Type Here to Get Search Results !

நுகர்வோர் குறியீட்டு எண் 2022 / CONSUMER INDEX NUMBER 2022

 

TAMIL
  • வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய குறியீட்டு எண் தரவரிசையில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • கடந்த ஜனவரி மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் முறையே 2 மற்றும் 1 புள்ளிகள் குறைந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1095- ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1105 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
  • இதில் வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண் வரிசையில் 1,292 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 869 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. 
  • ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1,278 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 917 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
  • விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களில் அதிகபட்ச சரிவு உத்தர பிரதேசத்தில் (தலா 9 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது. 
  • குறிப்பாக கோதுமை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை வீழ்ச்சி இதற்கு காரணமாகும்.
  • அரிசி, சோளம், காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களில் அதிகபட்சமான உயர்வை இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியன சந்தித்துள்ளன.
ENGLISH
  • Tamil Nadu tops the All India Index of Agricultural and Rural Workers. The All India Consumer Index for Agricultural and Rural Workers for the month of January fell 2 and 1 points, respectively, to 1095 for agricultural workers and 1105 for rural workers.
  • Of these, Tamil Nadu tops the index for agricultural workers with 1,292 points. Himachal Pradesh is in last place with 869 points. Tamil Nadu tops the list of rural workers with 1,278 points, followed by Himachal Pradesh with 917 points.
  • Uttar Pradesh (9 points per capita) saw the sharpest decline in the consumer price index for agriculture and rural workers. This is mainly due to the fall in prices of wheat, cereals, vegetables and fruits.
  • Himachal Pradesh, Rajasthan and Jammu and Kashmir have seen the highest increase in consumer price indices for agricultural and rural workers due to rising prices of rice, maize, vegetables and fruits, including meat.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel