Type Here to Get Search Results !

TNPSC 17th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடன் உதவி இந்தியா வழங்குகிறது

  • கரோனா கால நெருக்கடியால் இலங்கை கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்தது. 
  • பிற நாட்டு கரன்சிக்கு இணையான இலங்கை கரன்சியின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. 
  • அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், இலங்கை நிதி அமைச்சர் பாசில் ராஜபக்ச, 2 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார். 
  • இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் பாசில் ராஜபக்ச ஆலோசனை நடத்தினார். 
  • அப்போது இலங்கைக்கு இந்தியா கடன் உதவி அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது இருதரப்புக்கும் பயன்தரும் வகையில் பல்வேறு பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு அந்நாட்டுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. அதற்காக அந்நாட்டுக்கு ரூ.7,500 கோடி (100 கோடி அமெரிக்க டாலர்) கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடனுதவிக்கான ஒப்பந்தம், டெல்லியில் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ), இலங்கை அரசும் கையெழுத் திட்டுள்ளன.

உலக அழகி பட்டத்தை வென்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாஸ்கா

  • கடந்த 2021ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி கடந்த டிசம்பரில் நடப்பதாக இருந்தது. போட்டியாளர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
  • இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, கரீபிய தீவு நாடான பியூர்டோ ரிகோவில் நடந்தது. இதில் ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த, 23 வயதான கரோலினா பைலாஸ்கா, உலக அழகி பட்டத்தை வென்றார். 
  • கடந்த 2020ம் ஆண்டுக்கான அழகி பட்டத்தை வென்ற, கரீபிய தீவு நாடான ஜமைக்காவின் டோனி ஆன் சிங், அழகி பட்டத்துக்கான கிரீடத்தை அணிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீ சயினி இரண்டாம் இடம் வென்றார். 
  • மேற்கு ஆப்ரிக்க நாடான கோட் டி ஐவோய்ரை சேர்ந்த ஒலிவியா ஏஸ் மூன்றாம் இடம் பெற்றார். இந்தியா சார்பில் போட்டியிட்ட மானஸா வாரணாசி, 11வது இடத்தை பிடித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி மூடிஸ் கணிப்பு

  • தர நிர்ணய நிறுவனமான 'மூடிஸ்'. இதற்கு முன்பாக, நடப்பு ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என, இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இப்போது, அதை குறைத்து, 9.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து உள்ளது.
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், உலகளவில் மூன்று முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு, நிதி மற்றும் வணிக சீர்குலைவுகள், புவிசார் அரசியல் பாதிப்புகளால் நம்பிக்கை குறைவு என, முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
  • அடுத்த ஆண்டில், வளர்ச்சி 5.4 சதவீதமாக இருக்கும். நடப்பு ஆண்டு இறுதியில், பணவீக்கம் 6.6 சதவீதமாக இருக்கும்.
  • சீனாவை பொறுத்தவரை, வளர்ச்சி, நடப்பு ஆண்டில் 5.2 சதவீதமாகவும்; அடுத்த ஆண்டில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சிக்கு ஒப்புதல் அளித்தது உக்ரைன்

  • உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் மெய்நிகர் சொத்துக்களுக்கு(virtual assests) அனுமதி வழங்கும் சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மார்ச் 16 அந்நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • விர்சுவல் சொத்துக்களில் பங்குச் சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி வணிகமும் அடக்கம் என்பதால் இனி உக்ரைனில் கிரிப்டோகரன்சி பயன்பாடுகளுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க உள்ளது.
  • குறிப்பாக, ரஷியப் படைகள் உக்ரைன் மீது போர் தொடங்கியதிலிருந்து இதுவரை போரைச் சமாளிக்க நன்கொடையாக உக்ரைனுக்கு ரூ.750 கோடி வரை (100 மில்லியன் டாலர்கள்) கிரிப்டோகரன்சிகள் கிடைத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இதன் மூலம், இனி வரும் காலங்களில் உக்ரைனில் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபடுவோருக்கென வங்கிக் கணக்குகளும் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தூர் வாரும் கப்பல் கட்டுவதற்காக, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்தியா டிரட்ஜிங் கார்ப்பரேஷன் முதல் முறையாக ஒப்பந்தம்
  • 12,000 கியூபிக் மீட்டர் திறனுள்ள தூர் வாரும் கப்பல் கட்டுவதற்காக, கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் டிரட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இது இந்நிறுவனத்தின் முதல் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைச்  செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை - மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டார்
  • இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டுறவை உருவாக்குதல்’ என்ற தலைப்பிலான இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையை மத்திய அறிவியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் புதுதில்லியில் வெளியிட்டார்.
  • கடந்த 2007ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆர்க்டிக் கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உட்பட 13 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. 
  • கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில்   ஆர்க்டிக் பகுதியில் கோங்ஸ்னோர்டன், நீ அலேசண்ட்  ஆகிய இடங்களில் இந்தியா ஆய்வகங்களை அமைத்தது. 2022 வரை, ஆர்க்டிக் பகுதியில் 13 சாகசப்  பயணங்களை இந்தியா மேற்கொண்டது.
  • இந்தியாவின் ஆர்டிக் கொள்கை நீடித்த வளர்ச்சிக்கான கூட்டுறைவை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனித மேம்பாடு, போக்குவரத்து மற்றும் இணைப்பு, நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, ஆர்க்டிக் பகுதியில் தேசிய கட்டமைப்பு திறன் ஆகியவை அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel