பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை(NMMSS), 5 ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அரசு ஒப்புதல்
- பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகைth திட்டத்தை (NMMSS), 15வது நிதி ஆணைய சுழற்சியில், 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 முதல் 2025-26ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் திட்ட செலவு ரூ.1827 கோடி. இதை பெறுவதற்கான தகுதியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரம்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்பதில் இருந்து ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் இத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் முறையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் நோக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது மற்றும் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி கொள்வதைத் தடுத்து நிறுத்தி அவர்களை கல்வியில் அடுத்த நிலைக்கு தொடர ஊக்குவிப்பது ஆகும்.
- இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகளில் உள்ள நன்றாக படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12, 000 வழங்கப்படுகிறது.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேசியக் கல்வி உதவித்தொகை இணையளத்தில் இத்திட்டம் பற்றிய விவரம் உள்ளது. கல்வி உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதில் 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
- இந்த தொடர்திட்டம் கடந்த 2008-09 ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 22.06 லட்சம் கல்வி உதவித் தொகை, ரூ.1783.03 கோடி மதிப்பில் 2020-21 வரை வழங்கப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தில் 14.76 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1827 கோடி மதிப்பில் கல்வித் உதவித் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் 25-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் மும்பையில் நடைபெற்றது. பட்ஜெட்டுக்கு பிந்தைய மக்கள் தொடர்பு நிகழ்ச்சிக்காக இரண்டு நாள் பயணமாக மும்பை வந்த நிதி அமைச்சர், தொழில்துறை மற்றும் நிதிச் சந்தைகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து வருகிறார்.
- உலக மற்றும் உள்ளூர் நிகழ்வுகளால் உருவாகியுள்ள முக்கிய பொருளாதாரச் சவால்கள் குறித்து நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- நிதி நிலைமைகள் மீதும் நிதி அமைப்புகளின் செயல்பாடுகள் மீதும் அரசு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
- நிதித்துறை மேலும் வளர்வதற்கும் பெரும் பொருளாதார நிலைத்தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- நிதி மேலாண்மை தொடர்பான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் துணைக் குழு நடவடிக்கைகள் குறித்தும், குழுவின் முந்தைய முடிகளின் மீது உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6%: பாா்க்லேஸ்
- நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி விகிதம் 10 சதவீதமாக அதிகரிக்கும் என முன்னா் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- இந்த நிலையில், கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படைந்ததன் எதிரொலியாக, இந்த வளா்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை-செப்டம்பரில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி 8.4 சதவீதமாக காணப்பட்டது.
- அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் பல துறைகளின் செயல்பாடு கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பி விட்டன. இதில், சேவை துறை பெரும் பங்கு வகிப்பதாக பாா்க்லேஸ் தெரிவித்துள்ளது.