Type Here to Get Search Results !

TNPSC 8th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

2020ல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
  • கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். 
  • ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். பின்னர், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
  • அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டு 141 பேருக்கும், 2021ம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை. 
  • இந்நிலையில், 2020, 2021ல் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி 2 கட்டமாக ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். 
  • நிகழ்ச்சியில் 73 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி மதிப்பில் கலைஞர் நினைவிடம் அரசாணை வெளியீடு
  • சென்னை காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்
  • சீனா 'தியாங்காங்' என்ற விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 450 கி.மீ. உயரத்தில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 
  • இதற்கான பாகங்களை விண்கலங்கள் மூலம் பலகட்டங்களாக சீனா கொண்டு சென்றுள்ளது. அதன் மையத் தொகுதியான 'தியான்ஹே' ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், சென்ஷோ-13 என்ற விண்கலம் மூலம் வாங் யாபிங் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரா்கள் கடந்த அக். 16-ஆம் தேதி விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனா். 
  • பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் உள்ள விண்கலம் அல்லது விண்வெளி நிலையத்திலிருந்து அதன் பராமரிப்பு, கட்டமைப்புப் பணிக்காக வீரா்கள் வெளியே வருவது 'விண்வெளி நடை' எனப்படுகிறது.
  • சீன விமானப் படை பெண் விமானியான வாங் யாபிங் (41), விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தாா். இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை அவா் படைத்துள்ளாா்.
  • இதற்கு முன்னதாக, 1984-ஆம் ஆண்டுமுதல் 2019, அக்டோபா் வரை மொத்தம் 15 பெண்கள் 42 முறை விண்வெளி நடையில் பங்கேற்றுள்ளனா். ரஷியாவை சோந்த ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா என்பவா்தான் விண்வெளியில் நடந்த முதல் பெண் ஆவாா்.
பல்வேறு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
  • பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் சாலை திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • ஸ்ரீசந்த் தியானேஸ்வர் மகராஜ் பால்கி மார்க் மற்றும் சந்த் துகாரம் மகராஜ் பால்கி மார்க் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 
  • சுமார் 221 கி.மீ தூரம் உள்ள சந்த் தியானேஷ்வர் மகராஜ் பால்கி மார்க் பகுதியில் தேவிகாட் என்ற இடத்திலிருந்து மொஹால் வரையும் மற்றும் 130 கி.மீ தூரம் உள்ள சந்த் துகாராம் மகராஜ் பால்கி மார்க் பகுதியில் படாஸ் என்ற இடத்திலிருந்து தாண்டேல் - போன்டேல் வரை இரு புறங்களிலும் நடைபாதையுடன் கூடிய பிரத்தியேக நான்கு வழிச்சாலை முறையே ரூ. 6,690 கோடி மற்றும் ரூ.4,400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சியில், பல தேசிய நெடுஞ்சாலைகளில் 223 கி.மீக்கும் மேற்பட்ட தூரத்துக்கு ரூ.1,180 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்ட சாலை திட்டங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். 
  • மஸ்வத்-பிலிவ்-பந்தர்பூர் (என்எச் 548இ), குர்துவாடி-பந்தர்பூர் (என்எச் 965சி), பந்தர்ப்பூர்-சங்கோலா (என்எச் 965சி), தெம்புர்ணி-பந்தர்பூர் (என்எச் 561ஏ) மற்றும் பந்தர்பூர் -மங்கல்வேதா-உமாதி (என்எச் 561ஏ) ஆகிய சாலை திட்டங்களும் இதில் அடங்கும்.
இந்திய ராணுவத் தளவாட உற்பத்தித் திட்டங்கள் 2021 குறித்த இணையவழி கருத்தரங்கம்
  • ராணுவத் தளவாட உற்பத்தித் திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு 2021 நவம்பர் 8 அன்று ஃபிக்கி-யுடன் இணைந்து இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. 2016ல் உற்பத்தி நடைமுறையின் தொடக்கத்திற்குப் பின் நடத்தப்படும் 6வது கருத்தரங்கமாகும் இது.
  • ராணுவத்தின் துணைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சந்தானு தயாள், ஃபிக்கி-யின் பாதுகாப்பு மற்றும் விண்வெளிக் குழுவின் தலைவர் திரு எஸ் பி ஷுக்லா பாதுகாப்புத்துறை தளவட உற்பத்தி பிரிவின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
  • இந்த இணையவழி கருத்தரங்கின் போது இந்திய ராணுவம் 6 புதிய இரண்டாம் கட்ட திட்டங்களை வெளியிட்டது.
கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டம்
  • கோவா கடல்சார் கூட்டம் - 2021-ன் மூன்றாவது பதிப்பை 2021 நவம்பர் 7 முதல் 9 வரை கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியின் கீழ் இந்திய கடற்படை நடத்தியது.
  • "கடல்சார் பாதுகாப்பு மற்றும் பெருகிவரும் புதுவகை அச்சுறுத்தல்கள்: இந்திய பெருங்கடல் நாடுகளின் கடற்படைகளின் துடிப்பான பங்களிப்பு குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் இந்தாண்டின் கூட்டம் நடைபெற்றது.
  • வங்கதேசம், கமொரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், மியான்மர், செஷில்ஸ், சிங்கப்பூர் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 12 இந்திய பெருங்கடல் நாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டல் திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
  • இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டல் திட்டத்தை மத்திய இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
  • நாடு முழுவதும் மொத்தம் 278 இளங்கலை கல்லூரிகள் தற்போது நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ் ஆதரவு பெறுவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 
  • 2018-19-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்களாக வகைப்படுத்தியதன் மூலம், நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சமமான களம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel