கீழடி 8ம் கட்ட அகழாய்வில் தாயக்கட்டை கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பண்டைய கால தமிழர்களின் வணிகம், நெசவு, நீர் மேலாண்மை வாழ்வியல் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள் மூலம் வெளிப்பட்டு வருகின்றன.
- இதுவரை 7 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 11ம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
- இதை தொடர்ந்து கீழடியில் வீரணன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன. 2 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 4 செ.மீ நீளமும், ஒரு செ.மீ தடிமனும் கொண்ட தாயக்கட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இதுவரை கீழடியில் மொத்தம் 3 பகடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 2 சுடுமண்ணால் செய்யப்பட்டதும், 1 தந்தத்தில் செய்யப்பட்டதும் ஆகும்.
- தற்போது 4வதாக நீள வடிவில் தாயக்கட்டை முதன்முறையாக கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன.
பிளாஸ்டிக் பொருளுக்கு ஜூலை 1 முதல் தடை - ஒன்றிய அரசு அறிவிப்பு
- பருவநிலை மாற்றத்திற்கு மிகப்பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்காக உள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021, ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை ஜூலை 1ம் தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- உதாரணமாக, பிளாஸ்டிக்காலான காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்ட்ரா, ஸ்பூன், பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவையும் இந்த தடையில் அடங்கும்.
- இந்த உத்தரவு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் இந்த பொருட்களை வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்கு விற்பனை கூடங்கள் என அனைத்திலும் காலி செய்து விட வேண்டும்.
- இவற்றை கையிருப்பு வைத்திருந்தாலோ, வினியோகம் செய்தாலோ சம்பந்தப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு, உரிய அபராதம் விதிக்கப்படும்.
- போர்ட் ப்ளேர் விமான தளத்தில் அந்தமான், நிக்கோபார் கமாண்ட் கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியை 2022 பிப்ரவரி 16 அன்று நடத்தியது.
- இந்தப் பயிற்சி, விமானதளத்தில் அல்லது வேறு இடத்தில் பயங்காரவாதத் தாக்குதல், பிணைக் கைதிகள் பிரச்சனை, கடத்தல் நிலை போன்ற பல்வேறு அவசர காலங்களில் அனைத்துப் பாதுகாப்பு முகமைகளின், தயார் நிலையை சோதிப்பதை நோக்கமாகக் கொண்டது.
- வீர் சவார்க்கர் சர்வதேச விமான நிலையத்திலும் ஐஎன்எஸ் உத்க்ரோஷிலும் இரவு பகலாக பயிற்சிகள் நடத்தப்பட்டன. விமான தளத்திற்கு உள்ளே பல்வேறு இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு ராணுவம், கப்பற்படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றின் விரைவு செயலாற்று அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
- அதே சமயம் இந்த அணிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு தேசிய பாதுகாப்புப் படை, கட்டாக் படைப்பிரிவுகள், கடற்படை கமாண்டோக்கள் ஆகியவற்றிலிருந்து சிறப்புப் படை பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.