தமிழ் வழியில் படித்தோருக்கான குரூப்-1 இட ஒதுக்கீடு சான்றிதழ் பதிவேற்ற டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு / UPLOAD TAMIL MEDIUM CERTIFICATE FOR GROUP 1 EXAM - TNPSC ANNOUNCEMENT
TNPSCSHOUTERSAugust 01, 2021
0
'கடந்த ஜனவரி.,3 ம் தேதி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களில் தமிழ் வழியில் பயின்றதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரும் 5ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ள அதற்கான படிவத்தில், 16 ம் தேதி முதல் செப்., 16 ம் தேதி வரையில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்
பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பு சான்றிதழ்
மேல்நிலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு சான்றிதழ்
பட்டப் படிப்பு சான்றிதழ்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு முதல் நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
இவை தவிர தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த தகவல்களை 5 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.