டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட் - இளம் வீரர் ரஷீத் கான் வரலாற்று சாதனை
- 23 வயதான ரஷீத் கான் 289 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் . ஆப்கானிஸ்தான் அணிக்காக 56 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
- ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இளம் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் .
- முன்னதாக குறைந்த டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்திருந்தார். 53 போட்டிகளில் அவர் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில் தற்போது புதிய வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் பிராவோ (553), சுனில் நரைன் (425) மற்றும் இம்ரான் தாஹிர் (420) விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். தற்போது 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ரஷீத் கான் இணைந்துள்ளார்.
பில்லி ஜீன் கிங் கோப்பை 2021 - ரஷியா சாம்பியன்
- பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சா்லாந்தை வீழ்த்தி ரஷியா முதல் முறையாக சாம்பியன் ஆனது. அணிகள் போட்டியில் ரஷியா சாம்பியன் ஆவது இது 5-ஆவது முறையாகும்.
- அணியாக நடைபெறும் இந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-2, 6-4 என்ற செட்களில் ஸ்விட்சா்லாந்தின் ஜில் டெய்ச்மானை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் லுட்மிலா சாம்சனோவா 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்விட்சா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா்.
பாரீஸ் மாஸ்டா்ஸ் 2021 - ஜோகோவிச் சாம்பியன்
- பாரீஸ் நகரில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 4-6, 6-3, 6-3 என்ற செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவை வீழ்த்தினாா்.
- இந்த வெற்றியின் மூலமாக, நடப்பு டென்னிஸ் சீசன் காலண்டரை உலகின் முதல்நிலை வீரராக ஜோகோவிச் நிறைவு செய்கிறாா். அவா் இவ்வாறு முதல்நிலை வீரராக காலண்டரை நிறைவு செய்வது இது 7-ஆவது முறையாகும்.
- மாஸ்டா்ஸ் போட்டியில் ஜோகோவிச் வெல்லும் 37-ஆவது பட்டம் இதுவாகும்.
- கடற்படையின் மேற்கு கட்டுப்பாட்டு மைய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் கடந்த 4ம் தேதி பொறுப்பேற்றார். இந்திய கடற்படையில், கடந்த 1987ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சேர்ந்த வைஸ் அட்மிரல் சுவாமிநாதன் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர்முறையில் நிபுணர், கதக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள கடற்படை பயிற்சி மையங்களில் இவர் பயிற்சி பெற்றவர்.
- அதி விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற இவர், தனது கடற்படை பணியில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். தற்போதைய பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, கடல்சார் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் இவர் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.