Type Here to Get Search Results !

குமாரசுவாமி புலவர் / KUMARASWAMY PULAVAR

 

TAMIL
  • தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார்.
  • இவர் தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். 
  • கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால், 'புலவர்" என்று அழைக்கப்பட்டார்.
  • ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வாழ்நாள் முழுவதும் அங்கு பணியாற்றினார். இவரது முனைப்பால் உயர்கல்வி நிறுவனமாக இது வளர்ச்சி அடைந்தது.
  • 1913ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு சார்பில் பாதிரியார் சாண்டிலர் தலைமையில் தயாரிக்கப்பட்ட தமிழ் அகராதியை ஆராய்ந்து, திருத்தும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது. இவர் கூறிய அனைத்து திருத்தங்களும் அதில் சேர்க்கப்பட்டன.
  • நகுலமலைக் குறவஞ்சி நாடகம், ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, ஆத்திச்சூடி வெண்பா, சிவசேத்திரம் விளக்கம், உரிச் சொனிகண்டு உள்ளிட்டவற்றை திருத்த உரையுடன் திறனாய்வு செய்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
  • ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சமயச் சொற்பொழிவாளர் என பன்முகத் திறன் கொண்ட குமாரசுவாமி புலவர் 1922ஆம் ஆண்டு மறைந்தார்.
ENGLISH
  • A. Kumaraswamy Pulavar, a Tamil scholar who worked for the development of Tamil literature, was born on January 18, 1854 in Chunnakam, Jaffna, Sri Lanka. He was educated at the age of 5 by Kulakuru Vedaranyam Namasivaya Desikar. He also chose to study jurisprudence, Yapparungalakarikai and Tolkappiyam.
  • He was nicknamed the 'Whistleblower' because of his skill in singing, writing essays, and lecturing.
  • Arumuga was appointed as the headmaster of the novelist's Color Farm Vegan School. He worked there for the rest of his life. It developed into a higher education institution by his initiative.
  • In 1913 he was given the responsibility of researching and editing the Tamil dictionary prepared under the leadership of Priest Chandler on behalf of the Government of Chennai. All the amendments he made were included in it.
  • He has reviewed and published Nakulamalai Kuravanchi Natakam, Asarakkovai, Nanmanikkadigai, Attichudi Venpa, Sivachetram commentary, Uric Sonikandu with revised text.
  • Kumaraswamy Puluvar, a multi-talented author, poet, columnist and religious orator, passed away in 1922.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel