Type Here to Get Search Results !

TNPSC 20th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரிட்டன் ஆஃப் மிலன்
  • இந்திய கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் பலதரப்புப் பயிற்சியான மிலன், 2020 இல் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
  • ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தாலும், மிலனை நடத்திட கடற்படையினர் தீவிரமாக உள்ளனர். மிலன் 2022 மிகப்பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். சுமார் 45 நாடுகள் பங்கேற்கவுள்ளனர்.
  • இது'தோழமை-ஒற்றுமை-ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளுடன் பிப்ரவரி கடைசி வாரத்தில் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. 
  • பயிற்சியின் இறுதி திட்டமிடல் மாநாடு டெல்லியில் நடைபெறும். இதில் பங்கேற்கும் நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உட்பட தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள் பிப்ரவரியில் தொடங்கும் என்று முதல்வர் அறிவிப்பு

  • கங்கைச் சமவெளியில் கி.மு.6-ம் நூற்றாண்டில் இருந்த நகரமயமாக்கம் தமிழகத்தில் இல்லை என்றும், பிராமி எழுத்து மவுரியர் தோற்றுவித்தது என்றும் இதுவரை கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருத்துகளுக்கு அறிவியல்பூர்வமாக விடை அளித்துள்ளது கீழடி ஆய்வு. 
  • தமிழகத்தில் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்ததும், படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்டசமூகமாக விளங்கியதும் கீழடிஅகழாய்வு மூலம் நிலைநிறுத்தப்பட்டது.
  • சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு 1150 என கண்டறியப்பட்டுள்ளது. 'தண் பொருநை' என்ற தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அறிவித்தேன்.
  • இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. 
  • பண்டைய தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ம் ஆண்டில் 7 இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட உள்ளன.
  • அதன்படி, கீழடி மற்றும் அதைசுற்றியுள்ள இடங்களில் (கொந்தகை, அகரம், மணலூர்) 8-ம் கட்டமாகவும், சிவகளையில் 3-ம் கட்டமாகவும், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறையில் 2-ம்கட்டமாகவும் அகழாய்வு பணிகள்நடக்க உள்ளன. வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதல்முறையாக அகழாய்வு நடக்க உள்ளது.
  • தண் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்துக்கு எதிரேகடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. 
  • முதல்கட்டமாக, சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தை கண்டறியும் நோக்கில், கடலோரங்களில் ஆய்வு மேற்கொள்ள இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
  • அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடக்க உள்ளன. இதற்காக வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5கோடி நிதியில் இருந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை
  • ஒடிஷா மாநிலம் சண்டிபூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும் அது துல்லியமாக பாய்ந்து இலக்கை அழித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்துள்ளது.
  • பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை கப்பலையும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தற்போது நிலப்பகுதியிலிருந்து செலுத்தப்பட்ட நிலையில் அண்மையில் கடலில் இருந்து ஏவி சோதிக்கப்பட்டிருந்தது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்திடமும் கடற்படையிடமும் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் இனி அதன் மேம்பட்ட வடிவம் சேர்க்கப்பட உள்ளது
ஜனவரிக்கு ரூ.95,082 கோடி மாநிலங்களுக்கு வரி பகிர்வு, தமிழகத்துக்கு ரூ.3,878.38 கோடி
  • மாநிலங்களுக்கு வரி பகிர்வின் முன் தவணையாக, ரூ.47,541 கோடி விடுவிக்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துளார். இது, ஜனவரி மாதத்துக்கு விடுவிக்கப்படும் வழக்கமான பகிர்வுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாநில அரசுகள் ரூ.95,082 கோடி பெற்றுள்ளன.
  • இது ஜனவரி மாத வரவை விட இரண்டு மடங்கு அதிகம். இதில், தமிழகத்துக்கு ஜனவரி மாத தவணையாக ரூ.1,939.19 கோடி, முன் தவணையாக ரூ.1,939.19 கோடி என மொத்தம் ரூ.3,878.38 கோடி வழங்கப்படுகிறது. 
  • அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு மொத்தம் ரூ.17,056.66 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.3,467.62 கோடி, கேரளாவுக்கு ரூ.1,830.38 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.6,006.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. 
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என, 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், இந்திய பொருளாதாரம் நல்ல விரிவாக்கத்தை காட்டியுள்ளதாகவும், ரியல் ஜி.டி.பி., எனும், நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகமாக, 9.1 சதவீதமாக அதிகரித்து இருக்கும் என்றும், இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
  • நடப்பு நான்காவது காலாண்டில், ஒமைக்ரான் தாக்கம் எதிர்பார்ப்பை விட அதிகம் இருப்பின், அது அடுத்த நிதியாண்டுக்கான ஒப்பீட்டில், சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
  • மேலும், அரசும், ரிசர்வ் வங்கியும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
  • இந்த மாதத்தின் துவக்கத்தில், தேசிய புள்ளியியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மொரீசியஸில் வீடுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத் கூட்டாக தொடங்கி வைத்தனர்
  • மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜகுநாத் ஆகியோர் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.
  • இன்றைய நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் இதர உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக , மொரீசியஸ் அரசுக்கு 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும சிறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்து முக்கிய உரையாற்றினார்
  • சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.
  • மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் திரு ஜி.கிஷன் ரெட்டி, திரு பூபேந்திர யாதவ், திரு அர்ஜுன் ராம் மெக்கால், திரு பர்ஷோத்தம் ரூபாலா திரு கைலாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
2021 டிசம்பர் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்கள்
  • 2021 டிசம்பர் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் தலா 5 புள்ளிகள் உயர்ந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1097-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1106 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
  • வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1290 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 861 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
  • ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1276 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 915 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
  • விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச அதிகரிப்பு தமிழ்நாட்டில் (தலா 20 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது. 
  • முக்கியமாக காய்கறிகள் மற்றும் பழங்கள், வெங்காயம், பச்சை/காய்ந்த மிளகாய், புளி போன்றவற்றின் விலை உயர்வு இதற்கு காரணமாகும்.
  • கோதுமை, பருப்பு வகைகள், வெங்காயம், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியின் காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்சமாக சரிவை இமாச்சலப் பிரதேசம் (முறையே 12 புள்ளிகள் மற்றும் 14 புள்ளிகள்) சந்தித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel