நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்
- மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம். மலைகள் நிறைந்த இந்த மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது. இம்மாநிலத்துக்கு கடந்த 6-ம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
- இதன் ஒரு பகுதியாக, ஜிரிபம் முதல்இம்பால் வரையிலான 111 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் அமையும் இந்த ரயில் வழித்தடத்தில் 46 சுரங்கப்பாதைகள், 153 மேம்பாலங்கள் அமைகின்றன.
- இந்த வழித்தடத்தில் உலகின் மிக உயரமான (141 மீட்டர்) ரயில்வே மேம்பாலம் நோனே மாவட்டத்தில் அமைகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியான ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்குதான் சரக்கு ரயில் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா சினியகோவா சாம்பியன்
- ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா - கேதரினா சினியகோவா (முதல் ரேங்க்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- பைனலில் கஜகஸ்தானின் அன்னா டானிலினா - பீட்ரைஸ் ஹடாட் (பிரேசில்) ஜோடியுடன் மோதிய செக். இணை 6-7 (3-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. கோப்பையுடன் சினியகோவா - கிரெஜ்சிகோவா.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டானியல் மெட்வதேவை ஐந்தரை மணி நேரம் போராடி வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.
- 5 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்த இந்த மாரத்தான் போராட்டத்தில், நடால் 2-6, 6-7 (5-7), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி 2வது முறையாக ஆஸி. ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். ஏற்கனவே அவர் மெல்போர்னில் 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35% அதிகரிப்பு
- கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 35% அதிகரித்து $ 6.1 பில்லியன் ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய இதே காலத்தில் 4.5 பில்லியன் டாலராக இருந்தது.
- டிசம்பர் 2021-ல் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 720.51 அமெரிக்க டாலராக இருந்தது. 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில், இது 28.01% அதிகமாகும்.
- இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா (44.5%), சீனா (15.3%), ஜப்பான் (6.2%) ஆகியவை உள்ளன. இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட எறால் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.
- கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி கடந்த 2017-18-ம் ஆண்டில் 7.02 பில்லியன் டாலர் என்ற மிக அதிக அளவுக்கு நடைபெற்றிருந்தது. தற்போது, கொரோனா பரவலுக்கு இடையிலும், இந்த அதிக அளவை மிஞ்சி சாதனை படைக்கப்படும்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதி ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு
- கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்படுவது வழக்கம்.
- அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
- மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.133 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.532 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 800 என 2021-22 ஆம் ஆண்டிற்கு முதல் தவணை நிதியாக ரூ.665 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
- ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 2500 கிலோ மீட்டர் தூர அளவிலான சாலைகள் இந்த நிதியின் வாயிலாக மேம்படுத்தப்படும். மற்றும் இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.