கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் - இந்தியாவுக்கு அளிக்கிறது இலங்கை
- இந்தியாவுக்கு 14 பிரமாண்ட கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதாக, அண்டை நாடான இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
- திரிகோணமலையில் உள்ள பிரமாண்ட எண்ணெய் தொட்டிகள் இரண்டாம் உலகப் போரில் எரிபொருள் சப்ளைக்கு பயன்படுத்தப் பட்டன. இந்த எண்ணெய் தொட்டிகளை பயன்படுத்துவது தொடர்பாக 2002ல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- அதன் தொடர்ச்சியாக தற்போதுள்ள 99 எண்ணெய் தொட்டிகளில், 14 தொட்டிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும். பொருளாதார நெருக்கடி இதற்கு இலங்கை அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 'பராடியன்' நிறுவனத்தை 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 'கையகப்படுத்தியது
- முகேஷ் அம்பானி தலைமையிலான, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பிரிட்டனை சேர்ந்த 'பராடியன்' நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான 'ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார்' பராடியன் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்காக கையெழுத்திட்டு உள்ளது.
- கிட்டத்தட்ட 1,003 கோடி ரூபாய் மதிப்பில், இந்த 100 சதவீத பங்குகளும் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'சோடியம் அயான் பேட்டரி' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பராடியன் நிறுவனத்தில், கூடுதலாக 250 கோடி ரூபாயை முதலீடு செய்து, அதன் வணிகத்தை மேம்படுத்த உள்ளது ரிலையன்ஸ். பராடியன் நிறுவனம், உலகளவில் முக்கியமான பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாகும்.
யு19 ஆசிய கோப்பை 8வது முறையாக இந்தியா சாம்பியன்
- ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா யு19 - இலங்கை யு19 அணிகள் மோதின.
- இலங்கை யு19 அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது.
- 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 8வது முறையாக இளைஞர் ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
- இதுவரை 9 ஆசிய கோப்பை யு19 தொடர்கள் நடந்துள்ளதில், 2017ல் மட்டும் ஆப்கானிஸ்தான் கோப்பையை வென்றுள்ளது. மற்ற 8 தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியனாகி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- நாடு முழுவதும் ஒரே வரியை அமல்படுத்தும்பொருட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.
- இந்நிலையில் தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
- இக்கூட்டத்தில் , 45வது ஜிஎஸ்டி சபைக் கூட்டத்தின் ஜவுளி தொடர்பான பரிந்துரை நடைமுறையைத் தள்ளிவைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.
- இதனை அடுத்து, ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வீதங்களே 2022 ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பின்னரும் தொடரும்.
- ஓராண்டுக்கு ஐ.நா., பயங்கரவாத தடுப்பு குழு செயல் இயக்குனரகத்தின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்க உள்ளது.
- ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பயங்கரவாத தடுப்பு குழு செயல் இயக்குனரகத்தின் பதவி காலத்தை 2025 டிச., 31 வரை புதுப்பிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.