நான்கு நாள் வேலை பெல்ஜியம் அறிவிப்பு
- வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.கடந்த, 2021 செப்.,ல் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது.
- இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிச.,ல் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.
இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளுக்கும் தலைக்கவசம் கட்டாயம்
- இரு சக்கர வாகனங்களில் 4 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கான புதிய விதிகளை வகுத்து, அதற்கென மத்திய மோட்டாா் வாகன விதி - 1989, பிரிவு 138-இல் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த திருத்தம் தொடா்பாக விவரங்களை பிப்ரவரி 15-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு, புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
- இந்த புதிய திருத்த விதிகளின்படி, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிந்திருப்பதும், வாகன ஓட்டி பாதுகாப்பு பட்டை மூலம் குழந்தையை தனது உடலுடன் கட்டியிருப்பதும் அவசியமாகும்.
- மேலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்கக் கூடாது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மேலும், 'பாதுகாப்பு பட்டை என்பது இரண்டு பட்டைகளுடன் தேவைக்கேற்ப பெரிதுபடுத்திக் கொள்ளும் வகையிலும், அதில் ஒரு பட்டை குழந்தையின் உடலில் அணிவித்தும், மற்றொன்று வாகன ஓட்டி தனது தோள் பகுதியில் அணிந்திருக்க வேண்டும்' என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி
- ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம் என்பதே நமது நோக்கம் எனவும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்கு அதிகரிக்கும் என உலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
- உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி கட்டங்களின் முதல் சர்வதேச வலையமைப்பான கிரீன் கிரிட்ஸ் முதல் முயற்சியாக, சன் ஒன் வேர்ல்ட் ஒன் கிரிட் (GGI-OSOWOG) என்ற அமைப்பு உள்ளது
6 வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
- சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் குறித்து கொலிஜியம் கூட்டம் நடைபெற்றதது.அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நிது மோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ்பாபு, செளந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத் , ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
ரத்தன் டாடாவிற்கு அசாமின் உயரிய விருது
- அசாமின் உயரிய விருதான 'அசோம் பைபவ்' விருதை தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்கினார்.
- வயது மூப்பு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜன.26 ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் டாடா பங்கேற்க முடியாததால் தற்போது மாநில முதல்வரைச் சந்தித்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
‘புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் 2022-27 - மத்திய அரசு அனுமதி
- ‘புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம், வயது வந்தோருக்கான புதிய கல்வித் திட்டம் 2022-27 -க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் 2021-22-க்கு ஏற்றபடி வயதுவந்தோர் கல்விக்கான அனைத்து அம்சங்களும் அடங்கியிருக்கும். இந்த வயதுவந்தோர் கல்வி மற்றும் வாழ்நாள் கல்வித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரை செய்துள்ளது.
- 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைன் கல்வி முறை உட்பட அதிகமான வசதிகளுடன் வயது வந்தோர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- அடிப்படைக் கல்வியறிவை மட்டும் அளிக்காமல், 21ம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறமைகள், தொழில் திறமைகள் மேம்பாடு, வேலைவாய்ப்பைப் பெறுதல் ஆகிய அம்சங்களைக் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்.
- இத்திட்டம் ஆன்லைன் மூலம் அமல்படுத்தப்படும். பயிற்சி மற்றும் பயிலரங்குகள் நேரடியாக நடத்தப்படும். இதற்கான பாடங்கள் டி.வி, ரேடியோ, செல்போன், செயலி, இணையளம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
- இத்திட்டத்தில், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். இந்த 5 ஆண்டு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 1 கோடி அளவில் 5 கோடி பேருக்கு ஆன்லைன் மூலம் தேசியத் தகவல் மையம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில், மற்றும் திறந்தவெளிப் பள்ளி தேசிய மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்வி கற்பிக்கப்படும்.
- புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்துக்கான செலவு ரூ.1037.90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2022 முதல் 2027ம் ஆண்டு வரை ரூ.700 கோடி மத்திய அரசின் பங்கு. ரூ.337.90 கோடி மாநில அரசுகளின் பங்கு.
ஃபின்டெக் ஓப்பன் ஹேக்கத்தானை போன்பே உடன் இணைந்து நிதி ஆயோக் தொடங்கியது
- நிதி த் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான ஃபின்டெக் ஓப்பன் மாத நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஃபின்டெக் ஓப்பன் ஹேக்கத்தானை போன்பே உடன் இணைந்து நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.
- ஃபின்டெக்கிற்கான மிகவும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை உருவாக்குவதற்கான அனைவருக்குமான முதல் ஹேக்கத்தான் நிகழ்வு இதுவாகும்.
- இந்தியா முழுவதிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள், டிஜிட்டல் படைப்பாளிகள் மற்றும் டெவலப்பர்கள் சிந்திக்கவும், யோசனைகளை வெளிப்படுத்தவும், கோடிங் உருவாக்கவும் இந்த ஹேக்கத்தான் வாய்ப்பளிக்கும்.