து ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.
- இந்நிலையில், உலக தடகள அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. உலக தடகள அமைப்பின் கீழ் நடைபெறும் அனைத்து வகையான போட்டிகளிலிலும் ரஷ்ய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து தடகள வீரர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் வரும் காலங்களில் நடைபெறவுள்ள தடகள போட்டிகளிலில் பங்கேற்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
- சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா), ஐரோப்பிய கால்பந்து சங்கம்(யு.இ.எப்.ஏ.,) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,'கால்பந்து உலகம் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உள்ளது.
- பிபா, ஐரோப்பிய சங்கம் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கத்தாரில் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து தொடரிலிருந்து நீக்கப்படுகிறது.
- ரஷ்யாவை எந்த போட்டிகளிலும் சேர்க்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
- நீச்சல் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா, பெலாரசிற்கு சர்வதேச நீச்சல் கூட்டமைப்பு(பினா) தடை விதித்துள்ளது. தவிர அதிபர் புடினுக்கு 'பினா' வழங்கிய சிறப்பு விருதும் திரும்ப பெறப்பட்டது.
- ரஷ்யா, பெலாரஸ் நட்சத்திரங்களுக்கு தடை விதிக்க சர்வதே குத்துச்சண்டை சங்கமும் முடிவு செய்துள்ளது. இந்தியா-பெலாரஸ் மோதல் ரத்து ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023ல் சீனாவில் நடக்கவுள்ளது.
- டென்னிஸ் கூட்டமைப்பிலிருந்து ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் எதிரொலியாக இரு நாடுகளில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து தெரிவித்திருந்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பறித்தது.
இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை, கலைவாணர் அரங்கில் 'நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கிளவ்டு கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஜப்பான், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியா & பாக்., பேச்சு
- இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அதன் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரு நாட்டிலும், சிந்து நதி நீர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
- இரு நாட்டின் ஆணையங்களும், ஆண்டிற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும். இந்த சந்திப்பு, கடந்த ஆண்டு மார்ச்சில், டில்லியில் நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பேச்சு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் துவங்கியது.
- இதில், இந்தியாவின் சிந்து நதி நீர் ஆணைய கமிஷனர், பி.கே.சக்சேனா தலைமையில் 10 பேர் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளது. இவர்கள், வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றனர்.
- பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் சிந்து நதி நீர் ஆணைய கமிஷனர், சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.
பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய்
- கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 18 சதவீத அதிக வருவாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மேலும், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி வசூலுடன் ஒப்பிடும்போது, 26 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த பிப்ரவரி மாத வசூலில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 24 ஆயிரத்து 435 கோடி ரூபாய். மாநில ஜி.எஸ்.டி., வசூல் 30 ஆயிரத்து 779 கோடி ரூபாய்.
- ஒருங்கிணைந்த வசூல் 67 ஆயிரத்து 471 கோடி ரூபாய் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மதிப்பீட்டு மாதத்தில், கூடுதல் வரியாக 10 ஆயிரத்து 340 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - சௌரவ் சௌதரிக்கு தங்கப் பதக்கம்
- ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் இறுதிச்சுற்றில் சௌரவ் 16-6 என்ற கணக்கில் ஜொமனியின் மைக்கேல் ஷ்வால்டை தோற்கடித்து முதலிடம் பிடித்தாா். மைக்கேல் வெள்ளிப் பதக்கம் வெல்ல, ரஷிய வீரா் ஆா்டெம் சொனௌசோவ் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
- இப்போட்டியின் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
- இறுதிச்சுற்றில் அவா் கிரீஸ் வீராங்கனை அனா கொராகாகியிடம் 4-16 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டு 2-ஆம் இடம் பிடித்தாா். பல்கேரியாவின் அன்டாவ்னேடா கொஸ்டாடினோவா வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
- தற்போதைய நிலையில் இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி என 2 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது