ஐ.நா., பருவ நிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
- ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் நடந்த ஜி - 20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கும், ஐ.நா., பருவ நிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.
- இதையடுத்து கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்கையை முறையை நாம் அமைத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றார்.
- 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியம் ஆக்கும் இலக்கை கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளையும் அவர் வழங்கினார்
- இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளைப் பிரதமர் மோடி அளித்தார்.
- 2070க்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியம் ஆக்கும்.
- non-fossil energy திறனை வரும் 2030க்குள் 500 ஜிகாவாட்டாக இந்தியா உயர்த்தும்.
- 2030-க்குள் இந்தியா தனது பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்கும்
- 2030-க்குள் இந்தியா தனது மின் தேவையில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும்
- 2030-க்குள் மொத்த கார்பன் உமிழ்வுகளிலிருந்து 1 பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை இந்தியா குறைக்கும்
வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து
- 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் இனத்தினருக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக பரமக்குடியைச் சோந்த பாலமுரளி மனு தாக்கல் செய்தார்.
- இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்டன. மனுதாரா்கள் தரப்பில், ஜாதி ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படாமல், வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- இது, பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற ஜாதி மாணவா்களைக் கடுமையாக பாதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தரப்பு வாதங்கள் நிறைவுற்று விசாரணை தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
- இந்நிலையில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு தீர்பளித்துள்ளது.
5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
- கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தினர் மார்ச் 31, 2021 வரை 5 சவரனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராம் வரை) பொது நகைக்கடன் பெற்று அதில் சில கடன்தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவைத் தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள ரூ.6 ஆயிரம் கோடி (தோராயமாக) நகைக்கடன்களை வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது.
- இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கும்படி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.3 லட்சம் கோடியாக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி,அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,30,127 கோடியாகும், இதில் சிஜிஎஸ்டி ரூ.23,861 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.30,421 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.67,361 கோடி (ரூ. 32,998 கோடி மற்றும் சரக்குகளின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்டது) ரூ.8,484 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 699 கோடி உட்பட) ஆகியவை அடங்கும்.
- டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- இந்திய தேசிய இணையதள நிலையத்தின்(நிக்சி) 10-வது நிலையம் உத்தராகண்டில் இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்த உதவும்.
- உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பட்டியலிட்டு வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு தடுப்பூசியாக ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி வருகின்றன.
- அதன்படி, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தனிமைப்படுத்தாமல் நேரடியாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக, இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.