TAMIL
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2021-22 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தச் சாதனை குறிப்பிடப்பட்டுள்ளது.
- நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது .
- நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 2019-20-ல் 60 ஆகவும், 2018-19-ல் 57 ஆகவும் இருந்த இந்தியாவின் மதிப்பெண் 2020-21-ல் 66 ஆக மேம்பட்டுள்ளது.
- நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதில் இந்தியா முன்னேறியுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.
- 2019-20-ல் 10 ஆக இருந்த முன்னணி மாநிலங்களின் எண்ணிக்கை (65-99 மதிப்பெண்கள்) 2020-21ல் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக அதிகரித்துள்ளது.
- கேரளா மற்றும் சண்டிகர் முதலிடத்தில் உள்ள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமாக உள்ளன
- வடகிழக்கு இந்தியாவில் 64 மாவட்டங்கள் முன்னணி செயல்பாட்டாளர்களாகவும், 39 மாவட்டங்கள் செயல்திறன் மிக்கவர்களாகவும் இருந்தன (வட-கிழக்கு பிராந்திய மாவட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீடு 2021-22).
- 2010-20-ல் தன் வனப் பகுதியை அதிகரிப்பதில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்தது; 2011-2021-ல் காடுகளின் பரப்பளவில் மூன்று சதவீதத்திற்கும் அதிகமாகப் பெருகியுள்ளது.
- 2022-ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைப் படிப்படியாக இந்தியா வெளியேற்றுவதோடு, நெகிழி பேக்கேஜிங் கழிவுகளின் சுற்றுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
- கங்கை மற்றும் துணை நதிகளில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் இணக்க நிலை மேம்பட்டுள்ளது.
- காற்று மாசின் அளவை 2024-ம் ஆண்டிற்குள் குறைக்க 132 நகரங்களில் தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- உமிழ்வு குறைப்பு இலக்குகளை 2030-க்குள் அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது; தேவையான வளங்களை கவனமாகப் பயன்படுத்தவும் முடிவு.
- ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ மற்றும் லீடிட் ஆகியவற்றின் கீழ் உலகளாவிய பருவநிலை தலைமைத்துவத்தை இந்தியா வெளிப்படுத்துகிறது.
- This achievement was mentioned in the Economic Survey for the financial year 2021-22 tabled by the Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman in Parliament today. It reaffirmed India's commitment to achieving the social, economic and environmental goals under the Sustainable Development Goals.
- India's score on the Finance Commission's Sustainable Development Goals Index has improved from 60 in 2019-20 and 57 in 2018-19 to 66 in 2020-21. This shows that India has made progress in achieving the Sustainable Development Goals.
- The number of leading states (65-99 marks) has increased from 10 in 2019-20 to 22 states and union territories in 2020-21. Kerala and Chandigarh are the top state and union territories
- In Northeast India, 64 districts were leading operators and 39 districts were active (North-East Regional District Sustainable Development Goals Index 2021-22).
- India ranked third globally in increasing its forest cover in 2010-20; The forest cover has increased by more than three per cent in 2011-2021.
- India will gradually phase out the use of plastics by 2022 and strengthen the environmental economy of plastic packaging waste. The compatibility of polluting factories in the Ganges and tributaries has improved.
- The National Clean Air Program is being implemented in 132 cities to reduce air pollution levels by 2024. India is committed to achieving emissions reduction targets by 2030; Decide to use the necessary resources carefully. India exhibits global climate leadership under ISA, CDRI and LEAD.