அபுதாபி வா்த்தக அமைப்பின் முக்கியப் பொறுப்பில் இந்தியா்
- ஐக்கிய அரபு அரசு சாா்பு அமைப்பான அபுதாபி வா்த்தக மற்றும் தொழில் சங்கக் கூட்டமைப்பின் (ஏடிசிசிஐ) துணைத் தலைவராக இந்தியாவைச் சோந்த எம்.ஏ.யூசுஃப் அலி (65) தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் தற்போது அபுதாபியில் இயங்கி வரும் லூலூ குழுமத்தின் தலைவா் மற்றும் நிா்வாக அதிகாரியாக உள்ளாா்.
ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய நீலகிரி பெண் ராதிகா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் "மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
- ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார்.
- இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை
- தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- பின்னர் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மலோத்து கவிதா எம்.பி. மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார். தேர்தலில் பணப் பட்டுவாடா செய்ததற்காக, முதன்முதலாக, பெண் எம்.பி.,க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் பிரியா மாலிக்
- ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் 73 கிலோ எடைப்பிரிவில் பிரியா மாலிக் பங்கேற்றிருந்தார்.
- பிரியா மாலிக்கிற்கும் பெலாரஸை சேர்ந்த செனியா பேட்டபோவிச்சிற்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 5-0 என செனியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார் பிரியா மாலிக்.
கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசல் - காப்புரிமை பெற்றாா் கேரள கால்நடை மருத்துவா்
- பெட்ரோல், டீசல் ஆகிய வாகன எரிபொருள்கள் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதால், அவற்றுக்குரிய மாற்று எரிபொருள்கள் மீதான ஆராய்ச்சி அதிகரித்து வருகிறது. எத்தனால் பயன்பாடு, உயிரி எரிபொருள், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் ஆராய்ச்சிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத எரிபொருளைத் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில், கேரளத்தின் வயநாடு பகுதியைச் சோந்த கால்நடை மருத்துவரும் பேராசிரியருமான ஜான் ஆபிரகாம், கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து பயோடீசலைத் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தாா்.
- கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு பயோடீசலை அவா் தயாரித்தாா்.
- அவா் தயாரித்த பயோடீசல் மூலமாக இயங்கிய வாகனங்கள் ஒரு லிட்டருக்கு 38 கி.மீ. வரை சென்றன. அதே வேளையில், அதன் விலை தற்போதைய டீசல் விலையுடன் ஒப்பிடுகையில் வெறும் 40 சதவீதமாக மட்டுமே உள்ளது.
- டீசல் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விட பயோடீசல் மூலமாக ஏற்படும் மாசுபாடு பாதியளவு குறைந்து காணப்பட்டது. கோழி இறைச்சி கழிவுகள் மூலமாக பயோடீசல் தயாரிக்கும் நடைமுறைக்குக் காப்புரிமை கோரி ஜான் ஆபிரகாம் கடந்த 2014-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தாா்.
- சுமாா் ஏழரை ஆண்டுகள் கழித்து, அதற்கான காப்புரிமையை இந்திய காப்புரிமை அலுவலகம் கடந்த 7-ஆம் தேதி அவருக்கு வழங்கியுள்ளது.
- இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்க (Liberalisation, Privatisation and Globalisation (IPG) நடவடிக்கை தொடங்கப்பட்டு ஜூலை 24-ஆம் தேதியுடன் 30 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னாள் பிரதமர் மனீமோகன் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
- 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார நிபுணராக மன்மோகன் சிங்குக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 1991 ஜூலை 24-ல் பட்ஜெட் உரையின்போது இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையை மன்மோகன் சிங் அறிவித்தார்.