பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் பொது கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் ராஜீவ் அகர்வால் நியமனம்
- பேஸ்புக் இந்தியாவின் புதிய பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் அகர்வால், பயனாளர்களின் பாதுகாப்பு,தரவு பாதுகாப்பு, தனியுரிமை, இணைய நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கைகளை வரையறுத்து பேஸ்புக் நிறுவனத்தின் மேம்பாட்டு முயற்சிகளை வழிநடத்துவார்
- மேலும் ராஜீவ் அகர்வால், பேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனிடம் அறிக்கை அளிப்பார் என்றும், இந்திய தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் இருப்பார் என்றும் கூறியுள்ளது.
ரோம் நகருடன் தொடர்பு; பாரம்பரியத்தை பறைசாற்றும் கொற்கை அகழாய்வு
- தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணி இந்த மாத இறுதியில் நிறைவு பெற உள்ளது. இந்த அகழாய்வு பணியில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- குறிப்பாக சுடுமண்ணால் செய்யப்பட்ட 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, சங்கறுக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள், வெளிநாடுகளுடன் கடல் சார்ந்த வாணிபத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள், 4 அடி உயரம் கொண்ட இரண்டு அடுக்கு கொள்கலன் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் ரோம் நகரத்துடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக அந்நாட்டில் எண்ணெய் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஜாடியின் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து உலகத்தில் பல்வேறு நாடுகளுடன் கொற்கையில் இருந்து வாணிபத் தொடர்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சைமா விருது 2021
- தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள்.
- 2020, 2021 என இரு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சைமா 2020-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் அசுரன், கைதி படங்களுக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளன. சைமா 2021 விருதுகளில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளன.
- 2020 விருதுகளில் சிறந்த படமாக கைதி தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குநராக வெற்றிமாறனும் சிறந்த நடிகர்களாக கார்த்தி, தனுஷும் சிறந்த நடிகைகளாக நயன்தாராவும் மஞ்சு வாரியரும் தேர்வாகியுள்ளார்கள். சிறந்த இசையமைப்பாளராக இமானும் சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபுவும் தேர்வாகியுள்ளார்கள்.
- 2021 விருதுகளில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர் என ஏழு விருதுகள் சூரரைப் போற்று படத்துக்குக் கிடைத்துள்ளன.