உலக திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் உரை
- `உலக திறன் தின'-த்தை முன்னிட்டு அவர் கூறியதாவது: தற்போது தொழில்நுட்ப உலகில் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.
- இதற்கேற்ப திறன்மிக்கவர்கள், மறுதிறன் பெற்றவர்கள், உயர்திறன் பெற்றவர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துக் கொண்ட வருகிறது. இவர்களுக்கு மிகஅதிக அளவிலான தேவை உள்ளது. வளர்ந்து வரும் புதிய தலைமுறையினருக்கு திறன் மிகவும் அவசியம்.
- இந்தியா தற்போது சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களும் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையிலான சுயசார்பு இந்தியா திட்டம்இனி வரும் காலங்களில் பல திறன்மிக்கவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும்.
- கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தற்போது உரிய பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது.
- வேலை செய்து சம்பாதிக்கத்தொடங்கியவுடன் கற்றுக்கொள்வதை நிறுத்தக் கூடாது. தங்கள் தொழில் சார்ந்த திறனை வளர்த்துக்கொள்பவர்கள்தான் இன்று முன்னேற்றமடைகின்றனர். உலகளவில் இதுதான் நடைமுறையாக உள்ளது.
- திறன் பெற்றவர்கள் தங்களது திறனை மேலும் வளர்த்து மறுதிறன் பெற்றவர்களாக உயர்த்திக்கொள்ள வேண்டும். மறுதிறன் பெற்றவர்கள் அதை உயர் திறனாக உயர்த்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திறமை மிக்கஇளைஞர்களை உலகிற்கு அளிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. `பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- திறன் பெற்றவர்கள்தான் கரோனாவுக்கு எதிரான பணிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சுய சார்பு பொருளாதார கட்டமைப்புக்கு அடித்தளமிடும் சுயசார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்து இளைஞர்கள் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.
சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய மின் நிலையம்
- தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- இதை 'செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்' என்ற நிறுவனம் அமைத்துள்ளது. 111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்) கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன் இருக்கும். பேனல் பராமரிப்பில் 'ட்ரோன்' ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
- இத்திட்டத்தால் ஆண்டுக்கு 32 கிலோ டன், கார்பன் வெளியீடு அளவு குறையும். இது சாலையில் ஓடும் 7,000 கார்கள் வெளியிடும் கார்பனுக்கு சமம்.கட்டடம் மேல் பரப்பில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்சார திட்டத்தில், மற்ற கட்டடத்தால் சில நேரம் சூரிய ஒளி மறைகிறது.
- ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும் திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை. 5 - 15 சதவீதம் கூடுதல் திறன் கிடைக்கிறது. இத்திட்டத்தால் வன உயிரினம், நீரின் தரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு ரூ.75,000 கோடி
- கடந்த மே மாதம் நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.
- அதன்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 2021-22ம் நிதியாண்டுக்கான தொகையாக ரூ.75,000 கோடியை நேற்று ஒரே தவணையாக வழங்கியது. இதில் மீதமுள்ள தொகை, 2021-22ம் ஆண்டு 2வது பாதியில் வழங்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இதில், தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக ரூபாய் 3618.50 கோடியை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்திற்கு ரூ. 8,542.17 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 6501.11 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சர்வதேச ஒத்துழைப்பு மற்றம் மாநாட்டு மையம் திறந்து வைத்தார்
- பிரதமர் மோடி, பனாரஸ் ஹிந்து பல்கலையில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவு, கோடவுலியாவில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்தம், கங்கை நதியில் நவீன படகுகள் மூலம் சுற்றி பார்க்கும் திட்டம், வாரணாசி- காசிப்பூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள், கிராமப்புற குடிநீர் திட்டங்கள், வீட்டு தோட்ட வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.
- மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழிலநுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றம் மாநாட்டு மையம் உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்தார்.
- சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை மிக நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அப்போது செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், வெள்ளி, செவ்வாய் கோள்களுக்கு அருகே சந்திரன் தென்படும்.
- பூடானில் அந்நாட்டின் நிதியமைச்சா் லியோன்போ நாம்கே ஷெரிங், இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் இணைந்து யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு) மூலம் செயல்படும் பீம் பணப் பரிவா்த்தனை செயலியை அறிமுகப்படுத்தினா்.
- அதனைத் தொடா்ந்து நிா்மலா சீதாராமன் பேசுகையில், ''கரோனா தொற்றால் பாதிப்புகள் நோந்தபோது டிஜிட்டல் பரிவா்த்தனைகளுக்கு பீம்-யுபிஐ சேவை பெரிதும் பயன்பட்டது.
- கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான யுபிஐ க்யூஆா் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-21-ஆம் ஆண்டு பீம்-யுபிஐ மூலம் ரூ.41 லட்சம் கோடி மதிப்பிலான 2.20 கோடி பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தாா்.