பெயரின் 'இனிஷியலையும்' தமிழில் எழுத அரசு உத்தரவு
- பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழில் பெயர் எழுதும் போது, 'இனிஷியல்' எனும் முன் எழுத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பெய்ஜிங் ஒலிம்பிக் - ராஜீயப் புறக்கணிப்பு
- சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கா் இன முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த நாட்டுக்கு தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்யும் வகையில், ஏற்கெனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக்கை போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது நினைவுகூரத்தக்கது.
- அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் கனடாவும் இணைந்துள்ளன.
- பெய்ஜிங் மற்றும் அதன் புகா் பகுதிகளில் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
கோரிக்கைகளை ஏற்பதாக அரசு அதிகாரப்பூர்வ கடிதம் ஓராண்டு விவசாயிகள் போராட்டம் வாபஸ்
- கடந்த மாதம் பிரதமர் மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதேபோல் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
- இதனை தொடர்ந்து நேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வமாக விவசாய சங்கங்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
- இதில் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக குழு அமைப்பது மற்றும் விவசாயிகள் மீதான வழக்கை உடனடியாக வாபஸ் பெறுவதாகவும், இழப்பீடு தொகை குறித்து உத்தரப்பிரதேச, அரியானா மாநில அரசுகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வேளாண் துணை அமைச்சகம் உறுதி அளித்திருந்தது. இதனை ஏற்ற விவசாயிகள் தங்களது ஓராண்டு கால போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
- போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை, உள்நாட்டு விநியோகச் சங்கிலி மற்றும் சரக்கு போக்குவரத்து, அதிக நிதிச் செலவு, போதிய மின்சாரம் கிடைக்காமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் குறைந்த கவனம் செலுத்துதல் உள்ளிட்டவற்றால் இந்திய மருத்துவ சாதனத் துறை பாதிக்கப்படுகிறது.
- உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் மருத்துவ சாதனத் துறையில் பெரியளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மருந்துகள் துறை அறிமுகப்படுத்தியது. ரூ 3,420 கோடி மொத்த மதிப்பீட்டில் 2020-21 முதல் 2027-28 வரை இது செயல்படுத்தப்படும்.
- பிலிப்ஸ் குளோபல் பிஸினஸ் சர்வீசஸ், அலைடு மெடிக்கல் லிமிடெட், டெக் மவுண்ட் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், மைக்ரோடெக் நியூ டெக்னாலஜீஸ், மெரில் ஹெல்த்கேர், என்விஷன் சயின்டிஃபிக், பயோ இந்தியா இண்டெர்வென்ஷனல் டெக்னாலஜிஸ். இவற்றின் எட்டு ஆலைகளில் ரூ 260.40 கோடி முதலீடு செய்யப்படும், 2,599 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஜி-20-ன் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தோனேஷியாவால் பாலியில் நடத்தப்பட்ட ஜி-20 சர்வதேசக் கருத்தரங்கில் புதுதில்லியிலிருந்து மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இணையவழி கலந்து கொண்டார்.
- “இணைந்து மீளுதல், வலுவாக மீளுதல்” என்ற இந்த ஆண்டுக்கான ஜி-20ன் மையப்பொருளில் பேசிய நிதியமைச்சர், வலுவான, நீடித்த, சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய பொருளாதாரத்தின் மீட்சி குறித்து வலியுறுத்தினார்.
- மகாராஷ்ட்ரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
- இலக்கிடப்பட்ட பொது விநியோக முறை கட்டுப்பாட்டு ஆணை 2015ன் கீழ், நியாயவிலைக் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் தவிர்த்த இதர பொருட்களை விற்க இந்தக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.