Type Here to Get Search Results !

TNPSC 31st JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு எம்.என்.பண்டாரியை நியமிக்க பரிந்துரை
  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முனிஸ்வர் நாத் பண்டாரி, 2007 ஜூலையில், அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2019ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 
  • அங்கு, 2021 ஜூன் 26 முதல் அக்டோபர் 10 வரை, பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டார்.கடந்த ஆண்டு நவம்பரில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டு, நவம்பர் 22ல் பொறுப்பேற்றார். 
  • இவரை, நிரந்தர தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.
போர்ச்சுக்கல் பிரதமர் தேர்தல் அன்டோனியோ காஸ்டா மீண்டும் வெற்றி
  • ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் அன்டோனியோ காஸ்டா தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 230 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. 
  • இதில், 41.7 சதவீத வாக்குகளை பெற்ற சோசலிஸ்ட் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சபையில் மெஜாரிட்டிக்கு இன்னும் 4 இடங்கள் தேவை என்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 
  • பிஎஸ்டி கட்சிக்கு 76 இடங்கள் அதிகமான இடங்களில் கிடைத்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் அன்டோனியோ காஸ்டாவை ஆட்சி அமைக்க வரும்படி அதிபர் ரிபெல்லோ டி சோ முறைப்படி அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.
2022ம் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர்
  • இந்திய நாடாளுமன்றம் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
  • இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
  • அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்குகியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். 
  • முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சம்பிரதாய முறைப்படி புறப்பட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை அணிவகுப்பு நாடாளுமன்றம் அழைத்துவரப்பட்டார்.
  • ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ரூபாய் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
  • ஏற்றுமதியில் நமது நாடு தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.
  • நாட்டின் முன்னேற்றத்திற்காகவே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
  • வள்ளுவரின் 'கற்க கசடற' எனும் குறளுக்கு இணங்க கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என கூறி நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள்காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.
  • மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது; இந்த குழுவின் முக்கியமான நோக்கம் பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
  • சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது; இயற்கை உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது
  • 2016 முதல், 56 வெவ்வேறு துறைகளில் 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
  • தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன; முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 10 மாநிலங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 6 இந்திய மொழிகளில் கற்பிக்கப்படும்.
  • பிரதமர் கிஷான் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் குடும்பங்கள் 1.80 லட்சம் கோடி ரூபாய் பெற்றுள்ளனர்; விவசாயத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.நாட்டின் வளர்ச்சியில் நமது சிறு-குறு விவசாயிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது; 
  • எனது அரசு எப்போதும் 80% சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் ஒரு பகுதியாக, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. என கூறினார்.
2022 ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,38,394 கோடி
  • 2022 ஜனவரி மாதம் 31ம் தேதி மாலை 3 மணி வரையிலான ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,38, 394 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,674 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ.32,016 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.72,030 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.35,181 கோடி உட்பட) மற்றும் மேல்வரி ரூ.9,674 கோடி( பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.517 கோடி உட்பட). 
  • அதிகபட்ச மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த 2021 ஏப்ரல் மாதம் ரூ.1,39,708 கோடியாக இருந்தது. 36 லட்சம் காலாண்டு வரித்தாக்கல் உட்பட, 2022 ஜனவரி 30ம் தேதி வரையிலான ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் 1.05 கோடி.
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.29,726 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.24,180 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.35,000 கோடியை 50:50 என்ற விகித அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இந்த மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. 
நீலாசல் இஸ்பாட் நிகாம் (என்ஐஎன்எல்) நிறுவனத்தின் தனியார் மயமாக்கத்துக்கு ஒப்புதல்
  • நீலாசல் இஸ்பாட் நிகாம் நிறுவனத்தின் 93.71 சதவீத பங்குகளை, டாடா ஸ்டீல் லாங் தயாரிப்பு நிறுவனம் ரூ. 12,100 கோடிக்கு வாங்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் ஆகியோர் அடங்கிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் மாற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நீலாச்சல் இஸ்பாட் நிகாம் நிறுவனம்(என்ஐஎன்எல்) எம்எம்டிசி, என்எம்டிசி, பெல், மெகான் என்ற 4 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், ஒடிசா அரசின் 2 பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஓஎம்சி மற்றும் இபிகால் ஆகியவற்றின் கூட்டு முயற்சி நிறுவனங்கள் ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel