ரூ. 2,770 கோடிக்கு பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிடம் வாங்கும் பிலிப்பைன்ஸ்
- கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும்.
- இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது.
- இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இந்நிலையில் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
- ஏற்கனவே பாதுகாப்பு தளவாடங்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்நிலையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க `நோட்டீஸ் ஆஃப் அவார்ட்` ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் டெல்பின் லோரன்சனா விரைவில் கையெழுத்திடவுள்ளார்.
- இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் ரூ.,2770 கோடி மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து பிலிப்பைன்ஸிடம் வழங்கும். இது தவிர இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளும், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
2020 - 21ம் ஆண்டுக்கான சிறந்த பரிந்துரைகளுக்கு, ரயில்வே அமைச்சகத்தால் பரிசு
- ஒவ்வொரு ஆண்டும் ரயில்வேயில் சிறந்த மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை, அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் தயாரிப்பு பணிமனைகளிலும், இந்திய ரயில்வே அமைச்சகத்தால் பெறப்பட்டு, சிறந்த பரிந்துரைக்கு பரிசு வழங்கப்படும்.
- இதையொட்டி, 2020 - 21ம் ஆண்டுக்கான சிறந்த பரிந்துரைகளுக்கு, ரயில்வே அமைச்சகத்தால் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் பாதையில் மேம்பாட்டு பணிக்காகவும், மின் சிக்கனம், ஆண்டுக்கு 110 கோடி ரூபாய் வரை சேமிக்கும் வகையில், மின்சார ரயின் இன்ஜின் இயக்கம் குறித்து சிறந்த பரிந்துரை வழங்கியதற்காக, தெற்கு, மேற்கு ரயில்வேக்கு முதல் பரிசு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
- இரண்டு நிறுவனங்களுக்கு பரிசு தொகை 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.மின் சக்தியை இழப்பின்றி முழுதுமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டி பரிந்துரைக்கு, தெற்கு ரயில்வேக்கு மூன்றாவது பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டு, 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
- ரயில் பெட்டி தயாரிப்பில், பக்கவாட்டு சுவர் மற்றும் கூரை இணைப்புகளின் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக, சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., அனுப்பிய பரிந்துரை இரண்டாம் பரிசுக்கு தேர்வாகி உள்ளது.
- மின் வினியோக மாற்றிகள் வாயிலாக மின்சார ரயில் இன்ஜினில் இருந்து பெட்டிக்கு மின் தொடர்பு மேம்பாட்டுக்கு கிழக்கு ரயில்வேயால் அனுப்பப்பட்ட பரிந்துரை சிறந்த பரிந்துரைக்கான இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
India Open 2022 பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார் லக்ஷ்யா சென்
- கேடி ஜாதவ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா ஓபன் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் லக்ஷ்யா சென் வென்றார்.
- 54 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிச்சுற்றில் 20 வயதான சென், சிங்கப்பூரின் லோ கீன் யூவை 24-22, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
ஏழை நாடுகளுக்கு 100 கோடி கரோனா தடுப்பூசிகள் - உலக சுகாதார அமைப்பு புதிய சாதனை
- ஐ.நா சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் 'கோவேக்ஸ்' திட்டத்தின்கீழ் இதுவரை 100 கோடி தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
- ருவாண்டாவுக்கு சனிக்கிழமை 11 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கியதன் மூலம் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.
- கரோனா நோய்த்தொற்று தொடங்கிய பின்னா் பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை கோவேக்ஸ் என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை 2020, ஏப்ரலில் தொடங்கியது.
- வளா்ந்த, பணக்கார நாடுகள் இத்திட்டத்தின்கீழ் நன்கொடையாக அளிக்கும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.
அரபிக்கடலில் இந்திய - ரஷிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சி
- அரபிக் கடலில் இந்திய- ரஷிய கடற்படையினா் வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் ஈடுபடும் இருநாட்டுக் கடற்படைகளும் இயற்கைப் பேரிடா் அல்லது போா் போன்ற சூழ்நிலையில், சுமுகமான ஒத்துழைப்பையும், தகவல்தொடா்பையும் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
- முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொச்சி போா்க்கப்பலும், ரஷியாவின் அட்மிரல் ட்ரிபியூட்ஸ் போா்க்கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன.
- கடல்சாா் நடவடிக்கைகள், ஹெலிகாப்டா்களை இருநாட்டுக் கப்பலிலும் தரையிறக்குவதற்கான செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் இந்தப் பயிற்சி பறைசாற்றியதாக இந்திய கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட 1,000 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
- இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளா்களுக்காக இந்தியாவின் நிதியுதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4,000 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
- இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட 1,000 வீடுகள், பொங்கல் தினமான சனிக்கிழமையன்று இந்திய வம்சாவளி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கோட்டகலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே, இலங்கை அமைச்சா்கள் நமல் ராஜபட்ச, ஜீவன் தொண்டமான் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளிடம் வீட்டுக்கான சாவிகளை ஒப்படைத்தனா்.
- இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை 46,000 வீடுகள் புதிதாக கட்டிக்கொடுக்கப்பட்டு அல்லது மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
- அடுத்த கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராணுவ தளத்தில் பிரமாண்ட தேசியக்கொடி
- நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், 1949 ஜனவரி 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றார். அதை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி தேசிய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ தளத்தில், இந்திய ராணுவ தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது கதர் துணியால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட இந்திய தேசிய கொடியை, இந்திய ராணுவத்தின் தென்மண்டல பிரிவினர் காட்சிப்படுத்தினர்.
- 225 அடி நீளமும், 150 அடி அகலமும் உடைய அந்த கொடியின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 4-0 என தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
- முதல் 4 போட்டிகளில் மூன்றில் ஆஸ்திரேலியாவும், ஒன்று டிராவிலும் முடிந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஹோபார்ட் நகரில் நடைபெற்றது.
- இதில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய 303 ரன்களும், இங்கிலாந்து அணி 188 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 155 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 271 ரன்கள் என்ற இலக்கை எட்டி, ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
- முடிவில் இங்கிலாந்து 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 : 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
- 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (U-19 World Cup 2022) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் ஜனவரி 13 அன்று தொடங்குகிறது.
- இப்போட்டியில் இதுவரை அதிகபட்சமாக இந்தியாவே 4 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. நடப்புச் சாம்பியனாக வங்கதேசம் உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுவது இது முதல் முறையாகும்.