உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி
- வெற்றி இலக்கு 40 ரன்களுடன் களமிறங்கிய வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42/2 என்று அபார வெற்றி பெற்று முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றது.
- 17 போட்டிகள் தொடர்ச்சியாக உள்நாட்டில் வென்று வந்த நியூசிலாந்தின் வெற்றி படையணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது வங்கதேசம். வங்கதேசத்துக்கு இது 6வது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றியாகும்.
உலகில் முதல் முறை ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தை மதிப்பில் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது
- அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், பங்கு சந்தை மதிப்பீட்டில் மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 225 லட்சம் கோடி ரூபாய்.
- கடந்த 2007ஆம் ஆண்டு, இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, இதன் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5,800 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்பு குழுத் தலைவராக டி.எஸ்.திருமூா்த்தி பொறுப்பேற்பு
- கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடா்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்பாக பயங்கரவாதத் தடுப்பு குழு (சிடிசி) உருவாக்கப்பட்டது.
- இந்தக் குழுவின் 2022-ஆம் ஆண்டு தலைவராக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பொறுப்பேற்றுள்ளாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக உள்ளது. இந்த உறுப்பினா் காலம் நிகழாண்டு டிச.31-ஆம் நிறைவடைகிறது.
இந்திய பெருங்கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 அதிநவீன போா் விமானங்கள்
- 'நீா்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் போா் விமானமும், கடல் பகுதியை வானிலிருந்து உளவு பாா்க்கும் 'பொஸைடன் 8ஐ' அதிநவீன கடல் ரோந்து விமானமும் அமெரிக்காவிடம் இருந்து கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி இந்தியா பெற்றது.
- இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது அவை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் சோக்கப்பட்டுள்ளன
- 'பொஸைடன் 8ஐ' ரகத்தைச் சோந்த 8 விமானங்களை 2013-இல் முதல்முறையாக இந்தியா வாங்கியது. இவை அரங்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு தற்காலிக தலைவராக அல்கா மித்தல் நியமனம்
- ஓ.என்.ஜி.சி., எனப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகத்தின் தற்காலிக தலைவராக அல்கா மித்தல், 69, பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, ஓ.என்.ஜி.சி.,யின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை அல்கா மித்தலுக்கு கிடைத்துள்ளது.
- பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யில் தலைவராக இருந்த சுபாஷ் குமார் கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இயக்குனராக பணியாற்றி வரும் அல்கா மித்தலை நியமிக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
- சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்பு தொகுத்து வழங்கப்பட உள்ளன. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராச்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி அகர்தலாவில் மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைத்ததுடன், முக்கியத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில், திரிபுரா ஆளுநர் திரு சத்யதேவ் நாராயண் ஆர்யா, முதலமைச்சர் திரு பிப்லப் குமார் தேவ், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திருமதி பிரதீமா பவுமிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதி கொண்ட 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவான இதில் நவீன தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த கட்டமைப்பு முறை செயல்படுகிறது.
- மாநிலத்தில் தரமான கல்வியை வழங்கும் வகையில் 100 நித்ய ஜோதி பள்ளிகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழலையர் பள்ளியிலிருந்து 12ம் வகுப்பு வரை 1.2 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் , அடுத்த மூன்று ஆண்டுகளில் இதற்காக ரூ.500 கோடி செலவிடப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூ.2,950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- சாலை உள்கட்டமைப்பு குடிநீர் விநியோகம், பொருளாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தமானவை இந்தத் திட்டங்கள்.
- ரூ.1,7500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட ஐந்து நெடுஞ்சாலைத் திட்ட கட்டுமானங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 37-ல் பராக் நதியின் குறுக்கே ரூ.75 கோடியில் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தை அவர் தொடங்கி வைத்தார்.
- இந்தப் பாலம் சில்சார் மற்றும் இம்பால் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்ட 2,387 கைபேசி கோபுரங்களையும் மணிப்பூர் மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.
- இம்பால் நகரத்துக்கு குடிநீர் வழங்க வகை செய்யும், ரூ.280 கோடி மதிப்பிலான தவ்பார் பன்னோக்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.51 கோடியில் கட்டப்பட்ட சேனாபதி மாவட்ட தலைமையக குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் டாமன்கிளாங்க் மாவட்டத்தின் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான குடிநீர் இதன் மூலம் வழங்கப்படும்.
- இம்பாலில் ரூ.160 கோடி செலவில் தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியில் கட்டப்பட உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- டிஆர்டிஓ ஒத்துழைப்புடன் ரூ.37 கோடி செலவில் கியாம்கியில் கட்டப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கொவிட் மருத்துவமனையையும் அவர் திறந்து வைத்தார். ரூ.170 கோடி செலவிலான இம்பால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மூன்று திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
- புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கம் மற்றும் பயிற்சிக்கான மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானில் ரூ.240 கோடியில் உருவாக்கப்பட உள்ள மணிப்பூர் கலைத்திறன் நிறுவனத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- லடாக் யூனியன் பிரதேசத்தை நாட்டின் இதரப் பகுதியுடன் இணைக்கும் 11,649 அடி உயரத்தில் உள்ள சோஜி லா மலைக்கணவாயை எல்லைச்சாலைகள் அமைப்பு எட்டி சாதனைப் படைத்துள்ளது. முதல் முறையாக இந்தக் கணவாய் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின்னரும் திறந்துள்ளது.
- விஜயக், பீகான் என்னும் முன்னணி திட்டங்கள் மூலம் எல்லைச்சாலைகள் அமைத்து இந்த சாதனையை எட்டியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பதுடன், லடாக்கின் சமூக பொருளாதார நலத்தையும் இவை காக்கின்றன.
- 2022 என்சிசி குடியரசு தின முகாமை 2022 ஜனவரி 4 அன்று தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் முறைப்படி தொடங்கி வைத்தார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் 29 வரை அணிவகுப்பு மைதானத்தில் இந்த முகாம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலுமிருந்து தனித்துவத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2200 மாணவர்கள் பங்கேற்பார்கள்.