டெல்டாவைவிட அபாயகரமான லாம்டா கரோனா
- பிரிட்டனில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வகைக் கரோனாவைவிட, புதிதாகப் பரவி வரும் லாம்டா வகை கரோனா அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
- அந்தத் தீநுண்மி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 4 வாரங்களில் மட்டும் லாம்டா வகை கரோனா 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.
- தென் அமெரிக்க நாடான பெருவில் அந்த வகை கரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. அந்த நாட்டில்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே மிக அதிகம்.
- பெருவில் புதிதாகக் கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 82 சதவீதம் பேரிடம் லாம்டா வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- அந்த வகை கரோனாவின் ஆதிக்கம் பெருவில் அதிகமாக இருந்தாலும், சிலியில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 31 சதவீத புதிய கரோனா நோயாளிகளிடம் லாம்டா வகை கரோனா கண்டறியப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற புதிய அமைச்சரவைக் கூட்டம்
- மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், கேபினட் அமைச்சர்களுடனான கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதையடுத்து, கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர் என 77 அமைச்சர்கள் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
- தென்னை விவசாயத்தை அதிகரிக்கவும், தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- அதன்படி, தேங்காய் வாரியத்திற்கு விவசாய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் எனவும், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
- கரோனா வைரஸ் பரவலை தடுக்க வசதி யாக அவசரகால நிதியாக ரூ.23,123 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 736 மாவட்டங்களில் 20 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
- மொத்த ஒதுக்கீடான ரூ.23 ஆயிரம் கோடியில் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலவிடும். ரூ.8 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நிதி அடுத்த 9 மாதங்களில் செலவிடப்படும்.
வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 4-ம் தவணை - தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வழங்கியது
- கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வரிவருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வருவாயைக் காட்டிலும் செலவினங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்கநிதி வழங்க மத்திய அரசுக்கு 15வது நிதிக் குழு பரிந்துரைத்தது.
- அதாவது 2021-22 நிதி ஆண்டில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான வருவாய் பகிர்வுக்குப் பின்னும் வருவாய் பற்றாக்குறைக்கு உள்ளாகும் 17 மாநிலங்களுக்கு மானியமாக ரூ.1,18,452 கோடி வழங்க 15வது நிதிக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
- அரசியல் சாசன சட்டத்தின் 275வது பிரிவின் கீழ், வருவாய்பற்றாக்குறைக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கு இந்த மானியத்தை 12 மாத தவணைகளாக வழங்க நிதிக் குழு பரிந்துரைத்தது.
- தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை மானியம் பெற தகுதியுள்ள மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- இந்த மாநிலங்களின் வருவாய் மதிப்பீடுக்கும் அவற்றின் செலவுக்கும் இடையிலான இடைவெளிஅடிப்படையில் மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானிய அளவை நிதிக் குழு முடிவு செய்து நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.
- நிதிக்குழுவின் இந்தப் பரிந்துரையின்படி 4-வது தவணையாக இந்த மாதம் 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடி நிதியைப் பகிர்ந்துவழங்கியுள்ளது நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை. இதுவரை வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக மொத்த ஒதுக்கீட்டில் 33.33 சதவீதம் அதாவது ரூ.39,484 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிகச் சிறிய பசு
- டாக்காவுக்கு 30 கி.மீ. தொலைவிலுள்ள சாரிகிராம் என்ற ஊரிலுள்ள ராணி என்ற பெயரைக் கொண்ட பசுவைக் காண கரோனா கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானவா்கள் வந்தவண்ணம் உள்ளனா்.
- அந்த ஊரிலுள்ள பண்ணையொன்றில் வளா்க்கப்படும் அந்தப் பசு, வெரும் 66 செ.மி. நீளம் கொண்டதாகவும் உள்ளது. 26 மாத வயதுடைய அந்தப் பசுதான் உலகின் மிகச் சிறிய பசு என்று பண்ணை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
- பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் 06 ஜூலை 1885-ஆம் ஆண்டு விலங்குகளின் மூலம் பரவும் நோயான ரேபிஸ் நோய்க்கு (rabies, a zoonotic disease) முதன்முதலில் தடுப்பூசி கண்டுபிடித்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஜூலை 06-ந்தேதி உலக விலங்கின நோய்கள் தடுப்பு தினம் (World Zoonoses Day) அனுசரிக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் கருத்துரு (Theme) : 'Let's break the chain of Zoonotic transmission'.