Type Here to Get Search Results !

TNPSC 13th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

  • உக்ரைனில் தற்போது எந்த நகரமும் பாதுகாப்பான பகுதியாக இல்லை. ஆரம்ப கட்ட போரின் போது, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லையை ஒட்டிய லிவிவ் போன்ற நகரங்கள் பாதுகாப்பான பகுதிகளாக இருந்தன. அந்நகரங்கள் வழியாக இந்திய மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வந்தனர்.
  • உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 21,000 பேரை ஒன்றிய அரசு மீட்டு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. நாடு திரும்ப விருப்பம் தெரிவித்த அனைத்து இந்தியர்களும் உக்ரைனில் இருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டு விட்டனர். 
  • இந்நிலையில், தற்போது போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமடைந்து இருக்கிறது. எனவே, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக அண்டை நாடான போலந்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலீஸ் பிரீமியர் லீக் - கிறிஸ்டியானா ரொனால்டோ புதிய உலக சாதனை

  • நடந்து வரும் இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது, தொழில்முறை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தது என்ற சாதனை ஆகும். 
  • ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பைகான் 805 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
  • இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். 
  • ஹாட்ரிக் கோலில் இரண்டாவது கோல் அடித்தபோது ஜோசப் பைகானின் உலக சாதனையை முறியடித்தார். இறுதியில், மொத்தமாக மூன்று கோல் அடித்து 807 கோல்கள் அடித்த ஒரே வீரர் ஆனார். இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
  • இதனிடையே, ரொனால்டோ அடித்த ஹாட்ரிக் கோல்கள், அவரின் 59வது ஹாட்ரிக் ஆகும். அதேபோல் கிளப் கேரியரில் இது அவரின் 49வது ஹாட்ரிக் ஆகும். 

ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா ஒப்புதல்

  • உக்ரைன் நாடு ராணுவ ரீதியில் வலிமை அடைய அமெரிக்கா கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து உதவி அளித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் நிதியை கொண்டு போர் விமானங்கள், ஆயுதங்கள், போர் தளவாடங்களை உக்ரைன் வாங்கிக் குவித்து வருகிறது.
  • இந்நிலையில் உக்ரைனுக்கு 4வது கட்ட உதவியாக 200 மில்லியன் டாலர் அதாவது ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 
உக்ரைனில் போர் காரணமாக உலகில் ஏற்பட்டுள்ள சூழல், இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை பற்றி ஆய்வு செய்யும் சிசிஎஸ் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
  • உக்ரைனில் போர் காரணமாக உலகில் ஏற்பட்டுள்ள சூழல், இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை பற்றி ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
  • தற்போதைய நிலவரம், இந்தியாவின் எல்லைப் பகுதிகள், கடல் மற்றும் வான் வழிகளில் பாதுகாப்பு தயார்நிலையின் அம்சங்கள் பற்றி பிரதமருக்கு விளக்கப்பட்டது.
  • உக்ரைனில் இருந்து இந்தியர்களை மட்டுமல்லாமல் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மீட்கும் ஆபரேசன் கங்கா உள்பட அண்மை நிகழ்வுகள் பற்றியும் கூட்டத்தில் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
  • கார்கிவ்வில் உயிரிழந்த நவீன் சேகரப்பாவின் உடலைக் கொண்டு வர, இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel