பாராலிம்பிக் - துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனிக்கு தங்கம்
- மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை அவர் சமன் செய்தார்.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம்வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல என 4 பதக்கங்களை வென்றுள்ளன.
'பிட் இந்தியா ஆப்' சேவை துவக்கம்
- புதுடில்லி--'பிட் இந்தியா' இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் அதற்கான பிரத்யேக 'மொபைல் ஆப்' சேவையை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் துவக்கி வைத்தார்.
- இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மேஜர் தியான்சந்த் பிறந்த நாளான ஆக., 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
பாராலிம்பிக் - வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ்க்கு வெள்ளி
- வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப்போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2ஆவது இடம் பிடித்து யோகேஷ் வெள்ளி வென்றார்.
- டெல்லியைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ் வட்டு எறிதலில் வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
வட்டு எறிதலில் வெண்கலம் வினோத் குமார் சாதனை
- பாரா ஒலிம்பிக் ஆண்கள் வட்டு எறிதல் எப்-52 பிரிவில் இந்திய வீரர் வினோத் குமார் (41 வயது), புதிய ஆசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
- எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் 19.91 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3வது இடம் பிடித்தார். இந்த போட்டியில் போலந்து வீரர் கோசெவிக்ஸ் (20.02 மீ.) தங்கப் பதக்கமும், குரோஷியாவின் வெளிமிர் சாண்டோர் (19.98 மீ.) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
ரயில் மதாத் செயலி அறிமுகம்
- ரயில் பயணிகளின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க "ரயில் மதாத்” (Rail MADAD : Mobile Application for Desired Assistance During travel) என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.