Type Here to Get Search Results !

TNPSC 9th JULY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

முதல்வர் நிவாரண நிதிக்கு இணையதளத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 • தமிழகத்தில் கடந்த மே 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. அப்போது கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி முதல்வர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நேரிலும் பல்வேறு வழிகளிலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அதிகளவில் நிதி சேர்ந்து வருகிறது.
 • இந்நிலையில், நிதி வருகை, செலவிடப்படுவது குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய,https://cmprf.tn.gov.in/ என்ற தனியான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்த இணையதளத்தின் பயன்பாட்டை நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

21 எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு

 • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில் தேர்வான 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
 • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு பணிக் குழுவின் தனி நிதி, 50 லட்சம் ரூபாய் உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் சிறந்த 10 படைப்புகள்.
 • அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பு என மொத்தம் 11 படைப்புகள், ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றன. அவற்றுக்கு பரிசுததொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
 • கடந்த 2018 - 19க்கான சிறந்த படைப்புகளாக, அறிவரசன் எழுதிய கபிலரின் செயற்கையற்ற வாழ்வும், மொழி நடையும்; வசந்தாவின் திருக்குறளில் பவுத்தம்; பிரேம்குமாரின் மாமன்னர் அசோகர்; அன்னையப்பனின் தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரவுபதி அம்மன்; சுகிர்தராஜா எழுதிய வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி; கலாராணியின் பவுத்த தியானம்; மோனிகாவின் பேரறிஞர் அம்பேத்கர்; ரமேஷின் சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள்; பரமேஸ்வரியின் உளவியல் கட்டுரை; அன்பாதவனின் இப்போதும் ஒடிக் கொண்டிருக்கும் குதிரை; இளங்கோவனின் தமிழ் பண்பாட்டுப் பதிவுகள் என, 11 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
 • கடந்த 2019 - 20ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளாக, கருப்பையனின் தடையும் ஒரு நாள் உடையும்; சண்முகசுந்தரத்தின் குப்பத்து ராஜாக்கள்; மோகனின் உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்; பாரதிராஜாவின் வெற்றி முழக்கங்கள்; காளிமுத்துவின் தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்; அன்டனுார் சுராவின் எத்திசை செலினும்; மீனாட்சி சுந்தரத்தின் படைப்பு வெளியில் பதியும் போர்வைகள்; கமலம் சின்னசாமியின் நலம் தரும் நாட்டு வைத்தியம்; ராஜாவின் கட்டுரைத் தொகுப்பு; ஆடலரசுவின் இசை மொழியும், ஆதி இனமும் என, 10 நுால்கள் தேர்வு செய்யப்பட்டன.

16 வயது கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரின் 2 சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தல்

 • பதினாறு வயதான இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் நிஹல் சரின் வெறும் ஒன்பது நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 
 • செர்பியாவின் பெல்கிறேட் நகரில் நடைபெற்ற செர்பியா ஓபனில் கிராண்ட் மாஸ்டர் Vladimir Fedoseev ஒன்பது சுற்றுகள் விளையாடி 7.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
 • அதன் மூலம் சர்வதேச அளவிலான ரேங்கிங்கில் முதல் நூறு இடங்களை பிடித்துள்ளார். தற்போது அவர் 88வது இடத்தில் உள்ளார். முன்னதாக சில்வர் லேக் ஓபனிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
சாலைகள் வளர்ச்சி குறித்த 16-வது வருடாந்திர மாநாடு
 • இந்தியாவில் சாலைகள் வளர்ச்சி குறித்த 16-வது வருடாந்திர மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை உபகரணங்களுக்கு அழுத்த மூட்டப்பட்ட இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் எத்தனால் ஆகியவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். 
 • இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க அமைச்சர் வலியுறுத்தினார்.
 • 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
 • சரக்கு போக்குவரத்தில் 70 சதவீதமும் பயணிகள் போக்குவரத்தில் 90 சதவீதமும் சாலைகளில் நடைபெறுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு என்றும் அவர் கூறினார்.
 • அடுத்த ஐந்து வருடங்களில் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறிய கட்கரி, ரூபாய் 11 லட்சம் கோடியை தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த ஆண்டு அரசு முதலீடு செய்து வருவதாகவும், உள்கட்டமைப்பு மூலதன செலவை 34 சதவீதமாக அதிகரித்து ரூ 5.54 லட்சம் கோடியாக அரசு உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
 • உள்கட்டமைப்பு முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் கரோனா பெருந்தொற்றின் போது வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் என்று 60 ஆயிரம் கிலோமீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது தனது லட்சியம் என்றும் அமைச்சர் கூறினார்.

2.7 X 2.7 இன்ச் தாளில் டாவின்சி வரைந்த 500 வருட பழமையான ஓவியம் ரூ.90 கோடிக்கு ஏலம்

 • உலக புகழ்பெற்ற ஓவியர் என்றால் அது லியனார்டோ டாவின்சி தான். இவர் பிரசித்தி பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்தவர். இந்நிலையில் டாவின்சி 2.7 X 2.7 இன்ச் அளவு கொண்ட குறிப்புகளை எழுதி வைக்கும் தாளில் (Post-it Note) வரைந்த 500 வருட பழமை மிக்க ஓவியம், 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய்.
 • லண்டன் நகரில் உள்ள Christie's ஏல நிறுவனம் இந்த ஓவியத்தை ஏலம் விட்டது. இந்த ஓவியத்தில் ஒரு கரடியின் தலையை வரைந்துள்ளார் டாவின்சி. 
 • சில்வர் பாயிண்ட் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி டாவின்சி இதை வரைந்துள்ளார். அவரது ஓவிய ஆசிரியர் ஆண்ட்ரே, டாவின்சிக்கு இந்த கலையை கற்றுக் கொடுத்துள்ளார். கடைசியாக டாவின்சியின் ஓவியம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏலம் விடப்பட்டுள்ளது.
இத்தாலிய கடற்படைக் கப்பலுடன் ஐஎன்எஸ் தபார் பயிற்சி
 • மத்திய தரைக்கடலில் நடைபெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் தபார் (INS Tabar) கப்பல், இத்தாலியின் "நேபிள்ஸ் துறைமுகத்துக்கு” இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான சென்றது. 
 • ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியா”வுடன் (ITS Antonio Marceglia) ‘கடல்சார் கூட்டணி” பயிற்சியை (maritime partnership exercise) ஜூலை 04 மற்றும் 05-ஆம் தேதிகளில் "டிர்ஹெனியன்”கடலில்(TyrrhenianSea) என்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. 
மினி உலகக் கோப்பை கால்பந்து 
 • உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க நீலகிரி மாவட்டத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். 
 • 23 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான மினி கால்பந்து 2021 உலகக் கோப்பை போட்டி (U-23 Women's Mini World Cup Football Tournament) உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel