தென் ஆப்பிரிக்கா இனவெறி எதிா்ப்பின் சின்னம் டெஸ்மண்ட் டுட்டு மறைவு
- எதிா்ப்பின் சின்னமாகத் திகழ்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாதிரியாா் டெஸ்மண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
- 90 வயதான டெஸ்மண்ட் டுட்டு, நோபல் பரிசு பெற்று உயிரோடு இருந்த கடைசி தென் ஆப்பிரிக்கா் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜோஹன்னஸ்பா்க் மற்றும் கேப் டவுன் நகர தேவாலயங்களில் முதல் கருப்பின தலைமைப் பாதிரியாராகப் பொறுப்பு வகித்த அவா், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் செயல்பட்டு வந்தாா்.
விஜய் ஹசாரே கோப்பை இமாச்சல் சாம்பியன்
- சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த பைனலில் தமிழகம் - இமாச்சல் அணிகள் மோதின. டாஸ் வென்ற இமாச்சல் முதலில் பந்துவீச, தமிழக அணி 49.4 ஓவரில் 314 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
- அடுத்து களமிறங்கிய இமாச்சல் 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- மேற்கொண்டு ஆட்டம் தொடர முடியாத நிலையில், 'விஜேடி' முறையில் இமாச்சல் 11 ரன் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இமாச்சல் முதல் முறையாக விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக அரோரா தேர்வு செய்யப்பட்டார்.
- துரதிர்ஷ்டவசமாக நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட தமிழக அணி 2வது இடத்துடன் திருப்தியடைந்தது.
இரா.நெடுஞ்செழியன் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்
- கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் இரா.நெடுஞ்செழியனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவையையொட்டி அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் அதற்கான தொகையை அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் வழங்கினார்.
தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி - உபி ஹாக்கி அணி கோப்பையை வென்றது
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி இந்தியா சார்பில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு ஏற்பாட்டின் பெயரில் கடந்த 16-ஆம் தேதி முதல் தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷீப் ஆடவருக்கான போட்டிகள் தொடங்கி 10 நாள்கள் நடைறெ;றது.
- இதையெடுத்து இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
- போட்டியின் இறுதியில் உத்தரபிரதேச ஹாக்கி அணி 3 - 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தங்க கோப்பையை தட்டிச் சென்றது. 2வது இடத்தினை சண்டிகர் அணி பெற்ற வெள்ளி கோப்பையை கைப்பற்றியது.
- முன்னதாக நடைபெற்ற 3,4-வது இடத்திற்கான போட்டியில் ஒடிசா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி வெண்கல கோப்பையை தட்டிச்சென்றது.
துப்பாக்கி சுடுதல் ருத்ராங்க் ஷ் 'தங்கம்'
- மகாராஷ்டிராவில், 12வது லக்சயா கோப்பை 10 மீ., 'ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதன் சீனியர் பிரிவில் மகாராஷ்டிரா வீரர் ருத்ராங்க் ஷ் பாட்டீல், 251.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
- சமீபத்தில் போபாலில் நடந்த 64வது தேசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற இவருக்கு, தங்கப் பதக்கத்துடன் ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அடுத்த இரு இடங்களை முறையே இந்திய கடற்படை அணி வீரர் கிரண் ஜாதவ், உ.பி.,யின் ஆயுஷி குப்தா கைப்பற்றினர்.
- ஜூனியர் பிரிவில் மகாராஷ்டிராவின் ஆர்யா போர்ஸ், 251.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அடுத்த இரு இடங்களை முறையே மகாராஷ்டிராவின் மயூரி பவார், முஸ்கன் கச்சோலியா கைப்பற்றினர்.
- பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையம், பிரம்மோஸ் தயாரிப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு மற்றும் விமானவெளி உற்பத்தி தொகுப்புகளை மேம்படுத்தும் வகையில், சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் இது உருவாகிறது.