புதிய கூட்டுறவு அமைச்சகம்
- மத்திய அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகமானது தனி நிர்வாக சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும்.
- மேலும், மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தொழில் புரிவதற்கான தடைகளை களைந்தெறியவும் இந்த அமைச்சகம் செயல்படும். மத்திய நிதியமைச்சகம் வெளியிடும் அறிவிப்புகளை நிறைவேற்றுவதற்கும் இந்த அமைச்சகம் உறுதியுடன் செயல்படும் என சொல்லப்படுகிறது.
5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை முதலமைச்சர் அறிவிப்பு
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. இதில் தடகள பிரிவுக்கான போட்டிகள் ஜுலை 31 தேதியில் இருந்து தொடங்குகின்றன. இந்தநிலையில் இந்திய தடகள கூட்டமைப்பு, 26 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- அதில், 5 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவகள் ஆவர். இந்தநிலையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள 5 தடகள வீரர்களுக்கும் தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது.
- அந்த வகையில், ஜப்பான் டோக்கியோவில் 23-7-2021 முதல் 8-08-2021 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்புப் பிரிவில் சுபா வெங்கடேசன், தனலெட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா 5 லட்ச ரூபாய் வீதம் 25 லட்ச ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.92,849 கோடி
- ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வசூல் ரூ.92,849 கோடியாக உள்ளது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.16,424 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.20,397 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.49,079 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.25,762 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ 6,949 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.809 கோடி உட்பட) ஆகும்.
- கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் இந்தாண்டு ஜூன் மாதம் 2% அதிகமாக உள்ளது. தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகியுள்ளது.
மத்திய அரசுப் பணிகளுக்கு 2022 முதல் பொதுத் தகுதித் தோவு
- மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தோவு செய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தோவு நடத்தப்படும் என்று பணியாளா், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியத் துறை இணணை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
- மத்திய அரசுப் பணிக்கு இளைஞா்களைத் தோவு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்கான பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீா்திருத்தமாக பொதுத் தகுதித் தோவு அமைந்துள்ளது.
- இளைஞா்கள் மீது பிரதமா் நரேந்திர மோடி வைத்திருக்கும் அக்கறையின் அடையாளமாகவும் நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அவரது முனைப்பின் பிரதிபலிப்பாகவும் இந்த மிகப் பெரிய சீா்திருத்தம் அமைந்துள்ளது.
- பொதுத் தகுதித் தோவை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்சோப்பு முகமை அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளா் தோவாணையம், ரயில்வே தோவு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளா் தோவு நிறுவனம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆள்சோப்பு தோவுகளுக்கு பதிலாக பொது தகுதி தோவை தேசிய ஆள்சோப்பு முகமை நடத்தும்.
- பிரிவு பி மற்றும் சி பணியிடங்களுக்கு (தொழில் நுட்பம் சாராத) தகுதியானவா்களை தேசிய ஆள்சோப்பு முகமைப் பொதுத் தகுதி தோவின் மூலம் தோந்தெடுக்கும். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தோவு மையமாவது இருக்கும். இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் வாழும் தோவா்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு கோடி சந்தாதாரர்களை ஈர்த்த வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்
- இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு தொடங்கி, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பலரும் சமையல் தொடர்பான யூடியூப் சேனல்தான் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில் உள்ள சேனல்தான் வில்லேஜ் குக்கிங் சேனல்.
- புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்களம் ஊராட்சி சின்னவீரமங்களம் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் சேர்ந்து கிராமத்து முறையிலான சமையல் செய்து, அதை வில்லேஜ் குக்கிங் (Village cooking channel) என்ற யூடியூப் சேனலில் (Youtube) பதிவிட்டு வருகின்றனர்.
- இந்நிலையில் தற்போது இந்த சமையல்தளத்துக்கு ஒரு கோடி பேர் சந்தாதாரர்கள் (Subscriber) சேர்ந்துள்ளனர். இதற்காக யூடியூப் நிறுவனம் இவர்களுக்கு டைமண்ட் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
- இந்த சேனலை சின்ன வீரமங்கலம் ஏப்ரல் 2018 இல் தொடங்கினார், மேலும் அவரது பேரக்குழந்தைகளான முருகேசன், தமிழ்செல்வன், அய்யனார், முத்துமணிக்கம் மற்றும் சுப்பிரமணியன் மற்றும் பெரியதம்பியும் இடம்பெற்றுள்ளனர்.
உலக வங்கி நிதி உதவியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,702 கோடியில் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- உலக வங்கி நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைத்தல், அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட ரூ.1,702 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசுக் கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும்.
45 நாளில் 2 அடுக்கு மருத்துவமனை - 'டீமேஜ் பில்டர்ஸ்' பெற்றது 'உலக சாதனை' அங்கீகாரம்
- ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடம் கட்டி, அதை தமிழக அரசுக்கு வழங்க, 'ரோட்டரி ஹெல்த்கேர் டிரஸ்ட்' முடிவு செய்து, கட்டுமான பணியை, தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் அங்கமான 'டீமேஜ் பில்டர்ஸ்' நிறுவனத்தினரிடம் வழங்கினர்.
- 'ப்ரீகாஸ்ட் கான்கிரீட்' தொழில்நுட்பத்தில், 69,200 சதுர அடி பரப்பளவில், 401 படுக்கை கொண்ட இரண்டு அடுக்கு மருத்துவமனை கட்டடத்தை, வெறும், 45 நாட்களில், இந்நிறுவனத்தினர் கட்டி முடித்தனர்.
- கடந்த மே மாதம், 18ம் தேதி துவங்கிய கட்டுமானப்பணி, ஜூலை முதல் தேதி நிறைவடைந்தது. இப்பணியை உலக சாதனையாக அங்கீகரித்து, எலைட் வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்காரட்ஸ் ஆகிய சாதனை நிறுவனங்கள் சான்றளித்தன.
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்
- கர்நாடகா, மிசோரம், மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், கோவா, திரிபுரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்தும், ஆளுநர்களை மாற்றியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
- இதன்டி, ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சரான தாவர்சந்த் கெலாட், கர்நாடகா மாநில ஆளுநரான நியமிக்கப்பட்டு உள்ளார். மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக அரிபாபு கம்பாம்பதி, மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல், இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- இதேபோல், மிசோரம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநிலத்துக்கும், அரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா மாநில ஆளுநராகவும், திரிபுரா ஆளுநர் ரமேஷ் பையாஸ் ஜார்கண்ட் ஆளுநராகவும், இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்ணாரு தட்டாட்ரயா அரியானா ஆளுநராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
நவ. 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா
- வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
- ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52வது பதிப்பு, 51வது பதிப்பின் வெற்றியின் கலப்பு முறையிலான விழா நடைபெறுகிறது.
- இந்த விழா ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால், இந்திய சர்வதேச திரைப்பட விழா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் இரு நிறுவனங்களுக்கு இயக்குனராகிறார் முகேஷ் அம்பானியின் இளைய மகன்
- ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என இரண்டு நிறுவனங்களுக்கு அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் இயக்குனராகவும் ஆனந்த் இயங்கி வருகிறார்.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நியூ எனர்ஜி தொழிலில் சுமார் 75000 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதனை முகேஷ் அம்பானி உறுதியும் செய்துள்ளார். அது சார்ந்த உற்பத்தி பணிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுக்க உள்ளது.
டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் நிறுவனம் தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு
- எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.