உலகப் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு 2022
- சர்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாகத் திகழும் "உலகப் பொருளாதார கூட்டமைப்பின்” 5 நாள் உச்சி மாநாடு (World Economic Forum's “Davos Agenda summit”) ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி உள்ளது.
- சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த உச்சி மாநாட்டை உலகப் பொருளாதார கூட்டமைப்பு நடத்தி வரும் நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
- இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான உச்சி மாநாட்டை காணொலி வழியில் 5 நாள்களுக்கு அந்த அமைப்பு நடத்த உள்ளது. "கரோனா பாதிப்பு” என்ற தலைப்பிலும், அடுத்ததாக "நான்காவது தொழில் புரட்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு” (technology cooperation in the fourth industrial revolution) என்ற தலைப்பிலும் இரண்டு அமர்வுகள் நடைபெற உள்ளன.
- "உலகின் நிலை” (Theme 'The State of the World) என்ற கருப்பொருளில் கூட்டப்படுகிறது இந்த 2022-ஆம் ஆண்டிற்கான உச்சி மாநாடு.
- முதல் நாளில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் காணொலி மூலம் உரையாற்றுகின்றனா்.
- சுவிட்சா்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த உச்சிமாநாட்டை உலகப் பொருளாதார கூட்டமைப்பு நடத்தி வரும் நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
- மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியில் திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளாா். அவரைத் தொடா்ந்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்ற உள்ளாா்.
- இஸ்ரேல் பிரதமா் நஃப்தாலி பென்னெட், ஜப்பான் பிரதமா் கிஷிடோ ஃபுமியா ஆகியோா் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்ற உள்ளனா்.
- அப்போது உலகளாவிய சமூக ஒப்பந்தம் மற்றும் தடுப்பூசி சமபங்கீட்டில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் சிறப்பு அமா்வும் நடைபெற உள்ளது. இந்த அமா்வில் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம், சீரம்-இந்தியா நிறுவன தலைவா் அதாா் பூனாவாலா உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
- ஜொமன் பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் மாநாட்டில் புதன்கிழமை சிறப்பு உரை நிகழ்த்த உள்ளாா். அன்றைய தினம் எரிசக்திக்கான மாற்றுத் திட்டம், பருவநிலை தொடா்பான புதிய கண்டுபிடிப்புகள் அளவீடு, லத்தீன் அமெரிக்க விவகாரம் ஆகிய தலைப்புகளில் அமா்வுகள் நடைபெற உள்ளன.
- ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோன் டொ லியென், இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஆகியோா் மாநாட்டில் வியாழக்கிழமை சிறப்பு உரையாற்ற உள்ளனா்.
- மேலும், நிலைத்த நீடித்த எதிா்காலத்துக்கான சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆட்சிமுறை அளவீடுகள் என்ற தலைப்பிலும், சா்வதேச வா்த்தகம், விநியோகச் சங்கிலி ஆகியவற்றின் நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமா்வுகளும் நடைபெற உள்ளன.
- உச்சிமாநாட்டின் கடைசி நாளில் ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன், நைஜீரியா துணை அதிபா் யெமி ஓசின்பஜோ ஆகியோா் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளனா்.
- அன்றைய தினம் சா்வதேச பொருளாதாரம், எதிா்காலத் தயாா்நிலையை உருவாக்குதல் மற்றும் இயற்கை-நோமறை பொருளாதாரத்தை விரைவுபடுத்துதல் ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமா்வுகளும் இடம்பெற உள்ளன.
- உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில், உலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கையின் பூங்கொத்தாக மாறியுள்ளது.
- ஜனநாயகம் மீதான நம்பிக்கையை, தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை, திறமை மீதான நம்பிக்கையை உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்துரைத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கிறோம்.
- இந்தியாவில் ஒரே வருடத்தில் 160 டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இது நம்பிக்கை கொடுத்துள்ளது.
- கொரோனாவிற்கு இடையிலும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம் என்ற அடிப்படையில் உலக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா உதவிகொண்டு இருக்கிறது.
- இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் உகந்த நேரம். இந்தியாவில் மாபெரும் இளைஞர் சக்தி இருக்கிறது. 2014ல் இந்தியாவில் வெகு சில தொழில் முனைவோர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இந்திகாவில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் உள்ளன.
- இந்தியாவில் 80க்கும் அதிகமான யுனிகார்ன்கள் உள்ளன. 2021ல் மட்டும் 40 புதிய யுனிகார்ன்கள் உருவாகி உள்ளன. அடுத்த 25 வருடங்களுக்கான தலை சிறந்த திட்டங்கள் இப்போதே இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. நீடித்த, நிலையான வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருக்கிறது, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிருக்கு ஐரோப்பாவின் 'ரவுல் வாலன்பெர்க்' பரிசு
- வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி தனது உயிரைப் பணயம் வைத்து மிகவும் பின்தங்கிய பகுதியினருக்கு உதவியுள்ளார். வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி 3,000 மனித உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 25,000 பேரை மீட்டுள்ளார்.
- பட்டியலின மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் இந்த விருது அங்கீகரிக்கிறது என ஐரோப்பிய கவுன்சிலின் பொதுச் செயலாளர் மரிஜா பெஜினோவிக் புரிக் தெரிவித்துள்ளார்.
- இந்த விருது வழங்கும் விழா 19ஆம் தேதி ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல்லாயிரக்கணக்கான யூதர்களை ஹோலோகாஸ்டிலிருந்து ரவுல் வாலன்பெர்க் என்ற ஸ்வீடிஷ் ராஜதந்திரி காப்பாற்றியதற்காக 1945இல் அவர் கைது செய்யப்பட்டார்.
- 2014 இல் தொடங்கி, ஸ்வீடிஷ் அரசாங்கம் மற்றும் ஹங்கேரிய பாராளுமன்றத்தின் முன்முயற்சியாக, ஐரோப்பா கவுன்சில் அவரது சாதனைகளின் நினைவாக ரவுல் வாலன்பெர்க் பரிசை உருவாக்கியது.
- 10,000 பவுண்ட் மதிப்புள்ள இந்த பரிசு, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு தனி நபர், தனிநபர்கள் குழு அல்லது ஒரு அமைப்பு மூலம் அசாதாரண மனிதாபிமான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- குறிப்பாக சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியாகி உள்ளது. அதே போல தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (பொது) மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு (பொது பிரிவு) ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது அரசு.
- கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகள் மகளிருக்கு (பொது பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குநராக பா.செந்தாமரைக்கண்ணன் நியமனம்
- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த நா.புவியரசன் தற்போது காலநிலை சேவையில் ஆவணக்காப்பக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
- புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தாமரைக்கண்ணன், இதற்கு முன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய ஆவண மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா்.
- மேலும், சென்னையில் காலநிலை சேவை, விவசாய ஆலோசனை சேவை உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். செந்தாமரைக் கண்ணன் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
ஐஎன்எஸ் விக்ராந்த் மூன்றாம் கட்ட சோதனை வெற்றி
- ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 40,000 டன் எடை கொண்ட இந்த விமானம்தான் உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் முதல் விமானம் தாங்கி கப்பலாகும்.
- இதன் முதல் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 5 நாட்களுக்கு நடந்தது. பின்னர் 2ம் கட்ட சோதனை கடந்த ஆண்டு அக்டோபரில் 10 நாட்களுக்கு நடந்தது. இதைத் தொடர்ந்து 3ம் கட்ட ஆழ்கடல் சோதனை கடந்த 9ம் தேதி தொடங்கியது.
- இதில், கப்பலில் இடம்பெற்றுள்ள பல்வேறு கருவிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்சார் கருவிகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத் தலைவராக உ.மதிவாணன் நியமனம்
- தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.
- தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ.மதிவாணனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17-1-2022) ஆணையிட்டுள்ளார்.
- சிறப்பு இழைகள் மற்றும் புவிசார் ஜவுளி துறைகளில் ரூ. 30 கோடி மதிப்பிலான 20 திட்டங்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தலைமையில் ஜவுளி அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. முதன்மைத் திட்டமான ‘தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின்’ கீழ் இந்த யுக்தி சார்ந்த ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளன .
- 20 ஆராய்ச்சி திட்டங்களில், 16 சிறப்பு இழைகள் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 சுகாதார திட்டங்கள், தொழில் மற்றும் பாதுகாப்பு துறையில் 4 திட்டங்கள், எரிசக்தி சேமிப்பில் 3 திட்டங்கள், ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் 3 திட்டங்கள், விவசாயத்தில் 1 மற்றும் புவிசார் துணிகள் (உள்கட்டமைப்பு) துறையில் 4 திட்டங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
- இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்திலும், குறிப்பாக சுகாதாரம், தொழில் மற்றும் பாதுகாப்பு துறை, எரிசக்தி சேமிப்பு, ஜவுளிக் கழிவு மறுசுழற்சி, வேளாண் மற்றும் உள்கட்டமைப்பில் ஒரு படிநிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அமர்வில் பல்வேறு முன்னணி இந்திய நிறுவனங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் (ஐஐடிகள், டிஆர்டிஓ, பிடிஆர்ஏ) உள்ளிட்டவை பங்கேற்றன.
- முன்னதாக, 26 மார்ச் 2021 அன்று ஜவுளி அமைச்சகத்தால் ரூ 78.60 கோடி மதிப்பிலான 11 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- என் எல் சி இந்தியா நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி காணொலிக்காட்சி மூலம் வெளியிட்டார். என் எல் சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்காக இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.