ஒருநாள் போட்டி - இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
- இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது.
- இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதல்போட்டி கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
- இதையடுத்து இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகனர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களை குவித்தார்.
- பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 48 புள்ளி 1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் மாலன் 91 ரன்கள் குவித்தார்.
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
- கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக தலைநகர் டில்லியில் இந்தியா கேட் பகுதியில் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அமர்ஜவான் ஜோதி என்றும் அணையாத விளக்கு ஏற்றப்பட்டது. இந்த வழக்கு தற்போது வரை 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இந்த போர் நினைவு சின்னத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பாகிஸ்தானுடன் நடந்த போர் முதல் தற்போது வரை நடந்த போர்களில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இந்த சின்னம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது.
- அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு, முப்படை வீரர்களின் மரியாதையுடன், டில்லியில் உள்ள தேசிய போர் நினை சின்னத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்பட்டது.
ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் இந்திய பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி
- ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் இந்திய பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து வடக்கு இந்திய பெருங்கடலில் மூன்றாவது ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
- ஈரானின் ராணுவத்தின் கப்பல்கள் 2022ம் ஆண்டுக்கான கடற்பாதுகாப்பு கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டன.இந்து மகா சமுத்திரத்தில் 17 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த மூன்று நாடுகளின் ராணுவத்தினரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
- எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் காலத்தில் இந்த நாடுகள் தங்களை தற்காத்துக் கொள்ள இந்தப் பயிற்சி உதவும் என கூறப்படுகிறது.
'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' 2022
- "மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட திரு. கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கம் என்ற பதக்கம் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது.
- தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒரு நபருக்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
- இந்தப் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். இதுதவிர ரூ. 25 ஆயிரத்திற்கான வரைவு கேட்புக் காசோலையும், சான்றிதழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
- 2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட இருக்கும் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தினை' மத நல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சேர்ந்த திரு ஜே. முகமது ரஃபி, த/பெ திரு கே. ஜமீஷா என்பவருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
- ஜே. முகமது ரஃபி என்பவருக்கு 26.01. 2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின 'கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்' வழங்க இதன்மூலம் அரசால் ஆணையிடப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் பழமையான ராட்சத பவளப்பாறை
- பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் "பழமையான" பவளப்பாறையை கடல்சார் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இத்தகைய ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறைகளில் இது ஒன்று என்று இந்த பணியை வழிநடத்திய ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு கூறுகிறது.
- நவம்பரில், கடலின் "ஒளிமங்கிய மண்டலம்" என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு, டைவிங் பயணம் மேற்கொண்டப்போது இந்த பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய கடற்பரப்பு-வரைபடம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாகும்.
பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட 'விடுப்பு செயலி' - முதல்வர் ஸ்டாலின் அறிமுகம்
- இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் காவலர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
- இந்நிலையில், CLAPP என்ற விடுப்பு செயலியை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.
- இந்த செயலி மூலமாக, காவலர்கள் தாங்கள் எடுக்கும் விடுப்பின் விவரங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்யப்பட்டதும், விடுப்பு விவரங்கள், மேல் அதிகாரிகளுக்கு சென்று சேரும்.
- இயற்கை வளங்களை சார்ந்திருக்கும் சமூகத்தின் முக்கியமான அம்சம் புலிகள் பாதுகாப்பு என்றும் மக்களின் செயல்பாடு இந்தியாவின் புலிகள் பாதுகாப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் கூறினார். புலிகள் மீட்புத் திட்டம், புலிகள் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு குறித்த முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் முக்கிய நிகழ்வான புலிகள் பாதுகாப்பு குறித்த 4ஆவது ஆசிய அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
- இந்த ஆண்டு பிற்பகுதியில் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறவுள்ள உலகளாவிய புலிகள் குறித்த உச்சி மாநாட்டுக்கான புதுதில்லி பிரகடனத்தை இறுதிப்படுத்துவதை நோக்கி புலிகள் அதிகமுள்ள நாடுகளை இந்தியா கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கூறினார்.
- உலகளாவிய புலிகள் குறித்த உச்சி மாநாட்டுக்கான உரையாடலுக்கு, 2010 புதுதில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு முந்தைய கூட்டத்தில் நகல் பிரகடனம் இறுதி செய்யப்பட்டது.
- இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை, அந்த இடத்தில் அவரது முப்பரிமாணப் படிப்பைச் (ஹாலோகிராம்) சிலையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அவரது பிறந்தநாளில் பிரதமர் திறந்து வைப்பார்.
- ஒட்டுமொத்த நாடே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள தருணத்தில், இந்திய கேட் பகுதியில் அவரது முழு உருவக் கருங்கல் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு இந்தியா பட்டுள்ள நன்றிக்கடன் சின்னமாக இச்சிலை அமையும்.
- ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- கூடுதல் சிறப்பாக இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.