தேசிய அறிவியல் நாள் (இந்தியா) 2025 / NATIONAL SCIENCE DAY (INDIA) 2025
TNPSCSHOUTERSFebruary 27, 2025
0
தேசிய அறிவியல் நாள் (இந்தியா) 2025 / NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.
வரலாறு
தேசிய அறிவியல் நாள் (இந்தியா) 2025 / NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும்.
இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது.
அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
நோக்கம்
தேசிய அறிவியல் நாள் (இந்தியா) 2025 / NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும்,
அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
தேசிய அறிவியல் தினம் 2025 கருப்பொருள்
தேசிய அறிவியல் நாள் (இந்தியா) 2025 / NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: தேசிய அறிவியல் தினம் 2025 கருப்பொருள் "விக்சித் பாரதத்திற்கான அறிவியல் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்".
இந்த கருப்பொருள் இளம் மனங்களை ஊக்குவிப்பது, புதிய பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும் இந்தியாவின் அறிவியல் சாதனைகளைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்தும்.
தேசிய அறிவியல் தினம் 2024 தீம்
தேசிய அறிவியல் நாள் (இந்தியா) 2025 / NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: தேசிய அறிவியல் தினம் 2024 தீம் என்பது விக்சித் பாரத்க்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்.
இந்த தீம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்நாட்டு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
கருப்பொருள்
1999 - மாறும் பூமி
2000 - அடிப்படை அறிவியலில் ஆர்வத்தை மீண்டும் உருவாக்குதல்
2001 - அறிவியல் கல்விக்கான தகவல் தொழில்நுட்பம்
2002 - கழிவிலிருந்து செல்வம்
2003 - டி. என். ஏ. 50 ஆண்டுகள் & ஆய்வுக் கூட கருத்தரிப்பு 25 ஆண்டுகள்
2004 - சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஊக்குவித்தல்
2005 - இயற்பியலைக் கொண்டாடுதல்
2006 - நமது எதிர்காலத்திற்கான இயற்கையை வளர்ப்பது
2007 - ஒரு சொட்டுக்கு அதிக பயிர்
2008 - பூமியைப் புரிந்துகொள்வது
2009 - அறிவியலின் எல்லைகளை விரிவுபடுத்துதல்
2010 - பாலின சமத்துவம், நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
2011 - அன்றாட வாழ்க்கையில் வேதியியல்
2012 - சுத்தமான ஆற்றல் விருப்பங்கள் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு
2013 - மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு
2014 - அறிவியல் மனநிலையை வளர்ப்பது
2015 - தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவியல்
2016 - தேசத்தின் வளர்ச்சிக்கான அறிவியல்
2017 - மாற்றுத்திறனாளிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
2018 - நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
2019 - மக்களுக்கான அறிவியல், அறிவியலுக்காக மக்கள்
2020 - அறிவியலில் பெண்கள்
2021 - அறிவியல் தொழில்நுட்ப தாக்கம்: கல்வித் திறன்கள் மற்றும் வேலை
2022 - நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை
2023 - உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்
ENGLISH
NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: National Science Day is celebrated annually in India on February 28.
This National Science Day was introduced by the Government of India in the year 1987 on the premise that scientific geniuses should be revered as well as heads of state and martyrs. This day is celebrated every year based on a goal.
History
NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: The history of celebrating this day is unusual unlike any other day. Usually the birthdays and anniversaries of heads of state are declared special days.
Apart from these two genres, Sir, who was born on Indian soil and explored and published many rare discoveries in the world, is a brilliant physicist. C. February 28 was declared National Science Day by V Raman, who published his Nobel Prize-winning research results.
Sir. C. V. It was on this day that Rama discovered his famous Raman Effect. This discovery brought worldwide glory to India and earned him the prestigious Nobel Prize (1930).
The Government of India has declared this day as National Science Day to commemorate the occasion and to make science accessible to the grassroots.
Purpose
NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: Discovering many new scientific ideas in all parts of the country, in order to tell the younger generation the specialty of science that is fundamental to any civilization.
The purpose of this day is to make us realize that the real debt of gratitude we owe to scientists is to put it to proper use and to welcome new discoveries.
National Science Day 2025 Theme
NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: National Science Day 2025 Theme is “Empowering Indian Youth for Global Leadership in Science & innovation for Viksit Bharat”.
This theme will focus on encouraging young minds, recognizing groundbreaking contributions, and celebrating India's scientific achievements.
National Science Day 2024 Theme
NATIONAL SCIENCE DAY (INDIA) 2025: National Science Day 2024 Theme is Indigenous Technologies for Viksit Bharat. This Theme emphasizes the importance of leveraging indigenous innovations for India's development,
Theme
1999 - Dynamic Earth
2000 - Revival of interest in basic sciences
2001 - Information Technology for Science Education
2002 - Wealth from waste
2003 - d. N. A. 50 years & even 25 years of study fertility
2004 - Promoting scientific awareness in the community
2005 - Celebrating Physics
2006 - Cultivating nature for our future
2007 - More crop per drop
2008 - Understanding the Earth
2009 - Expanding the boundaries of science
2010 - Gender equality, science and technology for sustainable development
2011 - Chemistry in everyday life
2012 - Clean Energy Options and Nuclear Security
2013 - Genetically modified crops and food security
2014 - Fostering a scientific mindset
2015 - The Science of Nation Building
2016 - Science for the development of the nation
2017 - Science and Technology for the Disabled
2018 - Science and technology for a sustainable future
2019 - Science for the people, people for the science
2020 - Women in Science
2021 - Impact of science and technology: academic skills and work
2022 - An integrated approach to science and technology for a sustainable future